ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு Jeffersonville, Indiana, USA 63-0317E 1மாலை வணக்கம், நண்பர்களே. இன்றிரவு ஆராதனையில் பங்கு கொள்ள மறுபடியுமாக தேவனுடைய வீட்டிற்குள் வருவதும், காலையிலிருந்து மன்னாவைப் புசித்து வாழ்ந்து அவருடைய மகத்தான பிரசன்னத்தின் மூலமாய் நம் ஆத்துமாக்கள் அபரிமிதமாய் ஆசீர்வதிக்கப்படுவதும் ஓர் சிறந்த சிலாக்கியமாகும். இப்பொழுது, இன்றிரவு 'ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு' என்னும் பொருளை முதலாவதாக ஆராய்வோம். இன்று பகல் வேளையில், நான் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். கர்த்தருக்குச் சித்தமானால், வரப்போகும் கோடைக் காலத்தில், அதற்குள் அவர் என்னைத் தம் வீட்டிற்கு அழைத்துக் கொள்ளாவிட்டால், அல்லது நான் அயல் நாடுகளுக்குச் செல்லாமலிருந்தால்,மறுபடியுமாக ஏழு கடைசி எக்காளத்தைக் குறித்துப் பேச விரும்புகிறேன். பாருங்கள், இவையெல்லாம் ஒன்றோடொன்று இணைகின்றன. அதன் பிறகு, 'ஏழு கடைசி வாதைகள்' உண்டு. இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதை பிரசங்கத்தில் நாம் காணலாம். 2ஆகவே, இன்றிரவு, நாம் ஒருவித அமைதியுடன் இருக்கும் இந்நேரத்திலே.... இன்றிரவு என் பிரசங்கம் சற்று நீண்டதாக இருக்கலாம். நான் இங்கு வந்தவுடன்... பீனிக்ஸ் (Phoenix) பட்டிணத்தில் நான் எத்தனை பிரசங்கங்கள் நிகழ்த்தினபோதிலும், ஒரு முறையாவது என் தொண்டை கரகரப்பாகவில்லை . பாருங்கள். அது சரி. ஓ, என்னே ! நான் அங்கு கடினமாய் பிரசங்கித்தேன். இருபத்தேழு ஆராதனைகள் அங்கு தொடர்ச்சியாக நடத்தினேன் என்று நினைக்கிறேன். என்றாலும் என் தொண்டை கரகரப்பாகவேயில்லை. இங்குள்ள மோசமான சீதோஷ்ண நிலைதான் (தொண்டை கரகரப்பாவதற்கு) காரணம். நீங்கள் பாருங்கள். இது ஒரு பள்ளத்தாக்கு. இங்குள்ள சீதோஷ்ண நிலை ஆரோக்கியமானது தான். நான் என்ன கூறுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால் ஒரு போதகர் இங்கு தன் பிரசங்கத்தை நிகழ்த்தும்போது, ஆரம்பத்திலேயே தொண்டை கரகரப்பாகி விடுகிறது. ஆகையால்தான் இது மோசம் என்கிறேன். என் தொண்டையில் என்ன கோளாறு என்று பார்க்கும்படியாக வைத்திய நண்பர் ஒருவர், ஒருமுறை என் தொண்டையைப் பரி சோதித்து, 'தொண்டையில் எவ்வித கோளாறுமில்லை; அதிகம் பிரசங்கித் ததினால் குரல்வளை சற்று கடினப்பட்டிருக்கிறது' என்றார். நல்லது, நான்- நான்-, நான் அதை விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என் தொண்டை பிரசங்கிப்பதற்கு உபயோகமாயிருந்தால் அதுவே போதுமென்று நான் ஆறுதல் கொண்டேன். நீங்கள் பாருங்கள். தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க இது போதிய அளவுக்கு நன்றாயிருக்கிறது. இப்பொழுது, பவுல் அநேக அடிகளைப் பெற்று தன் சரீரத்தில் இயேசுகிறிஸ்துவின் அச்சடையாளங்களைப் பெற்றிருந்தது போல், நம் மால் அடிகளைத் தாங்கி அவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தவறுகளுக்கு எதிராக நாம் பிரசங்கித்து, அதற்கெதிராக நமது சத்தத்தை எழுப்புகையில் நமது தொண்டையில், நமக்கு வருகின்ற ஒரு அச்சடையாளத்தை நம்மால் தாங்கிக்கொள்ள முடியும். ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் அடிக்கப்பட வேண்டிய அவசியம் இதுவரை நமக்கு உண்டாயிருக்கவில்லை என்பதற்காக நாம் தேவனே ஸ்தோத் தரிப்போம். ஆகவே நாம்... 3உங்களில் எத்தனை பேர், 'ஐயன்மீர், இதுவா சமயம்?' என்னும் என் செய்தியை கேட்டிருக்கிறீர்கள், அல்லது புத்தகத்தில் வாசித்திருக் கிறீர்கள்? 'ஐயன்மீர், இதுவா சமயம்?' அது என்னை சற்று அலட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இதுவரை கேட்காமலிருந்தால் எப்படி யாவது நீங்கள் அதைக் கேட்க வேண்டும் என்பதே என் விருப்பமாகும். அது ஒருவிதத்தில் என்னை அலட்டிக் கொண்டிருந்தது. ஆராதனை தொடங்கும் முன்பு இதை கூற விரும்புகிறேன். ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பு என் மன அமைதி குலைந்து போனது. அது என்ன என்று அறியாததினால் என்னால் ஆராதனைகளும்கூட நடத்த முடியவில்லை. மோசமான ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகிறது எனும் எண்ணம் மனதில் குடிக் கொண்டது. அது என்னவென்று எனக்குப் புரியவில்லை . ஆகவே நான்.... ஆகவே, விடியற்காலையில் நான் எழுந்து சபினோ கான்யானுக்குச் (Sabino Canyon) சென்றேன். அது என் வீட்டிலிருந்து முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் மோட்டார் பிரயாணம் செய்யும் தொலைவில் உள்ளது. மலையின்மேல் செல்ல முப்பது மைல் நீளமுள்ள ரஸ்தா அமைக் கப்பட்டுள்ளது. அது ஒரு விசித்திரமான ஸ்தலமாகும். நான் புறப்படும் ஸ்தலத்தில் உஷ்ணம் 80 அல்லது 90 டிகிரிகள் இருக்கும். ஆனால் நான் முப்பது நிமிடம் பிரயாணம் செய்து அந்த மலையின் உச்சியை அடையும்போது அங்கு 8 அடி ஆழத்திற்கு பனி உறைந்திருக்கும். நீங்கள் பாருங்கள். சமீபத்தில் பீனிக்ஸ் பட்டிணத்தில் உஷ்ணம் 28 டிகிரிகள் இருந்தது. 4நீச்சல் குளத்தை அதன் காரணமாக உஷ்ணப்படுத்த வேண்டியிருந்தது. அங்கிருந்து நான் நாற்பது நிமிடங்கள் மோட்டார் பிரயாணம் செய்து ப்ளாக் ஸ்டாஃப் (Flag Staff) என்னும் இடத்தை அடைந்தவுடன் அங்கு உஷ்ணம் பூஜ்யத்திற்குக் கீழ் நாற்பது டிகிரிகள் இருந்தது. பாருங்கள்? அதுதான் பாலைவனத்திற்கும், குளிர்ப் பிரதேசங்களுக்குமுள்ள ஓர் வித்தி யாசம். ஆனால், ஆஸ்துமாவினால் அவதியுறுவோர்க்கு பாலைவன சீதோஷ்ணம் ஆரோக்கியமுள்ளது. 5ஆனால், இப்பொழுது, நான் அந்த மலைக்கு (கான்யானுக்கு) சென்று என்னால் ஏற முடிந்த அளவுக்கு நான் உயரே சென்றேன். அங்கு உட்கார்ந்துக் கொண்டு என் அமைதி குலைதலுக்கு காரணமென்ன என்று ஆண்டவரை வினவினேன். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை . நான் அவ்வாறு ஜெபித்துக் கொண்டிருக்கும் சமயம், ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. நான் உங்களிடம் உண்மையைக் கூற விரும்புகிறேன். ஒருக்கால் நான் அங்கு உறங்கியிருக்கலாம். அல்லது நினைவு இழந்த நிலையில் (trance) நான் இருந்திருக்கக் கூடும். அல்லது ஒரு தரிசனமாக இருந்திருக்கலாம். அது ஒரு தரிசனம்தான் என்று நான் நம்ப வகையுண்டு. நான் என் கைகளை உயர்த்திய வண்ணம், ''கர்த்தாவே, அந்த வெடியின் அர்த்தம் என்ன? ஒரு கூர் நுனி கோபுரத்தின் (Pyramid) அமைப்பில் ஏழு தூதர்கள் இறங்கி வந்து என்னை தூக்கிச் சென்று கிழக்கு திசையை நோக்கி சென்றதன் அர்த்தம் என்ன?'' என்று கேட்டேன். 6நான் நின்றவாறு ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு காரியம் சம்பவித்தது. என் கையில் ஏதோ ஒன்று விழுந்தது. நீங்கள் ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாதிருந்தால், இது மிகவும் விசித்திர மாகத் தென்படும் என்று நான் அறிவேன். ஆனால் என் கையில் ஏதோ ஒன்று விசையுடன் வந்து வீழ்ந்தது. நான் பார்த்தபோது, அது ஒரு பட் டயம். அதன் கைப்பிடி நான் இதுவரை கண்டிராத சிறந்த அழகுள்ள முத்துக்களால் உண்டாக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு (guard), அது எங்கிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். வாள் சண்டையிடும்போது, குத்தப்படாதிருக்க, கைகளை அங்கு வைத்துக் கொள்வது வழக்கம். அது பொன்னினால் செய்யப்பட்டிருந்தது, கத்தியின் பாகம் அதிக நீளமில்லாமல் காணப்பட்டது. ஆனால் அது பளப்பளப்பான வெள்ளியினால் செய்யப்பட்டு மிகக் கூர்மையாயிருந் தது. அதுவரை நான் கண்டிராத அளவுக்கு அழகுள்ளதாக அது விளங் கினது. என் கையில் அது சரியாகப் பொருந்தினது. ஆகவே, நான் அதைப் பிடித்துக்கொண்டு, 'எவ்வளவு அழகாயிருக்கிறது' என்று சொல்லிக் கொண்டேன். நான் அதை உற்று நோக்கினேன். “பட்டயத்தைக் கண்டாலே எனக்கு அதிக பயம் அல்லவா?'' என்று நினைத்தேன். பட்டயம் உபயோகித்த காலங்களில் நான் இல்லாமல் இருந்ததற்கு நான் மகிழ்ச்சியடைந்ததுண்டு. ''இந்த பட்டயத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்?' என்று நான் சிந்தனை பண்ணினேன். 7நான் அதைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும்போது, எங் கிருந்தோ ஒரு சத்தம் தோன்றி, “அது அந்த ராஜாவின் பட்டயம்'' என்றுரைத்தது. அதன்பின்பு அது என்னை விட்டு எடுக்கப்பட்டது. நல்லது, “அது அந்த ராஜாவின் பட்டயம்'' என்பதின் அர்த்தம் என்னவென்று நான் ஆச்சரியப்பட்டேன்; ஆலோசித்தேன். அந்த சத்தம் 'அது ஒரு ராஜாவின் பட்டயம்' என்று சொல்லியிருந்தால், நான் அப்பொழுது புரிந்து கொண்டிருப்பேன் என்று ஆலோசித்தேன். ஆனால் அது 'அந்த ராஜாவின் பட்டயம்' (The King's Sword) என்று கூறினது 'அந்த ராஜா' என்று திண்ணமாக அழைக்கப்படுபவர் ஒருவர்தான் உண்டு. அவர்தான் தேவன். அவருடைய இந்த பட்டயம் இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது. பாருங்கள்? ''நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்...'' பாருங்கள்? ஆகவே நான் நினைத்தேன்... வாள் போரைக் குறித்த எந்த விதிமுறையும் எனக்குத் தெரியாது. ஆனால் சண்டையிடும் இருவரும், ஒருவர் பட்டயத்தின் மேல் மற்றொரு வரின் பட்டயம் அமரும் நிலைக்கு (Lock) வரும்போது, அதன்பிறகு வெற்றி போரிடுபவரின் பலத்தைச் சார்ந்தது. ஏனெனில் பட்டயங்களின் முனைகள் அந்நிலையில் ஒருவரோடொருவரின் இருதயத்தை நோக்கி யிருக்கும். பாருங்கள்? அவர்கள் போரிடும்போது, அந்த இருவாட்களும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும். அதிக பலம் பொருந்தியவன் பட்ட யத்தை எதிரியின் இருதயத்தில் ஊடுருவச் செய்வான். 8அவ்வாறே தேவனுடைய வார்த்தை பட்டயமாயிருப்பினும், அதை எதிரியின் இருதயத்தில் பாயச் செய்ய பலத்த விசுவாசம்' என்னும் பலமுள்ள கை தேவைப்படுகிறது. இப்பொழுது... நான் இவைகளில் ஒன்றையும் அறியாதவனாய். ஆகவே, நான் அவரிடத்தில் பெற்றதை யெல்லாம் உங்களிடம் கூறி விட்டேன். நமது கர்த்தரும், பிதாவி னிடத்திலிருந்து அவர் பெற்ற அனைத்தையும் ஒன்றையும் மறைக்காமல் எடுத்துக் கூறியிருக்கிறார். நானும் அவ்வப்போது எனக்கு வெளிப்படும் போது, உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லுவேன். இப்பொழுது, நீங்கள் உண்மையாகவே ஞானமுள்ளவர்களாய், ஜெபம் செய்துக் கொண்டிருந்தால் வெகு விரைவில் முக்கியமான ஒன்றைப் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நிச்சயம் கொண்டிருக்கிறேன். இப்பொழுது அது கூடிய சீக்கிரத்தில் வெளிப்படும். 9நாமெல்லாரும் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். அது இயேசுகிறிஸ்துவின் வெளிப்படுத்தலின் புத்தகம் என்று அழைக்கப்படுகின்றது. நாளை இரவு 'முதலாவது…. முத்திரை'. அது முதல் நான்கு முத்திரைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குதிரையின் மேல் சவாரி செய்த நால்வரைக் குறித்து திறக்கப்படுவதில் இது முதல் முத்திரையா கும். இந்த நான்கு முத்திரைகளும் பூமியைத் தாக்குகின்றன. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் இந்நாட்களுக்குள் இந்த நான்கு முத்திரை களைக் குறித்து செய்தி கொடுக்கலாம். அதன் பின்னர் ஐந்தாம், ஆறாம், ஏழாம் முத்திரைகள். அவை சற்று நீண்டதாயிருக்கும். அது நீங்கள் இளைப்பாறுவதற்கு சற்று ஏதுவாயிருக்கும். 10ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு கூட்டங்களைத் தொடங்க முடிவு செய்திருக்கிறோம். நான் சரியாக 7.30 மணிக்கு மேடைக்கு வருவேன். அப்பொழுது நள்ளிரவில் நாம் கூட்டத்தை முடித்து வெளி யேறலாம். நான் இன்று காலை கொடுக்கப்பட்ட சமயத்திற்கு மேல் ஒரு மணி நேரம் அதிகமாகப் பிரசங்கித்துவிட்டேன். நான் அவ்விதம் செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை. நான் அது எப்பொழுது என்று... 11ஏனென்றால், முதலாவது (குதிரையின்மேல்) சவாரி செய்பவன் யார் என்று எனக்குத் தெரியாது. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு அல்லது ஏழு முத்திரைகள் என்னவென்றும் நான் அறியேன். இந்த முத்திரைகளின் இரகசியத்தை நான் இதுவரை அறியேன். பாருங்கள்? அதை எனக்கு வெளிப்படுத்த நான் தேவன் பேரில் சார்ந்திருக்கிறேன். தேவன் கிருபையாய் இவ்வாரம் உதவி செய்வார் என்று நம்பி... நீங்கள் அதை ஆழமாய்ப் புரிந்து கொண்டால்... நான் தரிசனத்தில் காண்பவைகளை, தேவன் அனுமதித்தாலன்றி, என்னால் வெளிப்படையாகக் கூற முடியாது. ஒரு வீட்டிற்கு நீங்கள் செல்லுங்கள். அங்கு ஒரு தொப்பியைக் காண்பீர்கள். இந்தக் குழந் தையை அவ்விடத்தில் கிடத்தினாலன்றி அது சுகம் பெறாது' என்றெல் லாம் நான் சொல்வதை நீங்கள் எத்தனையோ முறை கேட்டதுண்டு அல்லவா? நான் அவர்களிடம் அவ்வாறு கூற முடியாது. நானாகவும் அந்தக் குழந்தையைத் தூக்கிச் சென்று அந்த ஸ்தலத்தில் கிடத்த முடியாது. அக்குழந்தை எவ்வாறாயினும் அந்த இடத்தில் சேர்ந்தாக வேண்டும். யாராவது ஒருவர் அதை அங்கு கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுது அக்குழந்தை சுகம் பெறுவதற்கு எல்லாம் சரியாக அமைந் திருக்கும். அந்த சமயத்தில்தான் நான் அக்குழந்தையைக் குறித்து கண்ட தரிசனத்தை வெளிப்படுத்த முடியும். 12ஆகையால், நீங்கள் ஜெப சிந்தையில் இருங்கள். நாம் வேதத் தைப் படிக்கும் முன்பு தலை வணங்கி அவரிடம் பேசுவோம். கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் முற்றிலும் குறையுள்ளவர் களாயிருக்கிறோம். காலத்தின் பயண இலக்கில் ஆத்துமாக்கள் காத்திருக்கும் இந்த மகா பரிசுத்தமான நேரத்தில் உம்மிடம் அனுமதி பெறாமல், இந்த பரிசுத்த வேதபுத்தகத்தைப் படித்து அதன் அர்த்தத்தை விளக்க நாங்கள் முயற்சி செய்ய மாட்டோம். இந்த புத்தகத்தின் அர்த்தத்தை ஒருவர் மாத்திரமே வெளிப்படுத்த முடியும். அவர் இப்பொழுது முன்வந்து உம்முடைய ஊழியக்காரரின் பலவீனமான முயற்சிகளை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். வார்த்தை புறப்பட்டுச் செல்லும்போது அதனை ஆசீர்வதியும். அது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் செல்லட்டும். நீதியின் மேல் பசிதாகம் கொண்டு தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள விரும்பும் ஆவிக்குரிய நிலத்தையுடைய யாவர்மேலும் அது விழுந்து அதன் பலனைக் கொடுக்கட்டும். நாங்கள் கேட்பவைகளை அளியும், ஆண்டவரே. எல்லாத்துதியும் உமக்கே உரியது. ஆத்தும் பசி, தாகம் கொண்டவர்கள் இன்றிரவு தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆகாரமும் தண்ணீரும் பெற்றுக்கொள்ளட்டும். இவையாவையும் வெளிப்பாட்டை அளிக்கவல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நாம் இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தை தியானிக்கப் போகிறோம். இது ஏழு முத்திரைகளல்ல. அது ஏழு சபைகளின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவாகும். இப்பொழுது... ஆறாம் அத்தியாயமும் கூட... 13வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் சபை எடுக்கப் பட்ட பின்னர், நடைபெறவிருக்கும் சில சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. சபையானது வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தில் மேலே செல்லுகிறது. சபையானது வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரம் வரை திரும்பி வருவதில்லை. பாருங்கள்? ஆகையால் சபையானது உபத்திரவ காலத்தில் பங்கு கொள்வதில்லை. இந்தக் கருத்து, நான் இது வரை அறிந்துள்ள எல்லா போதகர்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு முரண்பட்டது. நான் அவர்களுடன் இணங்காமல் இருக்க வேண்டும் என்பதற்கல்ல. நான் உங்கள் சகோதரனாய் இருக்க விரும்புகிறேன். ஆதலால் நான் உண்மையென்று திண்ணமாக அறிந்திருப்பதை உங்களுக்குப் போதித்தாக வேண்டும். சபையானது உபத்திரவ காலத்திற்கு முன் எடுக்கப்படாவிட்டால், மற்றைய சம்பவங்களை அதனுடன் என்னால் பொருத்த இயலவில்லை. நீங்கள் பாருங்கள்? சபை உபத்திரவக் காலத்துக்கு முன்பு செல்கின்றதோ, அல்லது பின்பு செல்கின்றதோ, எவ்வாறாயினும் நான் அதனுடன் செல்ல விரும்புகிறேன். அதுதான் முக்கியமான காரியமாகும். இவைகளை நாம் யூகிக்கிறோம். ஆகவே, இப்படிப்பட்ட காரி யங்களை, கல்வியறிவு இல்லாத நான், பழைய ஏற்பாட்டின் சம்பவங்களை முன்னடையாளமாகக் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். பழைய ஏற்பாட்டில் என்ன நிகழ்ந்தது, அது எப்படி இருக்கின்றது என்பது புதிய ஏற்பாட்டில் நிகழும் சம்பவத்திற்கு நிழலாக அல்லது முன்னடையாளமாக அமைந்துள்ளது என்று நான் காணும்போது, இந்த புதியதைக் குறித்து கருத்து என்ன என்பதை நான் உடையவனாயிருப்பேன். பாருங்கள்? நோவா உபத்திரவம் உண்டாவதற்கு முன்னே பேழைக்குள் சென்றான். பாருங்கள்? அது ஓர் முன்னடையாளம். ஆனால் நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் முன்பே ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். பாருங்கள்? அழிவிற்குரிய ஒரு சிறிய உபத்திரவம்கூட தொடங்குவதற்கு முன்பே லோத்து சோதோமிலிருந்து வெளியேற்றப்பட்டான். ஆனால் ஆபிரகாம் உபத்திரவ காலத்துடன் எப்பொழுதுமே சம்பந்தப்படவில்லை. பாருங்கள்? முன்னடையாளங்கள். 14நாம் இப்பொழுது முதல் மூன்று வசனங்களைப் படிப்போம். அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்தி ரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்கா சனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டேன். புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒரு வனும் அந்த புஸ்தகத்தைத்திறக்கவும், அதைப்பார்க்கவும் கூடாதிருந்தது. (என்னே ஒரு புத்தகம்) ஒருவனும் அந்த புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன். 15இப்பொழுது, நீங்கள் அபாத்திரத்தைக் குறித்து பேசுகின்றீர்கள்? இங்கு எந்த மனிதனும் அதைப் பார்க்கக்கூட பாத்திரவானாய் இல்லை எந்த இடத்திலும் இல்லை. அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழ வேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். அப்பொழுது இதோ அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன். அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதா யிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். (ஆங்கிலத்தில் எடுத்தார் (took) என்றுள்ளது தமிழாக்கியோன்). நாம் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரம் 7-ம் வசனத்து டன் சிறிது நேரம் நிறுத்துவோம் 16ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட இந்த புஸ்தகம் வெளிப் படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஏழு இடிமுழக்கங்கள் முழங்கும் சமயத்தில் வெளிப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் குறித்துக் கொண்டிருந்தால்... நாம் அதற்குள் செல்லும் முன்பாக, சரிவர புரிந்து கொள்ள நாம் 10-ம் அதிகாரத்தைப் படிப்போம். இப்பொழுது இது கடைசிக்காலத்தைக் குறிக்கிறது. கவனியுங்கள். பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது. அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது... நீங்கள் நன்றாக கவனித்தால், அது கிறிஸ்து என்று விளங்கும். பாருங்கள்? அவர் பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கையின் தூதன்'' என அழைக்கப்படுகிறார். அவர் இப்பொழுது யூதர்களிடம் நேரடியாக வருகிறார். ஏனெனில் சபை அப்பொழுது ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது. பாருங்கள்? அது சரி. .... அவனுடைய முகம் சூரியனைப் போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது. 17வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் தூதன் என்று யார் அழைக்கப்படுகிறது என்பது நினைவிருக்கிறதா? அதுவேதான். அங்கு 'தூதன்' என்னும் பதம் இவ்வுலகில் தேவனுடைய செய்தியைக் கொண்டு வரும் ஒரு செய்தியாளனைக் குறிக்கிறது. இப்பொழுது அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் செய்தியாளனாக, தூதனாக வருகிறார். பாருங்கள்? சபை ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது... அல்லது அது எடுக்கப்படவிருக்கிறது. அவர் தமது சபைக்கு வருகிறார். இப்பொழுது கவனியுங்கள். திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது... இப்பொழுது இங்கே 5-ம் அதிகாரத்தில் அந்த புஸ்தகம் மூடப் பட்டு முத்திரிக்கப்பட்டிருந்தது. இங்கு அது திறக்கப்பட்டுள்ளது. அவர் கையிலிருந்த சிறு புஸ்தகம் திறக்கப்பட்டு விட்டது. அந்த நாளிலிருந்து முத்திரிக்கப்பட்டிருந்த அந்த புஸ்தகம் இப்பொழுது திறந்துள்ளது. இன்று இரவு நாம் அதற்கு வருகிறோம். “திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையிலிருந்தது. ஓ.. எப்படி சூரியனானது... தூண்கள். ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் மறுபடியுமாக அந்த வசனத்தை வாசிக்கட்டும். திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது: தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும், தனது இடது பாதத்தை பூமியின் மேலும் வைத்து, சிங்கம் கொச்சிக்கிறது போல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்... அவர் யூதா கோத்திரத்தின் சிங்கம் என்பதனை நாமறிவோம்; 5-ம் அதிகாரத்தில் - அவர் ஆட்டுக்குட்டியாக தோற்றமளிக்கிறார், இங்கே அவர் சிங்கம். பாருங்கள்? ... அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. (ஆங்கிலத்தில் ஏழு இடிகளும் தங்கள் சத்தங்களைக் கூறின என்னும் அர்த்தத்தில் உள்ளது? (Seven thunders uttered their voices) - -தமிழாக்கியோன்) இப்பொழுது, அவன் கண்டவைகளை எழுத வேண்டுமென்று யோவானுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் அப்போஸ்தலனும் தீர்க்கதரிசியுமாகிய அவன் இதை எழுதுவதற்கென எழுது கோலை எடுக்கிறான். அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது நான் எழுத வேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரை போடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன். இப்பொழுது, அவை என்ன என்பது நமக்குத் தெரியாது. அவை இனிமேல் வெளிப்பட வேண்டும். அந்த இடி முழக்கங்கள் சொன்னவை பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்படவில்லை. சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை (இங்கே சகோ.பிரான்ஹாம் தன் கையை என்பதற்கு பதிலாக, தன் கைகளை (Hands) என்று படிக் கிறார் -தமிழாக்கியோன்) வானத்திற்கு நேராக உயர்த்தி (கவனி யுங்கள்). 18கவனியுங்கள். நான் அணுக விரும்பும் வசனம் இங்குள்ளது. இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ ரகசியம் நிறை வேறும் என்று வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களி லும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இப்பொழுது பாருங்கள்? ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட இந்த புஸ்தகத்தில் அடங்கியுள்ள இரகசியம் ஏழாம் சபையின் தூதனின் செய்தி முழங்கும்போது வெளிப்படும். பாருங்கள்? ''ஏழாம் தூதன் எக்காளம் ஊதத் தொடங்குகிறான்.'' அங்கு எழுதப்பட்டுள்ள அந்த செய்திகள்தான் இப்பொழுது ஒலி நாடாக்களிலும் புஸ்தகவடிவிலும் உள்ளன. இப்பொழுது அந்த செய்தி முழங்கும் தொடக்கத்தில், தேவ ரகசியம் நிறைவேற வேண்டும். பாருங்கள், அந்த நேரத்தில் ஏழாம் தூதனின் செய்தி முழங்குவதற்கு முன்பு, புஸ்தகத்தில் அடங்கியுள்ள தேவரகசியம் வெளிப்படுவதில்லை என்பதனைக் கவனியுங்கள். இப்பொழுது, இந்த குறிப்புக்கள் யாவும் நாம் முத்திரைகளைப் பற்றி தியானிக்கும்போது முக்கியமானதாய் இருக்கும் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன். ஏனெனில், இவையெல்லாம் ஒன்றோடொன்று பிணைந்தாக வேண்டும். 19இப்பொழுது எழுதப்பட்ட அந்த இரகசியத்தை எந்த மனிதனும் எங்கேயும் அறியமாட்டான். தேவன் மாத்திரமே, இயேசு கிறிஸ்துவே அதை அறிவார். பாருங்கள்? அது இரகசியமடங்கிய ஒரு புஸ்தகம். அது மீட்பின் புஸ்தகம். அதைப் பற்றி இன்னும் சற்று நேரத்தில் சிந்திப்போம். இதுவரை அந்த மீட்பின் புஸ்தகத்தை யாரும் முற்றிலுமாக புரிந்து கொள்ள இயலவில்லை. முதல் ஆறு சபையின் காலங்களில் அது ஆராயப்பட்டது. ஆனால், கடைசியில் ஏழாம் தூதன் அவன் இரகசியத்தை முழங்கும்போது, இதுவரை அக்காலத்தவர் ஆராய்ந்திருந்து விடுபட்டிருந்த தளர்ந்த முனைகள் யாவற்றையும் அவன் முடிவுறச் செய்வான். அந்த இரகசியங்களின் அர்த்தம் நேரடியாக தேவனிடத்திலிருந்து அவருடைய வார்த்தையாக புறப்பட்டு வந்து, தேவனுடைய முழு வெளிப்பாட்டையும் வெளிப்படுத்தும். அப்பொழுது தேவத்துவம், மற்றவை யாவும் தெளிவாக்கப்படும். சர்ப்பத்தின் வித்து, இன்னுமுள்ள மற்ற இரகசியங்கள் யாவும் வெளிப்படுத்தப்பட வேண்டும். 20இப்பொழுது நீங்கள் கவனியுங்கள். நான் கதை கட்டிக்கூறுவ தாக எண்ணவேண்டாம். அவையெல்லாம் ''கர்த்தர் உரைக்கிற தாவது“. நான் அதை உங்களுக்கு வேதத்திலிருந்து படித்துக் காட்டுகின்றேன். ”ஏழாம் தூதனின் செய்தி முழங்கும்போது, தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் மூலமாய் உரைத்த தேவ ரகசியம் நிறைவேறும்.'' இந்த தீர்க்கதரிசிகள்தாம் தேவனுடைய வார்த்தையை எழுதினர். ஏழாம் சபையின் காலமாகிய கடைசி சபையின் காலத்தில், அதற்கு முன்பிருந்த சபையின் காலங்களில் ஆராயப்பட்டு, விவரிக்கப் படாமல் விடப்பட்ட தளர்ந்த முனைகள் அனைத்தும் வெளிப்படுத்தப் படும். ஆகவே அந்த முத்திரைகள் உடைக்கப்பட்டு, தேவ ரகசியம் வெளிப்படுகையில், அந்த தூதன், அந்த செய்தியாளன், கிறிஸ்து கீழே இறங்கி வந்து தம்முடைய பாதத்தை பூமியின் மேலும் சமுத்திரத்தின் மேலும் வைக்கின்றார். அவருடைய சிரசின் மேல் வானவில் இருந்தது. பலமுள்ள தூதன் பூமிக்கு இறங்கும் இந்த வருகையின் நேரத்தில் இந்த ஏழாம் தூதன் பூமியில் ஏற்கனவே இருக்கிறான் என்பது நினைவிருக்கட்டும். 2142, யோவான் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அதே சமயத்தில் மேசியா வந்ததற்கு இது ஒத்திருக்கிறது. இயேசுவை அறிமுகப்படுத்துவற்காக தான் குறிக்கப்பட்டவன் என்பதை யோவான் அறிந்திருந்தபடியால், தான் அவரைக் காண்பான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். மல்கியா 4-ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட வாக்கியங்களின் மூலம் யோவானைப் போன்ற ஒரு எலியா கடைசிக் காலத்தில் இருக்க வேண்டு மென்றும், தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் வருமென்றும், அவன் பரிசுத்த ஆவியின் மூலம் தேவரகசியம் அனைத்தையும் வெளிப்படுத்தி, பிள்ளைகளின் விசுவாசத்தை அப்போஸ்தல பிதாக்களின் விசுவாசத்திற்கு கொண்டு வருவான் என்றும் நாமறிவோம். ஸ்தாபனங்களின் காலத்தில் ஆராயப்பட்ட தேவ ரகசியம் யாவையும் அவன் வெளிப்படுத்துவான். இப்பொழுது அங்ஙனம்தான் வேதம் கூறுகிறது. வேதம் என்ன கூறுகிறதோ அதற்கு மாத்திரமே நான் பொறுப்பு. பாருங்கள்? எழுதப்பட்டுள்ள இது சரியானதாகும். அது அதுவேதான். இப்பொழுது ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட இந்த புஸ்தகம், இப்பொழுது, அந்த மீட்பின் இரகசியமாயுள்ளது என்று நாம் காண்கிறோம். அது தேவனிடத்திலிருந்து வந்த மீட்பின் புஸ்தகம். 22இப்பொழுது, இந்த செய்தியாளன் செய்தியை முழங்கும் சமயம், தேவ ரகசியம் யாவும் இந்நேரத்தில் நிறைவேறும். இப்பொழுது ஏழாம் சபையின் தூதன் இங்கே பூமியில் இருக்கிறான். ''வேறொரு“ தூதன், பலமுள்ள செய்தியாளன் - வானத்திலிருந்து இறங்கி வருகிறான். பாருங்கள்? இந்த தூதன் பூமிக்குரிய தூதன், செய்தியாளன் ஆவான். ஆனால் இங்கே ஒருவன் வானத்திலிருந்து வருகிறான், பாருங்கள், அவன் சிரசின் மேல் வானவில் இருந்தது - உடன்படிக்கைக்கு அடையாளம். பாருங்கள், அது கிறிஸ்துவாகத்தான் இருக்க முடியும் வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் அவர் “ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியில் உலாவி, சுற்றிலும் வானவில் அமைந்திருந்து, பார்வைக்கு வச்சிரக் கல்லுக்கும் பதும ராகத்துக்கும் அவர் ஒப்பாயிருந்த காட்சியைப் போன்றே இந்தக் காட்சியிலும் அவர் சிரசின் மேல் வானவில்லைக் கொண்டவராய் வருகிறார். 23தேவ ரகசியம் யாவும் நிறைவேறி, முத்திரைகள் உடைக்கப்பட்டு, 'இனி காலம் செல்லாது' என்று சொல்லப்பட வேண்டிய சமயத்தில் அவர் 10-ம் அதிகாரத்தில் கூறப்பட்டவண்ண ம் மறுபடியும் இறங்கி வருகிறார். அவர் இறங்கி வந்து, ''ஏழாம் தூதன் எக்காளம் ஊதப் போகிற போது 'தேவரகசியம் நிறைவேறும்' என்கிறார். ஆகையால் அந்த தூதன் பிரத்தியட்சமாவதற்கு சமயம் வந்துவிட்டது.'' நாம் மிக அருகாமையில் இருக்கிறோம். நான் கூறுவது சரி. இப்பொழுது கவனியுங்கள். 24அந்த ஏழு முத்திரைகள் அந்த புஸ்தகத்திலுள்ள இரகசியத்தை வைத்திருக்கின்றன. அந்த இரகசியம் என்னவென்பதை நாம் நிச்சய மாக அறியும்வரை, அது என்னவாய் இருக்குமென்று நாம் ஊகிக்கத் தான் முடியும். ஏனென்றால், இன்று காலை, 'தேவன் எளிமையில் மறைந் திருக்கிறார்' என்ற என் சிறிய செய்தியில் நான் கூறியபடி, ஒரு காரியம் முற்றிலுமாக, உண்மையாக பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப் பட்டு, அது உறுதிப்பட்டாலன்றி, நாம் அதை இழந்து போவோம். பாருங்கள்? ஒரு தீர்க்கதரிசி ஒரு காரியத்தை உரைத்து, அதை தேவன் சரியென்று நிரூபிக்காவிடில், அந்தக் காரியத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து அதை மறந்து விட வேண்டும். பாருங்கள்? ஆனால் தேவன், அதை உண்மையென்று காண்பிக்க அவனுடைய கூற்று யாவையும் - எல்லாவற்றையும் உறுதிபடுத்த வேண்டும். பாருங்கள்? ஆகவே தேவனுடைய பிள்ளைகள் இந்த விஷயத்தில் கவனித்து, விழிப்புள்ளவராய் இருப்பார்கள். கவனியுங்கள். 25புஸ்தகத்தின் மேலுள்ள ஏழு முத்திரைகள்... அந்த புஸ்தகம் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டுள்ளது. அந்தப் புஸ்தகம் முற்றிலுமாக முத்திரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதைக் காண்கிறீர்களா? (சபையார்“ஆமென்'' என்கின்றனர் - ஆசி) ஏழு முத்திரைகள் உடைக்கப்படும் வரை அப்புஸ்தகம் முற்றிலுமாக முத்தரிக்கப்பட்டுள்ளது. அது ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட புஸ்தகம். இப்பொழுது இந்த ஏழு முத்திரைகள் ஏழு இடி முழக்கங்களினின்று வித்தியாசப்பட்டவை. பாருங்கள்? அந்த புஸ்தகத்தின் மேல் ஏழு முத்திரைகள் உள்ளன. ஏழாம் சபையின் தூதன் செய்தியளிக்கும் வரை அந்த முத்திரைகள், புத்தகமானது திறக்கப்படுவதில்லை. பாருங்கள்? ஆகவே நாம் அதை ஊகித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த முழக்கத்தில் அந்த உண்மையான தேவனுடைய வெளிப்பாடானது பரிபூரணப்பட் டிருக்கும். அது தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட சத்தியமாகும். தேவ னுடைய வார்த்தை சரியாக அவ்விதமாகவே கூறுகிறது. ''இந்த சமயத்தில்தான் தேவரகசியம் நிறைவேறவேண்டும்.'' இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள். இந்த ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புஸ்தகம் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தில் அது முத்திரிக்கப்பட்டதாய் உள்ளது. 10-ம் அதிகாரத்தில் அது திறக்கப்பட்டிருக்கிறது. 26அப்புஸ்தகம் எவ்வாறு திறக்கப்பட்டதென்று வேதம் எடுத்துரைப் பதை நாம் இப்பொழுது கவனிப்போம். ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்தை எடுத்து அதன் முத்திரைகளை உடைத்து, அப்புஸ்தகத்தை திறக்கும் வரை அதிலுள்ள இரகசியம் வெளியரங்கமாவதில்லை. பாருங்கள்? ஆட்டுக்குட்டியானவர் தாம் அந்த புஸ்தகத்தை எடுக்க வேண்டும். ஏனெனில் அது மறைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நினைவு கொள்ளுங்கள். ''பரலோகத்தில் உள்ள ஒரு மனிதனோ, பூமியில் உள்ள ஒரு மனிதனோ'' போப்பாண்டவர், அத்தியட்சகர், கார்டினல், அரசாங்க போதகர் அல்லது மற்றவர் - “அம்முத்திரைகளை உடைக்க அல்லது புஸ்தகத்திலுள்ள இரகசியத்தை வெளிப்படுத்த முடியாது. ஆட்டுக்குட்டி யானவரால் மாத்திரமே அது முடியும்.'' நாம் அப்புஸ்தகத்தின் இரகசியத்தை ஆராய்ந்து, ஊகித்து, அதைக் கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறி அது என்னவாயிருக்கும் என்றெல்லாம் வியந்ததுண்டு. அதன் காரணமாகத்தான் நாம் அதைக் குறித்து குழப்பமடைந்திருக்கிறோம். ஆனால் ஆட்டுக்குட்டியானவர் அந்த மீட்பின் புஸ்தகத்தை முற்றிலுமாக திறப்பார் என்னும் தெய்வீக வாக்குத்தத்தம் நமக்குண்டு. நாம் வாழும் இந்த கடைசி நாட்களில் ஆட்டுக்குட்டியானவர் அந்த முத்திரைகளை உடைப்பார். ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்தை எடுத்து முத்திரைகளை உடைக்கும்வரை அதனுள் இருக்கும் இரகசியம் வெளிப்படாது. ஏனெனில் அப்புஸ்தகம் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்தில் உள்ளது என்பதனை நினைவுகூரவும். “ஆகவே ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரிடம் வந்து, அவருடைய வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்குகிறார். அவர் புஸ்தகத்தை வாங்குகிறார்.'' (ஆங்கிலத்தில் Takes எடுத்துக் கொள்கிறார் என்னும் அர்த்தத்தில் உள்ளது-தமிழாக்கியோன்) ஓ... அது ஆழமான இரகசியம். பரிசுத்த ஆவியின் உதவியினால் அதை நாம் அறிந்து கொள்ள முயல்வோம். இப்பொழுது நாம் அவர் பேரில் சார்ந்திருக்கிறோம். சமயம் வழுகிவிட்ட, கடைசி காலத்தில் அதன் இரகசியம் வெளிப்படும் என்பதை நாம் பின்பு காண்போம். 27அந்தப் புஸ்தகத்தை வியாக்கியானம் செய்ய எந்த ஸ்தாபனத்திற்கும் உரிமையில்லை. அதை வியாக்கியானம் செய்ய எந்த மனிதனுக்கும் உரிமையில்லை. ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே அதை வியாக்கியானம் செய்ய முடியும். ஆகவே அந்த ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே அதைப் பேசுகிறார். அவர் மாத்திரமே வார்த்தையை அறியும்படிச் செய்து, நிரூபித்து வார்த்தையை ஜீவனுக்குக் கொண்டு வருகிறார். பாருங்கள்? சரியாக கவனியுங்கள். அது வெளிப்படுத்தப்படவில்லை... 28சபையின் காலங்களும், ஸ்தாபனங்களின் காலங்களும், முடிவு பெற்ற பின்னரே அந்த இரகசியம் வெளிப்படும். ''இனிமேல் காலம் இல்லை'' அதைப் பாருங்கள்? சபையின் காலங்களும், ஸ்தாபனங்களின் காலங்களும் முடிவுற்ற பின்னரே அது வெளிப்படுத்தப்படும். இக்காரியம் இன்றிரவு சந்தேகத்திற்குள் இருப்பதின் காரணம் இதுவே. பாருங்கள் ஸ்தாபனங்கள் ஒரு சிறிய போதகத்தைப் பற்றிக் கொண்டு, ஒரு பக்கம் சென்று, இதுதான் முக்கியம் என்று கூறுகின்றன. வேறொரு ஸ்தாபனம் மற்றுமொரு சிறிய போதகத்தை எடுத்துக் கொண்டு மறுபக்கம் சென்று “இதுதான்!'' என்கின்றது. இவ்விதமாக ஒவ்வொரு ஸ்தாபனமும் ஒரு சிறிய போதகத்தின் மேல் ஸ்தாபனத்தைக் கட்டிக்கொண்டதன் விளைவாக, நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்கள் இன்று உள்ளன. என்றாலும் அவைகளிலெல்லாம் குழப்பமே காணப்படு கின்றது. ஜனங்கள், சத்தியமாவது என்ன என்று பிரமிப்படைகின்றனர். அதுதான் இன்றைய ஸ்தாபனங்களின் நிலையாகும். ஆனால், இவைகளின் காலம் முடிவு பெற்றவுடன், ஏழாம் தூதனுடைய சத்தம் முழங்குமென்றும், அவ்வமயம் இப்புஸ்தகத்தின் அர்த்தம் வெளிப்படுமென்றும் தேவன் வாக்களித்துள்ளார். பாருங்கள்? 29“அங்கே, அக்காலத்திலே இருந்தவர்கள் இரட்சிக்கப்படவில்லை' என்று நீங்கள் கூற வேண்டாம். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ள முடியாத இரகசியங்கள். உதாரணமாக தேவன் மூவராயிருந்து எங்ஙனம் ஒருவராயிருக்க முடியும்? வேதம், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ் நானம் கொடுக்கச் சொல்லி அதே சமயத்தில் எப்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கச் சொல்லும்? பாருங்கள்? ஓ, இன்னும் அநேகக்காரியங்கள். எப்படி ஏவாள் ஒரு கனியைத் தின்பதினால் முழு உலகத்தையும் எவ்வாறு சேதப்படுத்த முடிந்தது போன்ற இரகசியங்கள். பாருங்கள்? இக்காரியங்கள் எப்படி இருக்க முடியும்? ஆனால் அந்த இரகசியங்கள் யாவும் இந்தக் கடைசி காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்று வாக்களிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்ந்த முனைகள்... ஐரினேயஸ், பரி.மார்டின், பாலிகார்ப், லூதர், வெஸ்லி போன்ற மகத்தான வீரர்கள் இவ்வுலகத்தில் தோன்றி வெளிச்சம் பிரகாசிக்கச் செய்தனர். பாருங்கள்? ஆனால் அவர்கள் அநேக காரியங்களை வெளிப்படுத்த முடியாமல் இருளிலே விட்டு விட்டனர். லூதரின் காலத்தைப்போன்று பெந்தெகொஸ்தே காலமும் தோன்றியது. அவர்கள் போதித்தது சரியல்ல என்று சொல்லாதீர்கள். அவைகள் சரியே. ஆனால் அவர்களால் விவரிக்க முடியாத சிலவற்றை, தளர்ந்த முனைகளை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் அதன்பின்... ஏன்? இவை எல்லாவற் றையும் வெளிப்படுத்துவதற்கு அப்பொழுது முத்திரைகள் உடைக்கப் படவில்லை. பாருங்கள்? 30ஆனால் இந்தக் கடைசிக் காலத்தில் எல்லா இரகசியங்களும் தீர்க்கப்பட்டு சபைக்கு அளிக்கப்பட வேண்டும். முத்திரைகள் ஆட்டுக்குட்டியானவரால் திறக்கப்பட்டு சபைக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்பு சமயமிராது. பாருங்கள்? எவ்வளவு அதிசயம், அவ்விதமெனில், இப்புஸ்தகம் மீட்பின் புஸ்தகமாகும். ஏனெனில், அது முன்னே செல்லுகிறது. 1,44,000 பேர் எவ்விதம் மீட்புக்குள் கொண்டு வரப்படுகின்றனர் என்று நாம் பின்னர் பார்ப்போம். அவர்கள் யூதர்கள். அது சரி. 31இப்பொழுது, இப்பொழுது பவுல். நாம் சற்று படிப்போம். என் நினைவில் சில வேத வாக்கியங்கள் வருகின்றன. அவைகளை நாம் படிக்கவேண்டும். இப்பொழுது நாமனைவரும் வேத பக்கங்களை திருப்புவோம்; எபேசியர் 1, பவுல். அநேகர் வேத வாக்கியங்களைக் குறிக்கிறதையும், வேத புத்தகத்தில் கோடிடுவதையும் நான் காண்கிறேன். அது மிகவும் நல்லது. நீங்கள் வீடுகளில் சென்று குறிக்கப்பட்ட வேத வாக்கியங்களைப்படிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? நீங்கள் தனியாக அவைகளைப் படித்தால், அதை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். பாருங்கள்? நீங்கள் அதைப் படித்து, அவைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள தேவனுடைய ஒத்தாசையைக் கோருங்கள். நான் குறிப்பில் எழுதியுள்ள இந்த வசனத்தைப் படிக்கலாம். எபேசியர் 1:13-14. இப்பொழுது... நீங்கள் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்தியவசனத்தைக் கேட்டு விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள், அவருக்கு சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார். பாருங்கள்? 32இப்பொழுது, நாம் வேத வசனங்களைத் திறந்துள்ள இந்த வேளையிலே... பாருங்கள், பரிசுத்த ஆவியே முத்திரை என்பதை இங்கு காணவும். பரிசுத்த ஆவியே முத்திரையாகும். ஒரு முத்திரை எதற்கு அடையாளமாயுள்ளது? முடிவு பெற்ற ஒரு கிரியைக்கு. ஒரு தனிப்பட்ட நபருக்கு பரிசுத்த ஆவி முத்திரையாயிருக்கிறது. அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றவுடன், அவன் புலம்பும் காலம் முடிவடைகிறது. ஏனெனில் அது முடிவு பெற்ற ஒரு கிரியையாகும். பாருங்கள். 33நான் ஒரு போக்குவரத்து நிர்வாகத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, தின்பண்டங்களை டப்பாக்களில் அடைக்கும் தொழிற்சாலையிலிருந்து (Canning factory) வரும் டப்பாக்களை லாரிகளில் ஏற்றுவது வழக்கம். அந்த வண்டியை நாங்கள் மூடி முத்திரையிடும் முன்பு, டப்பாக்கள் சரிவர அடுக்கப்பட்டுள்ளனவா என்று சோதனை யாளர் பார்வையிடுவார். (சகோதரன் பிரான்ஹாம் தன் இரண்டு கரங்களையும் ஒன்று சேர்த்து ஒரு முறை தட்டுகிறார் -ஆசி) இல்லை யெனில், அவை ஒன்றின் மேல் ஒன்று மோதி உடைந்து, டப்பாக் களிலுள்ள பொருட்கள் சிதறிவிடும். அவ்வாறு நேர்ந்தால் போக்குவரத்து நிர்வாகம்தான் அதற்கு பொறுப்பு. சோதனையாளர் பரிசோதிக்கும்போது, டப்பாக்கள் சரிவர அடுக்கப்படவில்லையென்று கண்டால், அந்த லாரி உபயோகமற்றது என்று அறிவித்துவிடுவார். அதன்பின் நாங்கள் எல்லாவற்றையும் கீழே இறக்கி, அவருக்குத் திருப்தியுண்டாகும்வரை மறுபடியும் அடுக்க வேண்டும். அவருக்குத் திருப்தி ஏற்பட்ட பிறகு, அவர் கதவை மூடி அதற்கு முத்திரை வைப்பார். வண்டி சேரவேண்டிய இடத்தை அடையும்வரை யாரும் இந்த முத்திரையை உடைக்க முடியாது. 34அதைத்தான் பரிசுத்த ஆவியானவர் செய்துகொண்டு வருகிறார். பாருங்கள்? அவர் சென்று பரிசோதிக்கிறார். அதன் காரணத்தினால்தான் நீங்கள் இக்காரியங்களை வைத்திருக்க முடியாது. ஆகையால்தான் ''நான் அன்னிய பாஷை பேசினேன். நான் கூக்குரலிட்டு ஆவியில் நடனமாடினேன்'' என்று சொல்வதில் உபயோகமில்லை. பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர், தாம் திருப்தியடையும்வரை ஒரு மனிதனை பரிசோதிக்கிறார். அவர்கள் அவ்விதம் உள்ளனர் என்று அறிகிறார். எல்லாம் சரிவர அமைந்துள்ளன என்று அவர் திருப்தி கொண்டால், அவன் சேரவேண்டிய நித்தியத்திற்கென்று முத்திரிக்கப்படு கிறான். அதன்பிறகு அந்த முத்திரையை யாராலும் உடைக்க முடியாது. வேதம்... வேதவாக்கியங்களை நீங்கள் குறித்துக் கொண்டிருக்கிறீர்கள். ''அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'' என்று எபேசியர் 4:30 கூறுகின்றது. 'மீட்பு' என்னும் வார்த்தையைக் கவனிக்கவும். மீட்பின் புஸ்தகத்தின் இரகசியம் வெளிப்பட்டு, மீட்பர் வந்து ''தமக்கு சொந்தமானவர்களைக் கொண்டு செல்லும் நாள் வரைக்கும் பரிசுத்த ஆவியை நீங்கள் துக்கப்படுத்தாதிருங்கள்.'' ஒருவரும் அவ்விதம் செய்யக்கூடாது. பாருங்கள்? அதை துக்கப்படுத்தாதே? தேவனுக்குப் பிரீதியாயுள்ளவைகளை மாத்திரம் செய்யுங்கள். ஏனெனில் இப்பொழுது அந்த புஸ்தகம் முத்திரிக்கப்பட்டுள்ளது. நீங்களும் முத்திரிக்கப்பட்டிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவிதான் அந்த முத்திரை. முத்திரை முடிவு பெற்ற ஒரு செயலைக் குறிக்கிறது. நான் அகராதியிலிருந்து இதன் அர்த்தத்தை அறிந்தேன். ஏழாம் முத்திரை உடைக்கப்படும்பொழுது இந்த இரகசியமான முத்திரைகளுக்குள் முத்திரிக்கப்பட்டுள்ள தேவனுடைய இரகசியம் நிறைவேறும். அந்த முத்திரையானது உடைக்கப்பட்டபின்பு அதனுள் இருப்பவை வெளிப்படுத்தப் படுகின்றது. 35டப்பாக்கள் ஏற்றப்பட்ட லாரி வண்டிக்குள் என்ன இருக்கிறது என்று அது சேரவேண்டிய இடத்தை அடைந்தவுடன் “இன்ன - இன்ன காரியங்கள் இதில் இருக்கலாம். இதில் இருக்கலாம்'' என்று அங்கு பணிபுரிபவர் ஊகிக்கத் தலைபடலாம்; ஆனால் அந்த முத்திரையை உடைத்து அதன்கதவைத் திறந்தவுடனே, அதற்குள் இருப்பவைகளை நாம் கண்கூடாகக் காணலாம். முத்திரை என்பது “சொந்தத்தையும் குறிக்கிறது. பாருங்கள், முத்திரையின் மேல் ஒரு அடையாளம் காணப்படும். முத்திரிக்கப்பட்டது யாருக்கு சொந்தம் என்பதனை அது காண்பிக்கிறது. நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டு, பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டால், நாம் இவ்வுலகத்தையோ அல்லது இவ்வுலகத்துடன் சம்பந்தப்பட்டவைகளையோ சார்ந்தவரல்ல. நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களாயிருக்கிறோம். 36மேலும், முத்திரை ''பாதுகாப்புக்கு'' அடையாளமாயிருக்கிறது. அப்படியானால் நீ பாதுகாப்பாக இருக்கின்றாய் என்பதாகும். நித்தியப் பாதுகாப்பில் (Eternal Security) நம்பிக்கை கொள்ளாதவரே, ஒரு முத்திரை முத்தரிக்கப்பட்டு, அது சேரவேண்டிய இடத்தை அடையும் வரை பாதுகாக்கப்படும் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது. அந்த முத்திரையை உடைக்க முயலுபவனுக்கு ஐயோ! பரிசுத்த ஆவியின் முத்திரை ஒருக்காலும் உடைக்கப்பட முடியாது. ''பிசாசு என்னை இவ்விதம் செய்யத் தூண்டினான்'' என்று ஜனங்கள் என்னிடம் கூறுவதுண்டு. இல்லை. இல்லை. பிசாசு உங்களைத் தூண்டவில்லை. நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்படவில்லை என்றுதான் அர்த்தம். ஏனென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்படும்போது, அவன் வெளியே சென்று, மறுபடியும் உள்ளே வராமல் தடுக்கப்படுகிறான். ஆம். பாருங்கள்? நீங்கள் தவறு செய்யும் போது, நீங்கள்தான் அவனை நாடிச்சென்றீர்கள். ஊம்... உங்களுக்குள் அவன் வரவேண்டுமானால், நீங்கள் கடைப்பிடித்த முறைகளை அவனும் கடைப்பிடிக்க வேண்டும். அவன் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அவன் உங்கள் சகோதரனாவான். ஆகையால் தவறுசெய்ய அவன் உங்களைத் தூண்டவில்லை. இல்லை, இல்லை. நீங்கள் தான் இவ்விரண்டையும் பிரிக்கும் எல்லையின் (Borderline). அருகில் சென்று, உலகத்தின் காரியங்களை இச்சித்து, திரும்பவும் எல்லைக்குள் வந்தீர்கள். நீங்கள் யோர்தானைக் கடந்து கானானுக்குள் பிரவேசிக்கவில்லை. நீங்கள் பாருங்கள்.- அதாவது நீங்கள் உலகத்திற்கு மரிக்கவில்லை. பாருங்கள்! 37இப்பொழுது கவனியுங்கள். இந்த புஸ்தகம் முத்திரிக்கப்பட் டுள்ளது. நீங்களும் மீட்கப்படும் நாளுக்கென்று அதனுடன் முத்திரிக்கப் பட்டிருக்கிறீர்கள். 38ரோமர் 8:22, 23-ல் அதை நாம் வாசிப்போம். நாம் அதன் பின் னணியை அளிக்கும்பொழுது ஒவ்வொருவரும் தனித்தனியாக அதை படித்தால் அவர்கள் அதை சிறிது தெளிவாக புரிந்துகொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். காலதாமதமாவதற்கு முன்னமே நாம் அவைகளைப் பார்க்க, நான் அளிக்கும் இவ்வேத வாக்கியங்கள் ஏதுவாயிருக்கும். இப்பொழுது 8. ரோமர் 8:22லிருந்து ஆரம்பிப்போம். ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப் படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவீகாரம் வருகிறதற்குக் காத்திருந்து நமக்குள் தவிக்கிறோம். ரோமர் 8:22-23 39ஓ, என்னே ! ஓ, என்னே ! வயோதிபராகிய நமக்கு இது ஒரு சந்தோஷ உணர்ச்சியை அளிக்கிறதல்லவா? இந்த மணி நேரத்திற் கென்று காத்திருப்பது நம்மெல்லோருக்கும் ஒரு நல்ல உணர்ச்சியை அளிக்கவேண்டும். இவ்வசனங்களில் சொல்லப்பட்டவை முதலாம் உயிர்த்தெழுதலின்போது சம்பவிக்கும். பாருங்கள். இயற்கை தவிக்கிறது. நாமும் தவிக்கிறோம். சர்வசிருஷ்டியுமே தவிக்கிறது. ஏனெனில் ஏதோ ஒன்று சரியாயிருக்கவில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகையால் நாம் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று. நமக்குள் தவித்து அது வருவதற்காகக் காத்திருத்தலாகும். ஏனெனில் அது புது ஜீவனை இங்கே நமக்கு அளித்து ஒரு புதிய உலகில் நம்மைக் கொண்டு சேர்க்கும். 40நானும் என் மனைவியும், சிறப்பு அங்காடிக்குச் (Super Market) சென்றிருந்தோம். நான், ''நாம் ஒரு விசித்திரமான காரியத்தைக் கண்டோம்; ஒரு பெண் உடை அணிந்திருந்தாள்,'' என்றேன். தற்பொழுது அமெரிக்காவில் அது ஒரு விசித்திரமான காட்சியாகும். பாருங்கள்? ஏனெனில் பெரும்பாலாக பெண்கள் ஆடையணிவதேயில்லை. நீங்கள் பாருங்கள்? அவர்கள் ஆடையணிய எப்படியோ மறந்து விடுகின்றனர். ஆடையின்றி அவர்கள் செல்கின்றனர். அவர்கள் வேண்டுமென்றே மறந்து விடுகின்றனர் போலும்!. என் மனைவி மேடா (Meda) என்னிடம், ''பில்லி, ஏன் அப்படி செய்கின்றனர்?“ என்று கேட்டாள். அதற்கு நான், “ஓ, தேசம் பெற்றிருக்கும் ஆவிக்கு அது எடுத்துக்காட்டு” என்றேன். ''நாம் ஜெர்மானிக்குச் சென்றால் அவர்கள் ஒருவிதமான ஆவியைப் பெற்றுள்ளதைக் காணலாம். பின்லாந்து நாட்டினர்க்கு வேறுவகை ஆவியுண்டு. நாம் அமெரிக்காவிற்கு வரும்போது, இந்த தேசத்திற்கு ஒருவகை ஆவியுண்டு'' என்று நான் அவளிடம் சொன்னேன். அமெரிக்க தேசத்தின் தற்போதைய ஆவி கேளிக்கையும் பரியாசமும்தான். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் அப்போஸ்தலருடைய உபதேசங்களின் மேல் கட்டப்பட்டிருந்தோம். வாஷிங்டன், லிங்கன் போன்ற சிறந்த தலைவர்களின் வழிநடத்துதலை அஸ்திபாரமாகக் கொண்டு அதன் மேல் கட்டப்பட்டிருந்தோம். ஆனால் இப்பொழுது அதனின்று விலகி விட்டோம். அழிவு வரப்போகிறதென்பதை நாமறிவோம். நம்முடைய பெயர் இப்பொழுது அணுகுண்டுகளின் மேல் எழுதப்பட்டிருக்கிறது. அடிமைத்தனம் நம்முன்னுள்ளது என்பதை நாம் அறிவோம். உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். 41ஒரு நகைச்சுவையாளன் எல்லா இடங்களிலும் சென்று ஹாஸ்யங்களைச் சொல்லிக் கொண்டு வருகிறான். பெண்கள் முறைகேடான வழிகளில் நடந்துகொள்ளுகின்றனர். அவ்வாறே ஆண்களும் ஒருவரோ டொருவர் கேவலமானதை நடப்பிக்கின்றனர். ஒரு சமயம் ஒரு பையன் கல்லறைத் தோட்டத்தின் வழியாகச்செல்லும்போது விசில் அடித்துக் கொண்டே அவனுக்கு எவ்வித பயமுமில்லை என்று நினைத்துக் கொண்டு சென்ற சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. உண்மையைக் கூறினால் அவனுக்கு உள்ளில் பயம்தான். பாருங்கள்? ஆனால் அவன் விசில் அடித்து அவனுக்கு பயமில்லையென்று சொல்லிக்கொண்டே தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளுகிறான். பாருங்கள்? இன்றைக்கு அமெரிக்காவின் நிலை அதுவே. ஆனால் ஓ, கைகளை உயர்த்தி தேவனை நோக்கியிருக்கும் ஒரு விசுவாசிக்கு என்னே ஒரு ஆசீர்வாதமான நம்பிக்கை! இவைகள் சம்பவிப்பதை அவன் காணும்போது மீட்பு சமீபமாயிருப்பதை அவன் அறிகிறான். விசுவாசிக்கு இது உண்மையாகவே ஒரு மகத்தான சமயம். 42இப்பொழுது, இந்த காரியங்கள், அதாவது நாம் சரீரத்தில் தவிப்பது... ஒரு மரம் வெட்டப்படும்போது தவிப்பதை நீங்கள் எப்பொழுது தாவது கவனித்ததுண்டா ? அது ஜீவிக்க விரும்புகிறது. அவ்வாறே ஒரு மிருகமும் சாகும்போதும் துடிதுடிக்கிறது. மனிதனும், இயற்கையும் எப்படி தவிக்கிறது என்று நீங்கள் கவனியுங்கள். நாமும் நமக்குள்ளே தவிக்கிறோம். பாருங்கள்? ஏதோ தவறு ஒன்றுண்டு என்பதை நாம் அறி கிறோம். நாம் படித்த வசனங்களில், மனிதனும் பூமியும் ஏதோ ஒன்றை இழந்திருப்பதைக் காணலாம். சர்வசிருஷ்டியும் ஏதோ ஒன்றை இழந்துள்ளது. ஏதோ ஒரு காரணத்தால் அவை தவிக்கின்றன என்பதை நாம் தேவாவியால் அருளப்பட்ட வார்த்தையின் மூலம் அறியலாம். காரண மில்லாமல் நீங்கள் தவிப்பதில்லை. எழுதும் மையைக்குறித்து நான் பேசும்போது உங்களிடம் சொன்னவாறு எல்லாவற்றுக்கும் ஒரு காரண முண்டு. 43பிணியாளிகளுக்கு ஜெபம் செய்யும்போதும் அப்படியேதான். அவர்களை சுகப்படுத்த முடியும். ஆனால் அவர்கள் வியாதியாயிருக்கும் காரணத்தை நான் முன்னர் அறியவேண்டும். அதற்கு தரிசனங்கள் மிகவும் அவசியமாயுள்ளன. மனிதனுடைய இருதயத்தின் இரகசியங்களை அவை வெளிப்படுத்தி, அந்த மனிதன் எங்கு தவறு செய்தான் என்றும், அதற்கு அவன் என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிவிக்கின்றன. பாருங்கள்? நீங்கள் எவ்வளவாக மருந்து உட்கொண்டாலும், எவ்வளவாக தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்து சத்தமிட்டு ஜெபித்தாலும், ஏதாவது தவறு உங்களில் காணப்பட்டால், அவன் - அங்கேயே படுத்திருப்பான். நான் “அவன்” என்று கூறினேனல்லவா, அது பிசாசாகும். ஆகையால், பாருங்கள்? இன்று நாம் மருத்துவத்துறையில் முன்னேறியிருந்தாலும், இவைகளைக்குறித்து ஒன்றும் அறியோம். நீங்கள் அவனுக்குப் புற்றுநோய் இருக்கிறது' என்று சொல்கிறீர்கள். நல்லது, அது ஒன்றுமில்லை. புற்றுநோய் என்பது மருத்துவம் அந்த வியாதிக்குச் சூட்டின பெயர். அதற்கும் இதற்கும் எந்தவிதத்திலும் ஒன்றுமில்லை. அதற்கு ஒரு பெயரிட்டு, அதை புற்றுநோய் என்று அழைக்கிறோம். ஆனால் அது என்னவென்று ஆராயத் தலைப்பட்டால், அது பிசாசுதான். 44நாம் 'பாவம்' என்று கூறுகிறோம். அதை ஆராய்ந்து பார்த்தால்... பாவம் என்பது என்ன? அநேகர் குடிப்பது, விபசாரம் செய்வது பாவம்' என்று கருதுகின்றனர். இல்லை, இல்லை. அவை பாவத்தின் தன்மைகளாகும் (attributes). பாருங்கள்? அவை பாவத்தின் காரணத்தால் உண்டாகின்றன. பாருங்கள். ஆனால் உண்மையான பாவம் என்பது அவிசுவாசமேயாகும். அவிசுவாசம்தான் பாவம் என்று பெயரிடப்பட்டு, அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையாக பாவம் என்பது அவிசுவாசமேயாகும். நீ விசுவாசியாயிருந்தால், இவைகளைச் செய்யமாட்டாய். ஆனால், நீ உன்னை எவ்வளவாகப் பரிசுத்தமாக்கிக்கொள்ளவும், பக்தியாக்கிக்கொள்ளவும் முயன்றாலும், இவைகளை நீ செய்வாயானால், நீ அவிசுவாசிதான். அது வேத பூர்வமாகும். 45இப்பொழுது எதையோவொன்றை அது இழந்துதவிக்கிறது. அது ஆரம்பத்தில் உண்டாயிருந்த நிலைக்குத் திரும்பிவர முயல்கிறது. ஒருவன் ஆழமான குழியில் விழுந்து, அதனின்று வெளிவர கஷ்டப்பட்டு முயற்சி செய்வதைக் கற்பனை செய்து பாருங்கள். அவன் எங்ஙனமாயினும் குழியிலிருந்து வெளிவர வேண்டும். அவன் சாதாரணமாக இருக்கவேண்டிய நிலையில் இல்லை. ஆகையால் அவன் பித்து பிடித்தவனைப் போன்று கதறியழுது சுவர்களின் மேலேறி வெளிவர முயல்வான். ஏனெனில் அவர்கள் ஆரம்பத்திலிருந்த நிலைக்குத் திரும்பி வரவேண்டுமென்று தவிக்கின்றனர். 46வியாதியால் பீடிக்கப்பட்டவரும், வலியால் அவதியுறுபவரும் வேதனையின் காரணமாக முனகித் தவிப்பதை நாம் காணலாம். ஒரு காலத்தில் அவர்கள் அவ்வாறு இருக்கவில்லை. ஆனால் அவர்கள் முனகுகின்றனர். ஏன்? அவர்கள் சாதாரணமாக இருக்கவேண்டிய நிலையில் இல்லை. அவர்களில் தவறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆரம்பத்திலிருந்த ஆரோக்கியமான நிலைக்கு வரவேண்டுமென்று துடிக்கின்றனர். 47வேதம் கூறுவது போல இயற்கையும், ஜனங்களும் “முனகித் தவித்து வேதனைப்படுகிறதென்றால்'' அவர்கள் இருக்க வேண்டிய நிலையில் இல்லையென்பதை அது காண்பிக்கின்றது. அவர்கள் அந்த நிலையிலிருந்து விழுந்து போயிருக்கின்றனர். இப்பொழுது இதற்கு விளக்கம் கூற நமக்கு யாரும் அவசியமில்லை. பாருங்கள்? அவர்கள் நித்திய ஜீவனிலிருந்து விழுந்திருக்கின்றனர் என்பதை நாமறிவோம்; ஏதேன் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் பாவத்தில் விழுந்த காரணத்தால் அவர்கள் நித்திய ஜீவனின் உரிமையை இழந்தனர்; அதன் விளைவாக அவர்கள் தங்கள் அதிகாரத்திலிருந்த சர்வ சிருஷ்டியையும் மரணத்திற்கு ஆளாக்கினர். ஆதாமின் காலத்திற்கு முன்பு ஒரு மரமும்கூட சாகவில்லை. அதற்கு முன்பு ஒரு மிருகமாவது சாகவில்லை. மரிக்காமல் இருக்கக்கூடியவர் ஒருவரேதான். அவர்தான் தேவன். ஏனெனில் அவர் நித்தியமானவர். நாம் மரிக்காமலிருக்கச் செய்யக்கூடியது நித்திய ஜீவன் ஒன்றுதான். நாம் தேவனுடைய புத்திரராயிருக்கவேண்டுமெனில் நமக்குள் நித்திய ஜீவனைப் பெற்றிருத்தல் வேண்டும். 48நான் காலை செய்தியில் கூறியதுபோன்று, நாம் பாவத்தில் மரிக்கும்போது, நம்முடைய பிறப்புரிமையை விற்றுப்போட்டு பிளவைக் கடந்து அப்பால் செல்லுகிறோம். அவ்விடத்தில் தேவன் நம்மை நெருங்க முடியாத அளவிற்கு பிளவின் மறுபுறத்திற்குச் சென்று விடுகின்றோம். ஆதாம் பாவத்தில் விழுந்தபோது, அவன் சர்வ சிருஷ்டிக்கும் மரணத்தைக் கொண்டு வந்தான். இப்பொழுது, அவனுடைய விருப்பப்படி எதுவேண்டுமானாலும் தெரிந்துகொள்வதற்கு அவனுக்கும் நம்மைப்போல் சுயாதீனம் அளிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் முன்னிலையில் இரண்டு மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்று நல்ல மரம், மற்றொன்று கெட்ட மரம். நம் ஒவ்வொருவருடைய முன்னிலையிலும் இவ்விரண்டு மரங்களும் வைக்கப்பட்டுள்ளன. பாருங்கள். தேவன் ஆதாமுக்கும் அல்லது ஏவாளுக்கும் மட்டும் அதை செய்ய வில்லை.... நீங்கள் நல்லது, அது அவர்களுடைய தவறாகும்'' என்று கூறலாம். இல்லை. இனிமேல் ஆதாமின் மேல் நாம் தவறை சுமத்த முடியாது. அது உங்கள் தவறு. ஏனெனில், தவறானதும், சரியானதும் உன் முன்னிலையில் இப்பொழுது வைக்கப்பட்டுள்ளதால், பொறுப்பு உன்னுடையதாகும். ஆதாமும் ஏவாளுமிருந்த அதே அடிப்படையில் நாமிருக்கிறோம். 49ஆனால், நாம் மீட்கப்பட்ட பின்னர், நாம் இனிமேல் எதையும் நாமாகவே தெரிந்துக்கொள்ள விரும்புவதில்லை. அவர் தெரிந்து கொள்ளுதலையே நாம் விரும்புகிறோம். பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது ஆதாமும் ஏவாளும் தாமாகவே தெரிந்துகொள்ள விரும்பினர். ஞானத்தைப் பெற்றுக் கொள்வதனால் என்ன நேரிடும் என்று காண அவர்கள் விழைந்தனர். அவர்கள் அதை ஆராய முற்பட்டு அதன் விளைவால் மரணம் எய்தினர். 50ஒரு மனிதன் மீட்கப்பட்ட பின்னர், அவன் கல்வியறிவு பெற வேண்டுமென்று கவலை கொள்வதில்லை. அவன் உலகத்தின் காரியங்களுக்காகவும் உலக ஞானத்திற்காகவும் இனி ஒருபோதும் கவலையுறுவதில்லை. அவன் தன் சுயமாக எதனையும் தெரிந்து கொள்ள முயல் வதில்லை; கிறிஸ்துவை அவன் தெரிந்துகொண்டான். அவ்வளவுதான். அதன் விளைவால் அவன் மீட்கப்பட்டு விட்டான். இனிமேல் அவன் தன்னை வழி நடத்திக்கொள்ள விரும்புவதில்லை. அவன் எங்கு செல்ல வேண்டுமென்றும், என்ன செய்ய வேண்டுமென்றும் யாரும் அவனுக்குப் போதிக்க அவன் விரும்புவதில்லை. அவன் காத்திருந்து தன்னை உண்டாக்கிய சிருஷ்டிகரின் தீர்மானத்தை அறிய விரும்புகிறான். பாருங்கள்? தன்னை உண்டாக்கின சிருஷ்டிகர் போகக் கட்டளையிடும் போது அவர் நாமத்தில் அவன் செல்கிறான். பாருங்கள்? ஆனால் ஞானத்தைத்தேடும் மனிதன், 'இந்த சபை நன்றாயிருந் தாலும், அங்கு அதிக சம்பளம் கொடுக்கின்றனர். ஆகையால் நான் அங்கு போகிறேன்' என்கிறான். பாருங்கள்? ஞானம் என்ன செய்கிற தென்று பாருங்கள். 51ஆதாம் தேவனுடைய வார்த்தையில் நிலை கொள்வதற்குப் பதிலாக தன் மனைவியின் விவேகத்திற்குச் செவி கொடுத்ததால் பாவஞ்செய்தான். அவளும் சாத்தானுடன் சேர்ந்து சிந்தித்து, விவேகித்து பிறகு அதை ஆதாமிற்கு முன்பாக வைத்தாள். ஆகவே, ஆதாம் தேவனுடைய வார்த்தையை தளரவிட்டு, தன் புத்திரபாகத்தை விற்றுப்போட் டான். அவன் தேவனுடன் கொண்டிருந்த ஐக்கியத்தையும், நித்திய ஜீவனின் உரிமையையும் இழந்தபோது, தன் சொத்துரிமையும்கூட அவன் இழந்துபோனான். 'இதைப் புசிக்கும் நாளில் நீ சாகவே சாவாய்' என்னும் தேவனுடைய வார்த்தை நினைவிருக்கட்டும். அவன் பூமியின் மேல் பரிபூரண அதிகாரம் கொண்டிருந்தான். அவன் தன் ஜீவனை இழந்தபோது, தன் ஜீவனிலிருந்த தன்னுடைய சொத்துரிமையையும் அவன் இழந்து போனான். பாருங்கள்? அவன் பூலோகத்தின் தேவனாய் இருந்தான். தேவன் அண்ட சராசரங்களின் தேவன். அவர் எங்குமுள்ளவர். அவர் புத்திரன் இப்பூமியை தன் சொந்த கட்டுக்குள் வைத்திருந்தான். அவன் பேசினான், அவன் பெயரிட்டான். அவன் இயற்கையை நிறுத்தினான். எது வேண்டுமானாலும் அவனால் செய்ய முடிந்தது. பாருங்கள்? ஆனால் பாவத்தில் விழுந்தபோது அந்த உரிமையை அவன் இழந்து போனான். இப்பொழுது இங்குள்ள “இந்த மலை பெயர்ந்து அப்புறம் செல்லட்டும்'' என்று ஆதாம் கட்டளையிட்டால் அது நடக்கும். ”இந்த மரம் பிடுங்கப்பட்டு, அங்கு நடப்படட்டும்'' என்று அவன் சொன்னால் அது நிறைவேறும். பாருங்கள்? ஏனெனில் அவன் நம்முடைய பிதா வாகிய தேவனுக்குக் கீழிருந்த ஒரு சிறிய தேவனாக, அவன் பூமியின் மேல் ஆதிக்கம் கொண்டிருந்தான். ஏனெனில் அவன் தேவனுடைய புத்திரனாயிருந்தான். 52இப்பொழுது இங்கு நாம் ஒரு நிமிடம் நிறுத்தி, ஒரு மகத்தான பிரசங்கத்தை செய்யலாமல்லவா! பாருங்கள்? ஓ! இரத்தமானது அங்கே அதை சுத்திகரித்திருக்குமானால், இப்பொழுது அதைக் குறித்து என்ன? பாருங்கள்? தேவனுடைய குமாரனாகிய இரண்டாம் ஆதாம் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள். பாருங்கள்? ''நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்,'' என்றார். பாருங்கள்? ஆதாம் பூமியின் மேலிருந்த தன் சுயாதீனத்தை இழந்து போனான். அது, அவன் யாருக்கு அதை விற்றுப் போட்டானோ அவன் ஆதிக்கத்தில் சென்றது - சாத்தான். அவன் தேவன் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தைப் பிசாசின் விவேகத்திற்காக விற்றுப்போட்டான். ஆகையால் அவன் பெற்றிருந்த நித்திய ஜீவன், ஜீவ விருட்சத்தின் மேல் அவனுக்கிருந்த உரிமை, பூலோகத்தின் மேலிருந்த உரிமை எல்லாவற்றையும் அவன் சாத்தானுக்கு விற்றுப்போட்டான். ஆதாம் அதை தன் கரத்தி லிருந்து சாத்தானுக்கு மாற்றிவிட்டான். ஆதலால் இந்த பூமியானது இப்பொழுது மாசடைந்ததாயுள்ளது. ஆதாம் பெற்றிருக்கவேண்டியதான இப்பூமியை ஆதாமின் வித்து அழித்துப்போட்டது. ஆதாமின் வித்து, அது சரி. பாருங்கள்? ஆகவே ஆதாமின் சந்ததிக்கு பூமியின் மேலிருந்த உரிமை பறிபோயிற்று. 53நான் வாழும் நிஸான் (Tucson) நாட்டில், மலையின் உச்சியில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் கீழே நோக்கியவனாக அவருடன்,300 வருடங்களுக்கு முன்பு வயோதிபனான பாப்பகோ (Papago) என்னும் அமெரிக்க இந்தியன், தன் மனைவியுடன் குழந்தைகளை முதுகில் சுமந்தவண்ணமாய் அங்கு வந்து குடியிருந்து, சமாதானமாய் வாழ்ந்த காலத்தைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அக்காலத்தில் அவர்கள் மத்தியில் விபச்சாரம், மது அருந்துதல், சூதாட்டம் போன்ற தீய பழக்கங்கள் ஏதும் காணப்பட வில்லை. அவர்கள் சுத்தமான வாழ்க்கையைக் கடைபிடித்தனர். அப்பொழுது ஓநாய் (Coyote) ஊளையிட்டுக் கொண்டே, தண்ணீருள்ள இடத்தைக் கடந்து ஒவ்வொரு இரவும் டூஸானுக்கு வரும். நதியின் கரையில் மரங்களும் (Mesquite), முட்செடிகளும் (Cactus) பூப்பூத்து அழகாகக் காணப்பட்டிருக்கும். யேகோவா பரலோகத்திலிருந்து இக்காட்சியைப் பார்த்து சந்தோஷம் கொண்டு புன்னகை செய்திருப்பார். ஆனால், வெள்ளையன் அங்கு வந்தவுடன் என்ன செய்தான்? அவன் முட்செடிகளையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு, மதுவைக் குடித்து தூர எறிந்த குப்பிகளினாலும் டப்பாக்களினாலும் அவ் விடத்தை அசுசிப்படுத்தினான். மேலும் அவன் நாட்டின் நற்பண்புகளைப் பாழாக்கினான். அமெரிக்க இந்தியருக்கு ஆகாரமாயிருந்த எருமைகளைக் கொன்றுபோட்டு, அவர்கள் ஆகாரமின்றித் தவிக்கச் செய்தான்' என்றேன். 54நான் டூம்ஸ்டோன் (Tombstone) என்னும் ஸ்தலத்திலுள்ள மியூ ஸியத்தில், ஜெரோனிமோ (Geronimo) என்ற அமெரிக்க இந்திய தலை வனின் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருக்கால் ஜெரோ னிமோ ஒரு துரோகி (Renegade) என்று உங்களில் அநேகர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு உண்மையான அமெரிக்கனாகும். அவன் தன் உரிமைக்காக சண்டையிட்டான். தேவன் அவனுக்கு ஒரு நாட்டை, அவன் தங்குவதற்குரிய இடத்தைக் கொடுத் திருந்தார். நான் அவனைக் குறை கூறமாட்டேன். ஆனால் வெள்ளைக்கார போர்வீரர்கள் அமெரிக்க இந்தியர்களை ஈக்களைக் கொல்வதைப்போல் கொன்றுப்போட்டு, பலாத்காரமாக நாட்டைக் கைப்பற்றினர். ஜெரோனி மோவின் வைத்தியசாலையை நான் படத்தில் கண்டேன். அது ஒரு மரத்தின்மேல் மூன்று துப்பட்டிகள் விரிக்கப்பட்ட ஒரு கூடாரமாய் இருந்தது. தேவன் தங்களுக்குக் கொடுத்த உரிமைக்காக போரிட்டு, காயப்படட்ட உண்மையான அமெரிக்கர்கள் (அதாவது அமெரிக்க இந்தியர்கள்) அங்கு கொண்டுவரப்பட்டனர். ஜெரோனிமோ ஒரு குழந்தையை இடுப்பிலும், ஒரு குழந்தையைத் தோளிலும் சுமந்தவனாய், யுத்த வீரர்கள் இரத்தம் பீறிட, அவர்களைக் காப்பாற்ற பெனிசிலின் போன்ற மருந்துகள் இல்லாமல் அவர்கள் பரிதாபமாய் மரிப்பதைக் காண்பதைப் போன்ற ஒரு படமுண்டு, அவனைத் துரோகியென்று நீங்கள் அழைக்கிறீர்கள். நான் அவனைச் சான்றோன் என அழைக்கிறேன். 55கோகைஸ் (Cochise) என்னும் அமெரிக்க இந்தியன் வெள்ளையர்களுக்குப் பணிந்திருக்கமாட்டான். அவன் ஒரு வயோதிபன். ஆனால் அமெரிக்க இராணுவத்தினர் அங்கு சென்று எருமைகளைக் கொன்று போடுவர், அவைகளைச் சுடுவதற்கென துப்பாக்கியை ஷார்ப் (Sharpe) என்பவர் கண்டுபிடித்தார். அவர்கள், 'இன்றைக்கு ஒரு நல்ல நாள். நான் நாற்பது எருமைகளை கொன்றேன்' என்று பெருமைக் கொள்வார்கள். அந்த நாற்பது எருமைகள் அமெரிக்க இந்தியர் எல்லாருக்கும் இரண்டு வருட காலத்திற்குப் போதிய உணவாக இருந்திருக்கும். வெள்ளையர்கள் கொன்ற எருமைகளை என்ன செய்தனர்? அவைகளின் உடல்களை வனாந்தரத்தில் அப்படியே விட்டுவிட்டனர். அவை அழுகிப்போய், துர்நாற்றம் நாடு முழுவதும் பரவினது. ஓநாய்கள், அவைகளைத் தின்றன. 56ஆனால் அமெரிக்க இந்தியர் ஒரு எருமையைக் கொன்றால், அப்பொழுது மதசம்பந்தமான ஒரு சடங்கு உண்டாகும். அவர்கள் குளம்புகளை எடுத்து தட்டுகள் உண்டாக்குவார்கள். அதன் மாமிசத்தை அவர்கள் புசிப்பார்கள். அவர்கள் மாமிசத்தை தொங்கவிட்டு உலரவைப்பார்கள். அதன் தோலை அவர்கள் உலர்த்தி ஆடைகளும், கூடாரங்களும் உண் டாக்குவார்கள். அதன் எல்லா பாகங்களையும் அவர்கள் உபயோகித்தனர். ஆனால் வெள்ளையன் வந்தபோதோ.... அவன்தான் துரோகி, அவன்தான் அயோக்கியன். அவன் எருமைகளைக் கொன்று போட்டு அமெரிக்க இந்தியர்களைப் பட்டினியிட்டான். உத்தமமான எவனும் தேவன் தனக்களித்த உரிமைக்காகப் போராடுவான். அமெரிக்க இந்தியர்களுக்கு வெள்ளையர் செய்தவை, அமெரிக்க நாட்டின் கொடியின் மேல் மாசு படிந்துவிட்டது. இந்த நாடு அமெரிக்க இந்தியர்களைச் சேர்ந்தது. ஜப்பான் நாடாவது அல்லது ருஷியாவாவது அமெரிக்காவை அடைந்து, 'நீங்கள் வெளியேறுங்கள்' என்று நம்மிடம் சொல்லி நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் நாம் அமெரிக்க இந்தியருக்குச் செய்தது போன்று செய்தால் எப்படியிருக்கும் என்று ஆலோசியுங்கள். நாம் விதைத்தோம், அதை இப்பொழுது நாம் அறுக்கப்போகிறோம் என்பது நினைவிருக்கட்டும். அதுதான் தேவனுடைய நியதி. நடுவ தற்கும் ஒரு காலம் உண்டு. அறுவடைக்கும் ஒருகாலம் உண்டு. நாம் செய்தது மிகவும் மோசமான ஒரு காரியம். ஆம் ஐயா. 57இப்பொழுது என்ன நேர்ந்தது? ஆதாமின் கறைபடிந்த சந்ததி மாசுபடுத்தி நாட்டை அழித்தனர். அவ்வாறு வேதம் கூறுவதை நீங்கள் அறிவீர்களா? ஆதாமின் கறைபடிந்த சந்ததி அவ்விதம் செய்ததால், தேவன் அவர்களை அழித்துப்போடுவார். அதை வேதத்திலிருந்து படிக்க விரும்புகிறீர்களா? நாம் அதைப் பார்ப்போம். அந்த வசனத்தை நான் குறித்து வைத்திருக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதி காரத்திற்கு நாம் வேதத்தை திருப்பினால், நாம் அதைக் காணலாம். பூமியைக் கெடுப்பவரைக் குறித்து தேவன் என்ன கூறுகின்றார் என்பதை நாம் காணலாம். 11-ம் அதிகாரம் 18-ம் வசனம். அது 11:18 என்று நான் நம்புகிறேன். இதோ நாம் இங்கே.... ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; (தேவன் கோபமடைவதைக் கவனியுங்கள்) மரித்தோர் நியாயத் தீர்ப்படைவதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும், பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரி யோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் காலம் வந்தது. வெளி. 11:18. 58அவர்கள் என்ன செய்யப் போகின்றனர்? அவர்கள் விதைத்ததை நிச்சயம் அறுக்கப் போகின்றனர். தெருக்களில் பாவம் நடமாடுவதைக் காணும்போது... இன்றைய ஞாயிறு இரவில் எத்தனைப்பேர் விபசாரங்களில் ஈடுபட்டிருப்பர்! ஜெபர்ஸன்வில் என்னும் இச்சிறுபட்டணத்தில் எத்தனைப் பெண்கள் தங்கள் விவாகப் பொருத்தனையை மீறியிருப் பார்கள்? சிக்காகோவில் முப்பது நாட்களுக்குள் வைத்திய சாலைகளில் குறிக்கப்பட்டுள்ள கருச்சிதைவுகளின் எண்ணிக்கை எத்தனை என்று நினைக்கிறீர்கள்? குறிக்கப்பட்டவை மாத்திரம் ஒரு மாதத்தில் இருபத்தை யாயிரம் முதல் முப்பதாயிரம் வரை (25,000 to 30,000). இவையன்றி குறிக்கப்படாதவை எத்தனையோ உண்டாகும். இன்று சிக்காகோ பட்டிணத்தில் அருந்தப்பட்ட மதுவின் அளவு எவ்வளவாயிருக்கும்? ஒரே ஒரு இரவில் லாஸ் ஏஞ்ஜல்ஸ் (Los Angeles) பட்டிணத்தில் என்ன வெல்லாம் நிகழ்கின்றன! எத்தனை முறை தேவனுடைய நாமம் ஜெபர் ஸன்வில் பட்டிணத்தில் வீணாக வழங்கப்பட்டுள்ளது? ஜார்ஜ் ரோஜர்ஸ் கிளார்க் (George Rogers Clarke) என்பவர் தோணியில் இங்கு இறங் கினபோது எல்லாம் சிறப்பாயிருந்தனவா? அல்லது இப்பொழுது அக் காலத்தைக் காட்டிலும் சிறப்பாயிருக்கின்றனவா? நீங்கள் பாருங்கள்? நாம் இப்பூமியை நம் முறைகேட்டினால் முற்றிலும் மாசுபடுத்தி விட்0டோம். பூமியைக் கெடுத்தவர்களை தேவன் அழித்துப்போடுவார். தேவன் அவ்விதமாக உரைத்துள்ளார். மலையுச்சிக்குச் சென்று, தேவன் இயற்கையை எவ்விதம் சிருஷ்டித் தாரோ அவ்விதம் அதைக் காணவேண்டுமென்ற வாஞ்சை எனக்குள் எப்பொழுதும் உண்டு. 59பிளாரிடாவில் (Florida) செயற்கை பனைமரங்களை வைத்துள்ளனர். அதை நான் வெறுக்கிறேன். ஹாலிவுட்டில் (Holywood) பகட்டையும், அங்குள்ள குடிகாரரையும் செயற்கையாக செய்யப் பட்டுள்ள வசீகரமான காட்சிகளைக் காண்பதைப் பார்க்கிலும், ஒரு முதலை தன் வாலையிழுப்பதைக்காண நாம் விரும்புகிறேன். ஓ! ஏதாவது ஒரு நாளில்.... ஆம். 60சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று மத்தேயு 5-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அது சரி. சாந்தகுண முள்ளவர்களும் தாழ்மையுள்ளவர்களும் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள். ''சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்'' என்று இயேசு கூறியுள்ளார். இவர்கள் சாதாரணமானவர்கள்; இவர்கள் தங்களைப் பெரியவர்களாகக் காண்பித்துக்கொள்ள முனைவதில்லை. “அவர்களே பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள்'' என்று இயேசு கூறினார். அவர்கள் பூமியைக் கெடுத்துப் போட்டார்கள். தேவன் அவர்களை அழித்துப்போடு வார். ஆனால் பூமி சுத்தமாக்கப்பட்ட பின்னர் சாந்த குணமுள்ளவர்கள் அதை சுதந்தரித்துக் கொள்வார்கள். ஆம். 61ஓ... என்னே ! ஆதாம் இழந்துபோன அந்த உரிமைப் பத்திரம் இப்பொழுது அதற்கு மூல சொந்தக்காரரான சர்வ வல்லமையுள்ள தேவனின் கைகளில் உள்ளது. அது பூமிக்கும், நித்திய ஜீவனுக்கும் உரிமை பத்திரமாக இருந்தது. ஆதாம் அதை இழந்தபோது, சாத்தானின் அசுத்த கரங்கள் அதை எடுத்துக்கொள்ள முடியவில்லை. அது மூலச்சொந்தக்காரரான தேவனை அடைந்தது. நாம் இன்னும் ஒரு நிமிடத்தில் அதைக் காணப் போகிறோம். அந்த உரிமைப் பத்திரத்தைக் கையில் பிடித்தவாறு அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை இருமுறை தட்டுகிறார் -ஆசி) அதை நினைக் கையில் நான் பக்தி வசப்படுகிறேன். ஆம், நித்திய ஜீவனின் உரிமைப் பத்திரம். ஆதாம் விசுவாசத்திற்கு பதிலாக ஞானத்தைத் தெரிந்து கொண்ட காரணத்தினால் அதை இழந்து போனபோது, அது அதன் சொந்தக்காரரான சர்வ வல்லமையுள்ள தேவனின் கரங்களையடைந்தது. என்ன ஒரு பெரிய காரியம்! அது சரி, காத்திருத்தல். எதற்காக? அது தேவனுடைய கரங்களில் மீட்பின் உரிமையைக் கோருபவர்க்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. தேவன் மீட்பிற்கென்று ஒரு வழியை உண்டு பண்ணினார். ஒரு நாளில் மீட்பர் அந்தப் புஸ்தகத்தை தேவனுடைய கரத்திலிருந்து வாங்கிக்கொள்வார். நாம் இப்பொழுது எங்கு வந்திருக்கிறோம் என்று புரிகிறதா? சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரைச் சற்று கவனிப்போம். சரி. மீட்பின் உரிமைக்காக காத்துக்கொண்டிருத்தல் - அதுதான் மீட்பு. 62அந்த மீட்பின் புஸ்தகம், உரிமைப் பத்திரம், சாராம்ச (abstract) உரிமைப் பத்திரம் என்ன? “சாராம்சம்'' (abstract) என்னும் பதத்திற்கு அர்த்தமென்ன? ஆரம்பத்தில் அது எவ்விதம் உண்டாயிருந்ததோ அதை ஆராய முற்படுதல். நாம் இன்று காலை சிந்தித்த அந்த சிறு துளியைப் போன்று அது வெண்மையாக்கும் திரவத்தில் விழுந்தவுடன், அது மூலப் பொருளாக மாறி மறைந்துவிட்டது. அவ்வாறே பாவமும் அறிக்கை யிடப்பட்டு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் விழுந்த மாத்திரத்தில், ஓ... என்னே! அது சிருஷ்டி கர்த்தரிடமுள்ள உரிமையை மறுபடியும் திரும்ப அளிக்கிறது. நீயும் தேவனுடைய புத்திரனாக ஆகின்றாய் - சர்வ வல்லவரின் கரங்களிலுள்ள உரிமைப் பத்திரம். ஓ... என்னே ! 63அதன் மீட்பு என்பது ஆதாமும், ஏவாளும் இழந்த எல்லா உரிமை களையும் நாம் திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்பதாகும். ஓ... என்னே! (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை ஒரு முறை கொட்டுகிறார்) மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனுக்கு இது எத்தகைய ஊக்கத்தை அளிக்க வேண்டும்! நித்திய ஜீவனின் உரிமைப் பத்திரத்தை நாம் சட்ட ரீதியாக பெறும்போது, ஆதாமும், ஏவாளும் இழந்த அத்தனையும் நீ பெற்றுக் கொள்கின்றாய், வ்யூ! சகோதரனே, அந்த உரிமைப் பத்திரம் பெறுவதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? ஆதாம் மீட்பிற்கு அவசியமானவைகளைப் பெற்றிருக்கவில்லை. அவன் பாவம் செய்ததனால்தான் அதை இழந்து போனதைக் கண்டபின், தேவனிடத்திலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு பிளவிற்கு அப்புறம் சென்றுவிட்டான். ஆகையால் அவனால் அதை மீட்கமுடியவில்லை. ஆனால் மீட்பு அவனுக்கே அவசியமாயிருந்தது. ஆகையால் அவனால் அதைச் செய்ய முடியவில்லை. 64ஆனால் பிரமாணத்தின்படி ஒரு மீட்பின் இனத்தான் அவசிமா யிருந்தது. தேவனுடைய பிரமாணத்தின்படி, மீட்கும் இனத்தான் (Kinsman Redeemer) ஒருவன் அவசியம். அது லேவியராகமம் 25-ம் அதிகாரத்தில் காணப்படுகின்றது. குறித்துக் கொள்ள விரும்புகிறவர்கள் குறித்துக்கொள்ளவும். 122, அதை ஆராய்வதற்கு நமக்கு போதிய சமயமில்லை. ஏனெனில் ஒவ்வொரு பொருளின் மீதும் பேச நமக்கு ஒரு இரவு அவசியம் தேவைப்படுகிறது. பாருங்கள்? ஆனால் தேவனுடைய பிரமாணம், மீட்பதற்காக வேறொருவரை (Substitute) ஏற்றுக்கொள்ள அனுமதித்தது. வேறொருவரை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்திருக்கலாம். ஆனால் அவரோ நம்மேல் வைத்த அன்பின் காரணமாக அதை ஏற்றுக்கொண்டார். மனிதன் பாவத்தில் விழுந்தான். அவன் திரும்பிச் செல்ல வழியற்றவனாயிருந்தான். அவன் திரும்பிச் செல்வதற்கு ஒரு வழியும் இல்லை. அவன் தொலைந்து போனான். ஆனால் தேவனுடைய கிருபையோ இயேசுகிறிஸ்து என்னப்பட்டவரில் மீட்கும் இனத்தானைச் சந்தித்தது. பிரமாணத்திற்கு அது அவசியமாயிருந் தது. கிருபை அந்த அவசியத்தை நிறைவேற்றியது. ஓ! ஆச்சரியமான கிருபை. கேட்பதற்கு எவ்வளவு இனிமையாயிருக்கிறது. தேவனுடைய பிரமாணத்தின்படி, குற்றமற்ற ஒருவர் பாவம் செய்தவனுக்குப் பதிலாக அவசியமாயிருக்கிறார். 65ஆகையால் யார் குற்றமற்றவர்? ஒவ்வொரு மனிதனும் ஆண், பெண் சேர்க்கையின் மூலம் பிறந்தவன். அவ்வாறு பிறக்காத ஆதாம், அவனுக்குண்டாயிருந்த நித்திய ஜீவனின் உரிமையையும் இப்பூமியின் அரசனாக இருக்கும் உரிமையையும் பறிகொடுத்தான். ஓ, “எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்னும் வேத வாக்கியத்தை நினைக்கும்போது... ஓ... என்னே! என்ன? மீட்கும் இனத்தான்! ஓ... இங்கே மிக அருமையான கதை ஒன்று நமக்குள்ள தல்லவா? கவனியுங்கள், பாவத்தில் விழுந்த ஒருவனை மீட்டெடுக்க ஒரு மீட்கும் இனத்தான் தேவை. இந்த தேவையைக் கிருபை என்னப்பட்டது இயேசு கிறிஸ்து என்பவரின் மூலமாய் பூர்த்திசெய்தது. மானிட வர்க்கத் தில் இனத்தான் ஒருவர் பிறக்கவேண்டும். 66இப்பொழுது ஒவ்வொரு மனிதனும் இவ்விதமாக... நாம் எப்படி இருக்க முடியும்? பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயினிடத்தில் பிறந்தவனே. இது இனச்சேர்க்கையினால் உண்டானது என்று காணக் கூடாத ஒவ்வொருவனும் முற்றிலும் குருடனாயிருக்கிறான். பாருங்கள்? தேவன்... ஒரு மீட்பின் இனத்தான் அவசியமாயிருந்தது. அவன் மானிடனாயிருக்க வேண்டும். ஓ... என்னே! நீ இப்பொழுது என்ன செய்யப்போகின்றாய்? பிரமாணத்திற்கு ஒரு மீட்கும் இனத்தான் தேவை யாயிருந்தது. இப்பொழுது, அவர் இதற்கென்று ஒரு தேவதூதனைத் தெரிந்து கொள்ள இயலாது. நாம் தேவ தூதனுக்கு இனத்தாரல்ல. ஆகையால் அது ஒரு மனிதனாக இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் இனத் தாராகியிருக்கிறோம். தேவதூதன் பாவத்தில் விழவில்லை. அவன் வித்தியாசமான சரீரமுடையவன். அவன் பாவம் எதுவும் செய்யவில்லை. அவன் வித்தியாசமானவன். ஆனால் தேவனுடைய பிரமாணத்தின்படி ஒரு மீட்கும் இனத்தான் அவசியம். 67ஆனால் பூமியில் பிறந்த ஒவ்வொருவனும் இனச் சேர்க்கையினால் உண்டானவன். ஏதேன் தோட்டத்தில் பாவம் எங்ஙனம் தோன்றியது என்பதைக் காண முடிகிறதா? இனச்சேர்க்கையின் மூலமே பாவம் தொடங்கியது. அது இப்பொழுது எங்குள்ளது என்று உங்களால் காணமுடிகின்றதா? அங்குதான் சர்ப்பத்தின் வித்து தோன்றியது. பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். பிரமாணத்திற்கு ஒரு மீட்கும் இனத் தான் அவசியமாயிருந்தது. அந்த மீட்கும் இனத்தான் மானிட வர்க்கத் தில் பிறந்தவனாயிருக்க வேண்டும். இங்கே, அது நம்மை திகைப்பில் விடுகிறது. ஆனால் நான் உங்களுக்கு எக்காள தொனியை எழுப்பட்டும். கன்னிப்பிறப்பு அதை உற்பவித்தது. ஆமென். கன்னியின் மூலம் நேர்ந்த பிறப்புதான் 'மீட்கும் இனத்தானை'த் தோன்றச் செய்தது. சர்வ வல்லமையுள்ள தேவனே இம்மானுவேலாக நம்மில் ஒருவரானார். இம்மானுவேல்! மீட்கும் இனத்தானைக் குறித்த பிரமாணம் நிறைவேற்றப்பட்டது. தேவன் எவ்வாறு தேவைகளைப் பூர்த்தி செய்கிறார் என்று பாருங்கள். நாமாகவே இதைச் செய்யமுடியாது. ஆனால் கிருபை அங்கு தோன்றி, பிர மாணத்தை மேற்கொண்டு, அந்த விளைபயனை (Product) உண்டாக்கு கிறது. ஆமென். (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை ஒரு முறை தட்டுகிறார் -ஆசி). 68நீங்கள் பரம் வீட்டிற்குச் செல்லும்போது... சகோ. நெவில் பாடிய வண்ணம் 'என் சிறு அறையை நான் அங்கு பெறும்போது அங்கு ஒரு காலை, 'அதிசயமான கிருபை, கேட்பதற்கு எவ்வளவு இனிமை, என்னைப் போன்ற ஈனனை இரட்சித்தது' என்னும் பாட்டு பாடுவதை நீங்கள் கேட் கும்போது, 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சகோ. பிரான்ஹாம் அந்த ஸ்தலத்தை அடைந்துவிட்டார்' 'இதோ அங்கே இருக்கிறார்' என்று நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். ஆம். ஓ! என் இருதயம் பயப்படும்படி போதித்தது அந்த கிருபையே. என் பயங்களைப் போக்கினதும் அந்த கிருபையே. எவ்வளவு விலையேறப் பெற்றதாய் தோன்றுகிறது. அந்த கிருபை நான் விசுவாசித்த அந்த முதல் மணியிலே... இன்னும் சிறிது நேரத்தில் நாம் அப்பகுதிக்கு வரும்வரை காத்திருங்கள். ஓ, என்னே! இப்பொழுது கவனியுங்கள். அந்த புஸ்தகம்... 69ரூத்தின் புத்தகம் இதனை அழகாகச் சித்தரிக்கிறது. நகோமி தன் சொத்துக்களை இழந்துவிட்டாள். எத்தனைப் பேர் இதைப்பற்றி நான் முன்பு பிரசங்கித்ததைக் கேட்டிருக்கிறீர்கள்? அப்படியானால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். ஆகவே உங்களால் புரிந்து கொள்ள முடி கின்றது. பாருங்கள்? போவாஸ் அவளுடைய நெருங்கிய இனத்தான். ஆகவே அவன் மீட்கும் இனத்தானாக ஆக வேண்டியிருந்தது. அவன் நகோமியை மீட்டு ரூத்தைப் பெற்றுக்கொண்டான். போவாஸ் இயேசு வுக்கு அடையாளமாய் இருக்கிறான். அவர் இஸ்ரவேலை மீட்டு புறஜாதி மணவாட்டியைப் பெற்றார். இது எவ்வளவு அழகாயுள்ளது என்பதை நீங்கள் பாருங்கள். நான் இந்தப் பொருளின் மேல் நிகழ்த்திய பிரசங்கம் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் அந்த ஒலி நாடாவை வாங்கிக்கொள்ளலாம். 70இப்பொழுது கவனியுங்கள். அவன் மீட்கும் இனத்தானாயிருக்க வேண்டும். ஒரு தேவதூதனால் அதைச் செய்ய முடியாது. நீங்கள் பாருங்கள். ஒரு மனிதனால் அதைச் செய்ய முடியாது. அவன் ஸ்திரீயினி டத்தில் இனச் சேர்க்கையின் மூலம் பிறவாத மனிதனாக இருக்க வேண் டும். ஆகவே, கன்னியின் மூலம் பிறந்த ஒருவர்தான் மீட்கும் இனத் தானாக இருக்க முடியும். பரிசுத்த ஆவியானவர் மரியாளை நிழலிட்டார். அதன் மூலம் இயேசு கன்னியின் வயிற்றில் தோன்றினார். ஆகையால், இயேசு யூதனல்ல, அவர் புறஜாதியானுமல்ல. இயேசு தேவனாயிருந்தார். அது உண்மை . அவருடைய இரத்தம் இன சேர்க்கையினால் உண்டாக வில்லை. அது பரிசுத்தமாக உண்டாக்கப்பட்ட தேவனுடைய இரத்தம். நாம் யூதனின் இரத்தத்தினால் இரட்சிக்கப்படவில்லை. அவ்வாறே நாம் புறஜாதியானின் இரத்தத்தினாலும் இரட்சிக்கப்படவில்லை. நாம் தேவனு டைய இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டோம். நான் கூறுவது வேதப் பூர்வ மாக அமைந்துள்ளது. வேதம் அவ்வாறே கூறுகிறது. 71ஆகையால், நீங்கள் பாருங்கள். இயேசு தேவனாயிருந்தார். அவர் மூன்றாம் ஆள், நாலாவது ஆள், அல்லது இரண்டாவது ஆள் அல்ல. அவரே அந்த நபர். அவர் தேவன், பாருங்கள், அவர் தேவன், இம்மானுவேல். தேவன் மகிமையை விட்டு இறங்கி தம்மை வெளிப் படுத்தினார். பூத்-கிளிப்பர்ன் (Booth-Clibborn) எழுதிய அந்த கதை அந்த அழகான ஞானப்பாட்டு எனக்கு மிகவும் விருப்பம். மகிமையை விட்டு ஜீவனுள்ள வரலாறாக என் தேவனும் இரட்சகருமானவர் இறங்கி வந்தார் இயேசுவென்பது அவருடைய நாமம் தொழுவத்தில் பிறந்தார் அவர் சொந்தமானவர்க்கு அன்னியரானார் துக்கம் நிறைந்தவரும், கண்ணீரும் துன்பமும் நிறைந்த மனிதனவர் ஓ! நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவர என்னே ஒரு தாழ்த்துதல் நள்ளிரவில், நம்பிக்கை சற்றேனும் இல்லாதநேரத்தில் கிருபையும் மென்மை இருதயமுமுள்ள தேவன் தமது ஒளியை தள்ளிவைத்து என் ஆத்துமாவை இரட்சிக்க என்னைத் தேடி வந்தார். ஓ, எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்! எவ்வளவாய் அவரை மதிக்கிறேன் என் மூச்சும், என் வெளிச்சமும், எனக்குள்ள எல்லாமே அவரை மதிக்கின்றன. மகத்தான மீட்பர் என் இரட்சகரானார் மகத்தான சிருஷ்டிகர் என் இரட்சகரானார் தேவனுடைய பரிபூணம் அவருக்குள் வாசமாயிருந்தது. 72அவர்தான் தேவையை சந்தித்ததார். கிருபையானது இயேசு கிறிஸ்து என்பவரைப் பிறப்பித்தது. நாம் காண்கிறோம் இந்த புஸ்தக மானது... தேவன் தம் கூடாரத்தை விசாலமாக்கி, தேவனிடத்திலிருந்து வந்து மனிதனாகப் பிறந்தார். தேவன் மனிதனாகும்படியாக தம்முடைய சர்வ வல்லமையிலிருந்து மாறினார். மனிதனை மீட்பதற்கென்று அவர் மரிக்கும்படியாக மனித ரூபம் கொண்டு வந்தார். அவரைக் காணும் வரை சற்று பொறுத்திருங்கள். அந்த புஸ்தகத்தைத் திறக்க வேறுயாரும் பாத்திரவானாயில்லை. பாருங்கள்? சரி. 73ரூத்தின் புத்தகத்தில் நீங்கள் படிக்கையில் மீட்கும் இனத்தான் 'கோயல்' (Goel) என்று அழைக்கப்படுகிறான் என்பதைக் காண்பீர்கள். அவன் மீட்பதற்கு மனமுள்ளவனாய் இருக்கவேண்டும். 'கோயல்' என்று அழைக்கப்படுபவன், அதற்கான தகுதிகளை சந்திக்க வேண்டிய நபரா யிருக்க வேண்டும். அவன் அதைச் செய்ய தகுதியுடையவனாயிருக்க வேண்டும். அவன் மிகவும் நெருங்கிய இனத்தானாயிருக்க வேண்டும். ஆவியாகிய சிருஷ்டிகரான தேவன் (God, the Creator of Spirit) நம் பாவத்தைச் சுமந்து, கிரயத்தைச் செலுத்தி, நம்மை மறுபடியும் தேவனிடத்தில் சேர்க்க விரும்பி, அவர் நம் இனத்தானான மனிதனானார். அவர்தான். அவர்தான் அந்த மீட்பர். 74கிறிஸ்து நம்மை இப்பொழுது மீட்டுக்கொண்டார். இப்பொழுது நாமெல்லோரும் மீட்கப்பட்டோம். ஆனால் அவருடைய உரிமையை அவர் இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை. ஒருக்கால் நான் சொல்வது தவறு என்று நீங்கள் எண்ணலாம், ஆனால் ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். நாம் அதைக் காணலாம். பாருங்கள்? அவர் இன்னும் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. பாருங்கள்? அவர் மீட்பின் புஸ்தகத்தை வாங்கும்போது ஆதாம் வைத்திருந்து இழந்த அனைத்தையும் அவர் மீட்டுக் கொள்ளுகிறார். அவர் ஏற்கனவே நம்மை மீட்டெடுத்து விட்டார். ஆனால் அவர் தம் உடைமைகளை இன்னமும் எடுத்துக் கொள்ள வில்லை. அதற்கென்று குறிக்கப்பட்ட சமயம் வரும்வரை அவர் அவ்விதம் செய்ய முடியாது. அதன் பின்பு உயிர்த்தெழுதல் சம்பவிக்கும். பின்னர் பூமி மறுபடியும் புதுப்பிக்கப்படும். அப்பொழுது அவர் தம் உடைமைகளைப் பெற்றுக்கொள்வார். நம்மை மீட்டெடுத்தபோது அவருக்குக் கிடைத்த உடமை. ஆனால் குறித்த நேரத்தில் அவர் அதைச் செய்வார்... ஓ... என்னே ! 75இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருக்கும் ஏழு முத்திரைகளைக் கொண்ட மீட்பின் புஸ்தகத்தில் இது விவரிக்கப்பட்டுள்ளது. சரி. இவைகள் யாவும் இங்கே மீட்பின் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. தேவனுக்குச் சித்தமானால் கிறிஸ்து முடிவில் என்ன செய்வாரென்பது இவ்வாரம் ஏழு முத்திரைகள் உடைக்கப்படும்போது வெளிப்படும். பாருங்கள்? சரி. அது வெளிப்படுத்தப்படும். அது வெளிப்படுத்தப் படும்பொழுது, தேவனுடைய மகத்தான மீட்பின் திட்டம் என்னவென் றும், அது எங்ஙனம் நிகழுமென்றும், அது எப்பொழுது சம்பவிக்கு மென்றும் நாம் அறிந்துக் கொள்ளலாம். அவையெல்லாம் இப்புஸ்தகத் தில் எழுதப்பட்டு ஏழு முத்திரைகளால் மறைக்கப்பட்டுள்ளது. ஆட்டுக் குட்டியானவர் ஒருவர் மாத்திரமே முத்திரிக்கப்பட்டுள்ள அந்த முத்தி ரைகளை உடைக்க முடியும். இப்பொழுது... (சகோதரன் பிரான்ஹாமின் கவனம் ஏதோ ஒன்றி னால் திருப்பப்படுகிறது -ஆசி) மன்னிக்கவும். நாம் அறிந்து கொள்ளு கிறோம்... 76இப்பொழுது, நீங்கள் வேதத்தில் கவனிக்க விரும்பினால், எரேமி யாவின் புஸ்தகத்தை நீங்கள் வாசித்தால், அதை அங்கே காணலாம். எரேமியா அடிமையாகக் கொண்டு செல்லப்பட்டபோது, அவன் தன் பெரிய தகப்பனின் நிலத்தை... மகனிடத்திலிருந்து நிலத்தை வாங்கினான். அது முத்திரிக்கப்பட்டது. நாம் அவைகளை எடுப்போமானால்... அது முத்திரிக்கப்பட்டதையும், மற்றவற்றையும் நாம் ஏழு சபையின் காலங்களின் புஸ்தகத்தில் கண்டோம். நீங்கள் பாருங்கள்? பழைய ஏற்பாட்டின் காலத்தில் எல்லா சம்பவங்களும் சுருள்களில் எழுதப்பட்டன. (சகோதரன் பிரான்ஹாம் இப்பொழுது சுருள் என்ன என்றும், முத்திரிக்கப்படுதல் என்ன என்றும் சுருள் திறக்கப்படுதலையும் விளக்க காகிதத் தாள்களை உபயோகிக் கிறார்-ஆசி) அங்கே ஒரு இரகசியம் எழுதப்பட்டு, அது சுருட்டப்பட்டு மறைந்திருக்கும். அது இன்னாருக்கு சொந்தம் என்று எழுதப்பட்டு, சுருட்டப்பட்டு, முத்திரிக்கப்பட்டிருக்கும். பின்னர் வேறொரு இரக சியம்-இது இன்னாரின் உரிமையாகும் என்று எழுதப்பட்டு, சுருட்டப் பட்டு வேறொரு பாகத்தில் முத்திரிக்கப்பட்டிருக்கும். இவ்விதம் அநேக காரியங்கள் எழுதப்பட்டு, அது சுருளாக (Scroll) சுருட்டப்பட்டிருக்கும். இப்பொழுது நமக்குள்ளது போன்று அக்காலத்தில் எழுதி வைக்க புத்தகங்கள் கிடையாது. சுருளில்தான் அவை எழுதி வைக்கப்படும். (உங்களில் எத்தனை பேர் அதை அறிவீர்கள்?) முத்திரிக்கப்பட்ட சுருளாக அது இருந்ததால், ஒரு முத்திரையை உடைத்து, அதற்குள் எழுதப்பட் டிருக்கும் இரகசியத்தை அறிந்து கொள்ளலாம். அவ்விதமாகவே மற்றொரு முத்திரையை உடைத்து, அதனுள் அடங்கியிருக்கும் இரகசியத்தைக் காணலாம். 77இப்புஸ்தகத்தில் உலகத் தோற்றத்துக்கு முன்னிருந்த இரகசி யங்கள் எழுதப்பட்டு, அது ஏழு வித்தியாசமான முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முத்திரையை நாம் உடைக்கும்போதும் அதனுள் எழுதப்பட்டுள்ள இரகசியத்தை நாம் அறியலாம். தேவனுக்குச் சித்தமானால் இம்முத்திரைகளை அவர் நம்மை அவிழ்க்கும்படி செய்ய புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் இரகசியங்களை நாம் அறிய முற்படு வோம். பாருங்கள்? நமக்கு இது ஒரு மகத்தான தருணமாயிருக்கும் என்று நம்புகிறேன். மீட்பின் இரகசியங்கள் யாவும் அங்கே.... வரை யிலும் முத்திரிக்கப்பட்டுள்ளன. மீட்பின் இரகசியம் கொண்ட புஸ்தகம் கடைசி தூதனின் செய்தி அளிக்கப்படும்வரை திறக்கப்படுவதில்லை. சுருள் அங்கே உள்ளது? அது எங்கே இருந்தது என்று நாம் அறிந்தோம். அது மீட்பு என்பதை நாம் அறிகிறோம். அது மீட்பாயிருந்தது என்று நாம் விசுவாசித்தோம். எரேமியா, 'அந்தச் சுருள் ஒரு மண் பாண்டத்தினுள் வைக்கப்பட வேண்டும்' என்கிறான். அவர் ஒரு பூமிக்குரிய பாண்டத்தில் வைக்கப்பட வேண்டும் (He must be kept in an earthly vessel). அது எவ்வளவு ஒரு அழகான காரியம்! பாருங்கள்? சற்று நேரம் அதைக் குறித்துப்பேசலாம். இந்தச் சுருள் மண்பாண்டத் தினுள் வைக்கப்பட்டிருந்தது. அந்த மண்பாண்டம் மாம்சமாகி (மகிமை) மரித்து உயிரோடெழுந்தது. அன்றியும் கிரயத்துக்குக் கொள்ளப்படும் வரையிலும் அது அந்த மண் பாண்டத்தினுள் வைக்கப்பட்டிருந்தது. ஓ எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது. சரி. 78இந்த செய்திகள் யாவும், தேவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள காலம் வரும்வரை, பூமியிலுள்ள கடைசி செய்தியாளன், இந்த பூமிக்குரிய மண்பாண்டம் வரும்வரை, இரகசியமாய் வைக்கப்பட்டிருந்தன. அநேகர் அதைத் தேடி, 'அது இங்கிருக்கிறது, அது அங்கேயுள்ளது' என்று ஒரு வருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு, அதன் இரகசியத்தை வெளிப்படுத்த முயன்றனர். அவர்கள் கூறியதே சரியென்று அவர்கள் நம்பினர். ஆனால் இப்பொழுதோ தேவனுடைய கரத்திலிருந்து அது நேரடியாக நமக்கு வெளிப்பட்டு, அது தேவனால் உறுதிப்படுத்தப் படும். தேவன் அவ்விதம் செய்வதாக வாக்களித்துள்ளார். இப்பொழுது... இப்பொழுது நாம் பார்ப்போம்... நாம் எங்கே..? இப்பொழுது நாம் இரண்டாம் வசனத்தைப் பார்ப்போம். முதலாம் வசனத்தின் வியாக்கியானத்தில் நாம் அதிக நேரம் நிலைத்துவிட்டோம். நாம் இரண்டாம் வசனத்தைப் பார்ப்போம். இரண்டாம் வசனத்தின் பேரில் நாம் அவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டாம். “புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன். 79இப்பொழுது, ஞாபகங் கொள்ளுங்கள். நாம் மறுபடியும் முதலாம் வசனத்தைப் படித்து இவ்விரண்டு வசனங்களையும் ஒன்று சேர்ப்போம். ....... சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டேன். அது யார்? தேவன்! ஜீவ புஸ்தகத்தின் முழு உரிமையாளர். அவர் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆதாம் அதைப் பறிகொடுத்த போது, அது மூல உரிமையாளரை அடைந்தது. அது அவருக்கே சொந்தம். யோவான், தான் கண்ட தரிசனத்தில், 'உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற வருடைய வலது கரத்திலே“ கண்டான். பாருங்கள், உள்ளும் புறமும் எழுதப்பட்டுள்ளது. முத்திரைகள் உடைக்கப்படும்போது, ஒவ்வொரு முத்திரையும் ஆதியிலிருந்து வேதத்தில் கூறப்பட்ட அனைத்திலும் நன்றாக பொருந்துவதை நாம் காணலாம். பாருங்கள்? வேதத்திலுள்ள எல்லா இரகசியங்களும் இந்த முத்திரைகளில் அடங்கியுள்ளன. பாருங்கள்? (சகோதரன் பிரான்ஹாம் பீடத்தை ஐந்து முறை தட்டுகிறார்-ஆசி) குறிக்கப்பட்ட சமயம் வரும் வரை முத்திரைகள் உடைக்கப்படமுடியாது. இன்னும் ஒரு நிமிடத்தில், நான் இங்கு அதை நிரூபிப்பேன். 80கவனியுங்கள். நினைவில் கொள்ளுங்கள். அந்த புஸ்தகம் சுருட்டப்பட்டு, இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாக முத்திரிக்கப்பட்டு, ஏழு முத்திரைகளைக் கொண்ட புஸ்தகமாகத் திகழ்கிறது. அது ஒரு மீட்பின் புஸ்தகம். இரகசியம் எழுதப்பட்டு உட்பாகத்தில் சுருட்டப்பட்டு, வெளிப்புறத்தில் முத்திரிக்கப்பட்டுள்ளது. அது வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருக்கிறவன் என்றும்; கறுப்புக் குதிரையின் மேல் வீற்றிருக் கிறவன் என்றும் இன்னும் மற்றவை பற்றியும் உரைக்கிறது. ஆனால் அந்த புஸ்தகத்தின் இரகசியம் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடியவுள்ள வேத புஸ்தகங்களில் அடங்கியுள்ளன. ஏழு முத்திரைகள் கொண்ட இந்த புஸ்தகத்தில் அடங்கியுள்ள தேவனுடைய முழு மீட்பின் திட்டம், முத்திரைகள் உடைக்கப்படும்போது முற்றிலு மாக வெளிப்படும். ஓ! இது ஒரு முக்கியமான தருணம். அதை அறிந்து கொள்ள தேவன் உதவி செய்வாராக. பாருங்கள்? 81இரண்டாம் வசனத்தில் பலமுள்ள தூதன்......... “பலமுள்ள தூதன் அந்த புஸ்தகத்தைப் எடுக்க பாத்திரவான் (எதற்கு பாத்திரவான்?) யார்' என்று மிகுந்த சத்தமிட்டு கேட்கிறான். 82இப்பொழுது நாம் காண்கிறோம். அந்த புஸ்தகம் இப்பொழுது யாரிடத்தில் உள்ளது? அப்புஸ்தகம் இப்பொழுது அதன் உரிமையாளர் கையிலுள்ளது. மானிடவர்க்கத்தின் முதலாம் தேவ புத்திரன் சாத்தானுக்குச் செவிகொடுத்து, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக அவன் ஞானத்தை ஏற்றுக் கொண்டு அதன் உரிமையைப் பறிகொடுத்த போது, அது அவர் கரத்தையடைந்தது. இப்பொழுது... சிறிது நேரம் நாம் இங்கே நிறுத்துவோம். தேவ புத்திரர் என்று தங்களை அழைத்துக் கொள்பவர் ஆதாம் உரிமைகளை பறிகொடுத்தவாறே அதைக்குறித்த தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக வேதப் பள்ளியின் கருத்துக்களை அங்கீகரிப்பர். அவன் அதைச் செய்தபோது, அந்த புஸ்தகம் மூல உரிமை யாளரிடம் சென்றுவிட்டது. காலங்கள் எவ்விதமாய் இருந்தது என்பதை உங்களால் காண முடிகின்றதா? பாருங்கள்? அது மூல உரிமை யாளரிடம் நேரடியாய்ச் சென்று விட்டது. 83யோவான் ஆவிக்குள்ளாகி, பரலோகத்தில் நின்று கொண்டிருக் கிறான். சபையின் காலங்களைத் தரிசனமாகக் கண்ட பின்னர், வெளி. 4-ம் அதிகாரத்தில் பரலோகத்திற்கு எடுக்கப்படுகிறான். பாருங்கள்? வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில், ''இங்கே ஏறிவா, இவை களுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப் பேன்'' என்ற சத்தம் யோவானுக்குண்டானது. இப்புஸ்தகத்தை வலது கரத்தில் பிடித்துக் கொண்டு சிங்கா சனத்தில் வீற்றிருக்கும் ஒருவரை யோவான் காண்கிறான். இப்பொழுது, அதைக் குறித்து சிந்தியுங்கள். அப்புஸ்தகத்தில் மீட்பின் உரிமைப் பத்திரம் உள்ளது. அது ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டுள்ளது. 84பலமுள்ள தூதன் ஒருவன், 'புஸ்தகத்தைத் திறக்கவும், எடுக்கவும், அதன் முத்திரைகளை உடைக்கவும் புஸ்தகத்தைத் திறக்கவும், பாத்திரவான் யார்?' என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுவதை யோவான் காண்கிறான். பாருங்கள்? இங்கே அந்த மீட்பின் புஸ்தகம் காணப் படுகிறது. பாருங்கள், தூதன் அதைக் கேட்டான். யோவான் அதைக் கண்டான். தூதன், ''இப்பொழுது பாத்திரவான் யார்? ''அவர் வரவேண்டும்...'' ஓ, என்னே ! நான் இவ்விதத்தில் உணர்கிறேன். தூதன்,'' அவர் வரவேண்டும். அவர் வரவேண்டும்...'' என்றான். மீட்பின் புஸ்தகம் இங்கே உள்ளது. மீட்பின் திட்டம் இங்கே உள்ளது. நாம் மீட்கப்படுவதற்குரிய ஒரே வழி இங்கே உள்ளது. ஏனெனில் பரலோ கங்களும், பூலோகமும் மீட்கப்படுவதற்குரிய உரிமைப்பத்திரம் இங்கே தான் உள்ளது. 'அந்த புஸ்தகத்தைப் பெற்றுக்கொள்ள பாத்திரவான் யார்? அவர் முன் வந்து புஸ்தகத்தைப் பெற்றுக்கொள்ளட்டும்''. ஓ... என்னே! “இப்பொழுது பேசட்டும். அல்லது என்றைக்கும் அமைதியா யிருக்கட்டும். அவர் முன்னே வந்து, இந்த புஸ்தகத்தை உரிமை கோரட்டும். அதைச் செய்ய பாத்திரவான் யார்?'' என்றான். யோவான் கூறுகிறான்....... வானத்திலிருந்த ஒரு மனிதனும், பாத்திரவானாகக் காணப்பட வில்லை; பூமியிலே, பூமியில் வாழ்ந்து மரித்த எந்த ஒரு மனிதனாவது பாத்திரவனாகக் காணப்படவில்லை. 85தூதன் மீட்கும் இனத்தானை வரும்படி அழைக்கிறான். தேவன் ''எனக்கு ஒரு பிரமாணம் உண்டு. அதன்படி மீட்கும் இனத்தான் ஒருவன் பாவம் செய்தவனுக்குப் பதிலாக மரிக்கவேண்டும். அந்த மீட்கும் இனத் தான் எங்கே? யார் அந்த புஸ்தகத்தைப் பெற்றுக்கொள்ள பாத்திரவான்?'' என்றார். ஆதாம் தொடங்கி அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் மற்றவர் யாருமே பாத்திரவானாகக் காணப்படவில்லை. இப்பொழுது அதைக் குறித்து என்ன? ''பரலோகத்திலும், பூமியிலும், பூமியில் வாழ்ந்த எவருமே பாத்திரவானாகக் காணப்படவில்லை.'' அங்கே எலியா நின்று கொண்டிருந்தான். மோசே இருந்தான். எல்லா அப்போஸ்தலரும் அல்லது மரித்த யோபு மற்றும் பரிசுத்தவான்கள் அனைவரும் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களில் எவரும் அந்த புஸ்தகத்தைப் பார்க்கவும்கூட பாத்திரவானாகக் காணப்படவில்லை. அப்படியெனில், அந்த புஸ்தகத்தை எடுத்து அவர்கள் எங்ஙனம் முத்திரைகளை உடைக்க முடியும்? போப்பாண்டவர் எங்கே? உன்னுடைய பிஷப் அத்தியட்சகர் எங்கே? நமது தகுதி எங்கே? நாம் ஒன்று மற்றவர்கள். அது சரி.. 'மீட்பின் இனத்தான் முன்னே வரமுடியுமானால் அவன் முன் வரட்டும்' என்று அவன் கேட்டான். ஆனால் யோவானோ, “ எவரும் பாத்திரவான் அல்ல,'' என்று கூறினான். 86தேவதூதன், காபிரியேல் அல்லது மிகாவேல் தூதனோ அங்கே பாத்திரவான் இல்லையா எனலாம். ஆனால், அது இனத்தான் மீட்பனாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யோவான் எந்த ஒரு மனிதனும் (ஆங்கிலத்தில் No m-a-n was worthy என்று எழுதப்பட்டுள்ளது -தமிழாக்கியோன்) பாத்திரவான் அல்ல என்கிறான், என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். தேவதூதனோ சேராபீன்களோ அல்ல. அவர்கள் பாவம் செய்யாதவர்கள். ஆனால் அவர்கள் வித்தியாசமான இனத்தார். அவர்கள் ஒருபோதும் விழுந்ததில்லை. 87ஆனால் இதற்கு மீட்கும் இனத்தானாகிய ஒரு மனிதன் அவசியம். ''ஒரு மனிதனும் அல்ல'' என்றால், அதை மீட்க ஒருவனும் இல்லை என்றாகிறது. ''அதை பார்க்கவும்கூட எந்த மனிதனும் பாத்திரவானாகக் காணப்படவில்லை.'' ஓ... இல்லை. என்னே! என்னே! ஆகவே, ஒரு மீட்கும் இனத்தானாகிய ஒரு மனிதன் அவசியமாயிருந்தது. அவனைத் தேடியபோது அவன் எங்கேயும் காணப்படவில்லை. அங்கு ஒருவரும் தகுதியுடன் இல்லை. போப்பாண்டவரும், பிரதம அத்தியட்சகரும் போதகர்மாரும், மற்றவரும் அதை பார்ப்பதற்குத் தகுந்த பரிசுத்தம் இல்லாதவராயிருந்தனர். வ்யூ! என்னே! என்னே ! இது கடூரமாகத் தென்படும். ஆனால் அப்படித்தான் வேதம் கூறுகிறது. யோவான் சொன்னதை நான் அங்ஙனமே கூறுகிறேன். யோவான் மிகவும் அழுததாக'' வேதம் உரைக்கிறது. 88சிலர் போதித்தது போன்று அல்ல இது. “யோவான் பாத்திர வானாகக் காணப்படாததனால் அவன் அழுதான்'' என்று ஒருவர் போதித் ததை நான் கேட்டிருக்கிறேன். ஓ! பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற் றுள்ள எந்த ஒரு மனிதனும், தேவனுடைய ஊக்குவித்தலை பெற்ற யாவரும் அதற்கு வித்தியாசமான காரணம் உண்டு என்பதனை அறிவர். பாருங்கள்? 89ஆனால் யோவான் அழுதான். அந்த புஸ்தகத்தைத் திறக்கப்பாத்திரவானாய் எவருமே காணப்பட வில்லையென்றால் சிருஷ்டி அனைத்துமே அழிந்துவிடுமே' என்ற காரணத்தால்தான் யோவான் அழுதிருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். இங்கு அந்த புஸ்தகம் இருக்கின்றது. இங்கே அந்த உரிமைப் பத்திரம் இருக்கின்றது. ஆகவே அந்தப் புஸ்தகத்தைப் பெற்றுக் கொள்ள தகுதிகளைச் சந்திக்கின்ற இனத்தான் மீட்பனிடத்தில் அது அளிக்கப்படும். இதுதான் தேவனுடைய சொந்த பிரமாணம். தேவன் தம்முடைய பிரமாணத்தை ஒருபோதும் மாற்றுவதில்லை. பாருங்கள்? ஒரு மீட்கும் இனத்தான் தேவனின் அவசியமாயிருந்தது. அவன் அதைச் செய்யத் தகுதியுள்ளவனும், திறமையுள்ளவனும், மனமுடைய வனாகவும் இருக்க வேண்டும். ஆகவே அந்த தூதன் 'மீட்கும் இனத்தான் முன் வரட்டும்' என்று கூறினான். யோவான் சுற்றிலும் நோக்கிப் பார்த்தான். அவன் பூமி முழு வதையும் நோக்கினான். பூமியின் கீழேயும் பார்த்தான். ஒருவரும் அங்கே இல்லை. சிருஷ்டியும் அனைத்தும் அழிந்துவிடுமே என்று யோவான் அழுதான். யோவானுடைய அழுகை ஒரு நிமிடம்கூட நீடிக்கவில்லை. அப்பொழுது அங்கு நின்ற மூப்பர்களில் ஒருவன், யோவானை நோக்கி, 'நீ அழவேண்டாம்' என்றான். என்னே தேவனுடைய கிருபை! அவனு டைய அழுகை ஒரு நிமிடம்கூட நீடிக்கவில்லை. ''ஓ... என்னே , எங்கே அந்த மனிதன்? என்னைப்போல் பிறந்த தீர்க்கதரிசிகள் அங்கே நிற்கின்றனர். பரிசுத்தவான்கள் அங்கே நிற் கின்றனர். ஓ... இங்கே ஒருவரும் இல்லையா?'' என்று யோவான் சிந்தித்தான். 90“அதைச் செய்யக் கூடிய மனிதன் எனக்கு வேண்டும். மீட்கின்ற ஒரு மனிதன் அவசியம்.'' அவனைக் காணாததால் யோவான் அழ ஆரம்பித்தான். ஓ... அனைத்தும் இழந்து போயிற்றே... அவன் மிகவும் அழுதான். அவனைக் காணாவிடில், முழு சிருஷ்டியும், அனைத்தும்; அழிந்து ஒழிந்து போகுமே என்று யோவான் மிகவும் துக்கமடைந்தான். தேவனுக்கு மகிமை உண்டாவதாக! மீட்கும் தகுதியை சந்திக்க ஒருவரும் இல்லையெனில், மனித வர்க்கமும் முழு உலகமும் சிருஷ்டி அனைத்துமே அழிந்து போகும். ஓ... அனைத்தும் விழுந்து போயிற்று. மீட்கும் உரிமைகள், நித்திய ஜீவனாகிய அந்த வெளிச்சம் ஆகிய உரிமைகள் அனைத்துமே இழக்கப்பட்டன. அதற்கு கிரயம் செலுத்த யாருமே இல்லாததால், ஒரு வருக்கும் அந்த தகுதியில்லையே, ஒருவரும் அந்தப் புஸ்தகத்தைப் பார்க்கவும் கூடாதே என்ற காரணத்தால் யோவான் அழ ஆரம்பித்தான். ஓ... ஒரு மனித இனத்தான் அவசியமாயிருந்தது. அதைச் செய்ய யாரும் இல்லையே, எல்லாம் அழிந்து போகுமே என்ற காரணத்தால் யோவான் அழுதான். 91அந்த நான்கு ஜீவன்களின் மத்தியிலும், பரலோகத்தின் மகத்தான வேளையின் நடுவில் நின்றிருந்த மூப்பர்களில் ஒருவன், ''யோவானே, அழாதே'' என்றான். ஓ, என்னே! (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை இரண்டு முறை கொட்டு கிறார் - ஆசி) தேவனுடைய கிருபை. ''யோவானே, நீ மனமுடைய வேண்டாம். நீ அழ வேண்டாம். யூதா கோத்திரத்து சிங்கமும், தாவீதின் வேருமானவர் ஜெயங்கொண் டிருக்கிறார்,'' என்றான். 'ஜெயங்கொண்டிருக்கிறார்' என்னும் பதம் போராடி மேற்கொள் வதைக் குறிக்கும். ஓ... என்னே! கெத்சமனே தோட்டத்தில் இயேசுவின் வியர்வை இரத்தத்தின் பெருந்துளியாக பூமியில் விழுந்த சமயம், அவர் ஜெயங்கொள்ளத் தொடங்கினார். பாருங்கள்? வ்யூ! பாருங்கள் 'சிங்கமும் தாவீதின் வேருமானவர் ஜெயங்கொண்டிருக்கிறார், மேற் கொண்டிருக்கிறார்.'' 92எத்தனான யாக்கோபைப் போல. அவன் தூதனைச் சந்தித்தபோது யாக்கோபு தூதனுடன் போராடினான். தூதன் அவனை விட்டுப் போக எத்தனித்தபோது, 'நான் உம்மைவிட மாட்டேன்'' என்று விடாப்பிடியாய் அவனைப் பிடித்துக் கொண்டான். அவன் விரும்பியதைப் பெற்றுக்கொள்ளுமளவும் அவன் தூதனை விடவில்லை. அவன் பெயர் யாக்கோபு - அதாவது ஏமாற்றுபவன் என்பதிலிருந்து, இஸ்ரவேல்அதாவது தேவனுடைய அரசகுமாரன் என்று மாற்றப்பட்டது. அவன் தூதனுடன் போராடி மேற்கொண்டான். 93இந்த யூதா கோத்திரத்து சிங்கமும் ஜெயங்கொண்டார். மூப்பன் யோவானை நோக்கி, 'நீ அழவேண்டாம். ஏனெனில் யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் வேருமானவர் ஜெயங்கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே ஜெயங்கொண்டார். அது முடிந்தது' என்றான். வ்யூ! ஓ... ஓ... என்னே! அவர் ஒரு வெண்மையாக்கும் நீரை (Bleach) உண்டாக்கி, தன் ஞானத்தால் மானிட வர்க்கத்தைக் கறைபடுத்தின சாத்தானின் மாசு படிந்த கைகளில் பாவம் மறுபடியும் போகச் செய்தார். ஆம். 94ஆனால் யோவான் திரும்பிப்பார்த்தபோது, அவன் ஒரு ஆட்டுக் குட்டியைக் கண்டான். சிங்கத்திலிருந்து அது எவ்வளவு வித்தியாசப் பட்டது! சிங்கம் ஜெயங்கொண்டதாக மூப்பன் கூறுகிறான். ஆம், தேவன் அங்கே எளிமையில் மறைந்திருக்கிறார் என்பதை நான் மறுபடியும் உபயோகிக்க விரும்புகிறேன். சிங்கம் மிருகங்களின் அரசன். ''சிங்க மானவர் ஜெயம் கொண்டார்“ மற்றெல்லா மிருகங்களைக் காட்டிலும் மிகவும் பலமுள்ள மிருகம். ஆப்பிரிக்காவின் காடுகளில் நானும் என் மகன் பில்லி பாலும் (Billy Paul) வேட்டைக்காக ஒளிந்து கொண்டிருக்கும் தருணத்தில், ஒட்டகச் சிவிங்கிகள் 'கீச்' சென்று சத்தமிடுவதையும், கம்பீரமான யானைகள் தங்கள் துதிக்கைகளைச் சுழற்றி, 'வீ, வீ, வீ' என்று ஓசையிடுவதையும், அந்த காட்டு மிராண்டிகளுடைய மகா பெரிய சத்தங்களையும், காட்டு மிருகங்கள் இரையைத் தேடி விதவிதமாக சப்த மிடுவதையும், வண்டுகள் பறக்கும்போது உண்டாக்கும் சத்தங்களையும் கேட்டதுண்டு. ஆனால் தூரத்தில் ஒரு சிங்கத்தின் கர்ச்சனை கேட்டால், காட்டிலுள்ள அனைத்துமே நிசப்தமாகிவிடும். வண்டுகளும்கூட சப்த மிடுவதை நிறுத்திவிடும். அரசன் பேசுகிறது (றார்)....... ஓ.. ஓ.. ஓ.. ஓ... என்னே ! அவ்வாறே, நம் ராஜா பேசினால், எல்லாமே நிசப்தமாகிவிடும். ஸ்தாபனங்களின் கொள்கைகளெல்லாம் தவிடு பொடியாகிவிடும். சந்தேகமனைத்தும் தீர்ந்துவிடும். இவர்தான் அந்த ராஜா. அது அவரு டைய வார்த்தை . ஓ! 95மூப்பன் யோவானை நோக்கி, “நீ கவலை கொள்ள வேண்டாம், நீ அழவேண்டாம். நீ மனமுடைய வேண்டாம். நீ தரிசனம் கண்டு கொண்டிருக்கின்றாய். நான் உனக்கு ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன். யாருமே மீட்கப்பட முடியாதென்றும், எல்லாம் தொலைந்து போயின என்றும் நீ கவலை கொண்டிருக்கின்றாய். யூதா கோத்திரத்தின் சிங்கத்தைத் தவிர யாருமே இந்த தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது' என்றான். யூதா கோத்திரத்தின் சின்னம் சிங்கம் என்பதை நான் முன்பு கரும்பலகையில் உங்களுக்குப் படம் வரைந்து காண்பித்திருக்கிறேன். அந்த நான்கு ஜீவன்கள் - சிங்கம், காளை, மனுஷமுகம், பறக்கும் கழுகு இவையாவும் அந்த சேராபீன்கள், அந்த வார்த்தையைச் சுற்றிலும் காத்திருந்தன என்பது நினைவிருக்கிறதா? அதாவது மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியவை அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்தைச் சுற்றியிருக்கின்றன. 96பிரசித்தி பெற்ற ஒரு போதகர் ஒருநாள், 'அப்போஸ்தலர்களு டைய நடபடிகளின் புத்தகம் கட்டிடம் கட்டுவதற்கென்று உண்டாக் கப்பட்ட சாரம் (Scaffolding work)' என்றார். அது உண்மையல்ல. பரிசுத்தமுள்ள சபை முதன்முதலாக தோற்றுவித்த திராட்சைக் கொடிதான் அது. ஊம். ஆம், ஐயா. அது வேறொரு கொடியை மறுபடியும் தோற்றுவித்தால், அது முதலில் காணப்பட்ட திராட்சைக் கொடியைப் போன்றே இருக்கும். ஆம் ஐயா! ஆனால் இப்பொழுது திராட்சைக் கொடியில் ஒட்டு போடப்பட்டு, அந்த ஒட்டுக் கிளைகள் எலுமிச்சம் பழங்களையும், ஆரஞ்சுப் பழங்களையும் கொடுக்கின்றன. ஆனால்..... பாருங்கள்? ஆனால் அந்த திராட்சைக் கொடியில் வேறொரு கிளை முளைத்தால், அது முதலிலிருந்த கிளையைப் போன்றே காணப்படும். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் இவர்கள் எழுதின சுவிசேஷ புத்தகங்கள் அங்கு அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தைக் காவல் காத்துக் கொண்டிருக்கின்றன - மனிதனின் ஞானம், சிங்கத்தின் வலிமை, காளையின் உழைப்பு, கழுகின் வேகம், ஆம், அந்த சுவிசேஷங் கள் அங்கு நின்று கொண்டிருக்கின்றன. என்ன? நாம் ஏழு சபைகளின் காலத்தைக் குறித்துப் பேசுகையில் இவைகளை விவரித்துள்ளோம். இது இப்பொழுது நினைவிருக்கிறதா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் ஆசி) அவன் அவரை 'யூதா கோத்திரத்துச் சிங்கம்' என்றழைக்கிறான். 97ஏன்? யூதா கோத்திரத்திலிருந்து வரவேண்டும்? ''சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை. நியாயப் பிரமாணிகன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை.'' அவர் யூதாவின் கோத்திரத்தில் பிறக்கவேண்டும். “யூதா கோத்திரத்தின் சின்னமான சிங்கம் ஜெயங்கொண்டு விட்டார்; அவர் மேற்கொண்டார்.'' யோவான் சிங்கத்தைக்காண எண்ணித் திரும்பிப் பார்க்கையில், அவன் ஒரு ஆட்டுக்குட்டியை அங்கு காண்கிறான் - என்ன விசித்திரம்! அவன் சிங்கத்தைக் காண்பதற்காக திரும்பியபோது, ஒரு ஆட்டுக் குட்டியைக் காண்கிறான். மூப்பன் அவரை சிங்கம் என்று அழைத்தான். ஆனால் யோவான் திரும்பிப் பார்த்தபோது, ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டான். ''அது உலகத் தோற்றத்துக்கு முன் அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டி.'' அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி. அது என்ன? அந்த ஆட்டுக்குட்டி எப்படி இருந்தது? அது காயப்பட்டு இரத்தம் தோய்ந்து காணப்பட்டது. “அது கொலை செய்யப்பட்டாலும் மறுபடியும் ஜீவனுள்ளதாய் இருக்கிறது.'' அவர் இரத்தம் தோய்ந்தவராய் இருந்தார். ஓ! என்னே ! இந்த காட்சியைக் கண்டு நீங்கள் எங்ஙனம் இன்னமும் பாவி களாய் இருக்கமுடியும்? 98ஒரு ஆட்டுக்குட்டி முன்னே வந்தது. “யூதா கோத்திரத்து சிங்கம் ஜெயம் கொண்டிருக்கிறார்'', என்று மூப்பன் சொன்னான். யோவான் அந்த சிங்கத்தை பார்க்கும்படியாக திரும்பினபோது, இரத்தம் தோய்ந்த, காயங்களோடு அசைந்து வந்த ஆட்டுக்குட்டியைக் கண்டான். அவர் ஜெயங்கொண்டு விட்டார். அவர் யுத்தத்தில் இருந்தார் என்பதை நம்மால் கூற முடியும். அவர் அடிக்கப்பட்டார். ஆனால் மறுபடியும் உயிர்த்தெழுந்தார். யோவான் இதற்கு முன்பு இந்த ஆட்டுக்குட்டியானவரைக் கவனிக்கவில்லை. அவன் அவரை முன்னமே கண்டதாக எங்கும் எழுதப் படவில்லை. யோவான் அவரைக் காணும்படியாக பரலோகம் முழுவதும் நோக்கியபோது, அவரை அவன் காணவில்லை. ஆனால் ஆட்டுக்குட்டி யானவர் இங்கு புறப்பட்டு வந்தார். 99அவர் எங்கிருந்து வந்தார் என்பதைக் கவனியுங்கள். அவர் எங் கிருந்து வந்தார்? அவர் பிதாவின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வந்தார். கொலை செய்யப்பட்டு உயிரோடெழுந்து, பின்னர் அவர் அங்கு தான் வீற்றிருந்தார். “அவர் உயிரோடெழுந்து பிதாவின் வலது பாரிசத் தில் வீற்றிருந்து நமக்காக சதாகாலமும் பரிந்து பேசிக்கொண்டிருக் கிறார்.'' ஆமென். அங்கே உயிரோடிருந்த அவர் தமது சொந்த இரத்தத் தின் மூலம் ஜனங்களின் அறியாமைக்காக பிதாவினிடத்தில் இன்று பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார். இப்பொழுது அவர்பேரில்தான் நானும் சார்ந்திருக்கிறேன். அவர் பாவமன்னிப்பிற்குரிய வெண்மை யாக்கும் திரவத்தை (Bleach) இன்றும் உடையவராயிருக்கிறார். யோவான் அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கும் ஆட்டுக்குட் டியைக் காண்கிறான். அது காயப்பட்டு, அறுக்கப்பட்டு, நொறுக்கப் பட்டு, இரத்தம் தோய்ந்து காணப்பட்டது. பாவிகளாகிய நமது ஸ்தானத்தை அது எடுத்துக் கொண்டு நமக்காக அது காயப்பட்டது. ஒரு சாதாரண ஆட்டுக்குட்டி நமது ஸ்தானத்தை எடுத்துக் கொள்வது வியப் பாயிருக்கிறதல்லவா? அவன் ஆட்டுக்குட்டியைக் கண்டான். அவர் புறப்பட்டு வந்தார். 100யோவான் ஆட்டுக்குட்டியானவரை அதற்கு முன்பு தன் தரிசனத்தில் காணவில்லை. அவர் பரலோகத்தில் நமது பாவங்களுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தார். காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத் தத்தின் கீழ் தேவனிடத்தில் வந்து, பாவப்பரிகாரமாக செலுத்தப்பட்ட அந்தப் பலியின் மேல் விசுவாசங் கொண்டு, அதன் மூலம் இயேசுவின் மரணத்தைச் சுட்டிக் காட்டினவர்களுக்கெல்லாம். ஏனெனில் இன்னும் இரத்தம் சிந்தப்படாமலிருந்தது. ஆகவே அவர்களுடைய பாவக்குற்றத் திலிருந்து நிவிர்த்தியாக்க அங்கிருந்தார். உங்களையும் என்னையும் பாவக் குற்றத்திலிருந்து நிவிர்த்தியாக்க அவர் அங்கிருக்கிறார். ஓ தேவனே! இன்றிரவு அவர் அங்கிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒவ்வொரு பாவிக்காகவும் ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டிருக்கிறார். யேகோவா இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டி யானவரையன்றி வேறுயாரை இங்குகாண முடியும்? 101யோவான் கண்ட தரிசனத்தில், ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப் பட்ட வண்ணமாக பிதாவின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வரு கிறார். அவர் பிதாவின் சிங்காசனத்திலிருந்து வருகிறார் என்பதை கவனி யுங்கள். ஓ... சிந்தியுங்கள். அவர் இந்த தரிசனத்தில் எங்கிருந்து முன்னோக்கி வந்தார்? அவர் மகிமையிலிருந்து புறப்பட்டு வருகிறார். அவர் அங்கு பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தார். அவர் மகிமையிலிருந்து யோவானை நோக்கி வந்தார். இன்றிரவு நம் பாவமான சிந்தைகளை நாம் ஒரு புறம் ஒதுக்கிவிட்டு அவரை ஏற்றுக் கொண்டால், இன்றிரவு அவர் மகிமையிலிருந்து புறப்பட்டு தம்மை நமக்கு வெளிப்படுத்த முன்னோக்கி வருகிறார் என்றால் அது எவ்வளவு மகிமையுள்ள ஓர் செயலாயிருக்கும்! பரிந்து பேசும் செயலில் ஈடுபட்டிருந்த ஆட்டுக்குட்டியானவர் தம்மால் மீட்கப்பட்டவர்களை உரிமை கோரி, மகிமையிலிருந்து புறப் பட்டு வந்தார். சரி. ஞாபகங்கொள்ளுங்கள். அவர் இங்கே பரிந்து பேசும் செயலில் ஈடுபட்டிருந்தார். ஆனால் நினைவு கொள்ளுங்கள். முத்திரைகளைத் திறக்க சமயம் வந்துவிட்டது. ஆகையால் தேவனுடைய பிரகாரத்திலிருந்து அவர் புறப்பட்டு வருகிறார். 102பரலோகத்தில் “அரைமணி நேர' அமைதல் உண்டாயிற்று என்பதனைக் குறித்து நாம் சிந்திக்கும்வரை பொறுமையாயிருப்போம். பிரகாரம் புகைந்து கொண்டிருந்தது. அவர் அங்கிருந்து புறப்பட்டு வந்தால், அதன்பிறகு பரிந்துபேசுதல் இருக்காது. பலியானது அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டால் அது ஒரு நியாயாசனமாக மாறிவிடு கின்றது. இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டி வெளியேறினதால், அங்கு இரத்தம் கிடையாது. நீங்கள் அந்த சமயம்வரை இரட்சிக்கப்படாமல் ஏனோ தானோவென்று இருக்கவேண்டாம். பழைய ஏற்பாட்டில், கிருபாசனத்தில் இரத்தம் இருந்தவரை, அது கிருபாசனமாயிருந்தது. ஆனால் இரத்தம் எடுபட்டவுடன் அது நியாயாசனமாகின்றது. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஐந்து முறை தட்டுகிறார் -ஆசி) ஆட்டுக் குட்டியானவர் அங்கிருந்து புறப்பட்டு வந்தவுடன், அது நியாயாசனமாக மாறுகிறது. 103அவர் என்னவாயிருந்தார்? அவர் பரிந்து பேசுகிறவராய் இருந்தார். வேறு எந்த நபரும் அல்ல. அப்படியானால் மரியாள் நமக்காக பரிந்து பேசமுடியாது. மரியாளால் என்ன அளிக்க முடியும்? பரி. பிரான்ஸிஸ், பரி. அசிசி, பரி. சிசிலி அல்லது கத்தோலிக்கர்கள் உண்டாக்கியுள்ள கணக்கற்ற பரிசுத்தவான்கள் அல்லது வேறெந்த மனிதனும் பரிந்து பேசுபவர்களாக இருக்கமுடியாது. யோவான் பரிந்து பேசும் ஸ்தலத்தி லிருந்து ஆயிரம் பரிசுத்தவான்கள்' வருவதைக் காணவில்லை. ''அவன், அடிக்கப்பட்டு, இரத்தம் தோய்ந்த ஒரே ஒரு ஆட்டுக்குட்டியானவரைக் காண்கிறான்.'' எத்தனை பரிசுத்தவான்கள் கொல்லப்பட்டிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் அது அவர்களுக்குத் தகுந்ததாயிருந்தது. சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் சொன்னதுபோன்று, 'நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம். இந்த மனிதனோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லை.'' அந்த ஒரு மனிதன் மாத்திரமே பாத்திரவானாயிருந்தார். அவர் அடிக்கப்பட்டவண்ணமாய் பரிந்து பேசும் ஸ்தலத்தி லிருந்து புறப்பட்டு வருகிறார். அவர் எதற்காக வருகிறார்? அவரை கவனியுங்கள்! ஓ.. ஓ... ஓ... என்னே ! (சகோதரன் பிரான்ஹாம் தம் கைகளை மூன்று முறை கொட்டுகிறார் -ஆசி) சர்வமும் எந்நிலையிலுள்ளது? அவைகளுக்கு என்ன சம்பவிக்கும்? என்று யோவான் அழுது கொண்டிருந்தான். “யோவானே அழாதே. இதோ சிங்கம் வருகிறார். அவர்தான் ஜெயம் கொண்டவர்,'' என்று மூப்பன் கூறினான். யோவான் பார்த்த பொழுது, அடிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியைக் கண்டான். 104கொலை செய்யப்படும் எதுவும் இரத்தம் தோய்ந்திருக்கும். அது கொலை செய்யப்பட்டது. அதன் கழுத்தோ மற்றதோ வெட்டப்பட்டுள்ளதால், உடல் முழுவதும் இரத்தமாயிருக்கும் என்று நாம் அறிந்துள்ளோம். அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் முன்னே வருகிறார். ஓ... என்னே! எதற்காக? அவர் மீட்டவர்களை உரிமையாக்கிக் கொள்வதற்கு. ஆமென்! ஓ! ஓ! நான்... ஒரு மூலையில் சென்று சற்று நேரம் கண்ணீர் விடுவதற்கு நமக்குத் தோன்றுகிறதல்லவா? இன்னும் இரத்தம் தோய்ந்த வராய் ஆட்டுக்குட்டியானவர் வந்தார். யோவான். அங்கே புகழ் பெற்ற மனிதர் அனைவரும் சுற்றியிருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவரும் அதைச் செய்ய முடியாதவராய் இருந்தனர். ஆகவே, இப்பொழுது, ஆட்டுக்குட்டியானவர் இங்கு வருகிறார். அவரது பரிந்து பேசும் நாட்கள் முடிவடைந்து விட்டன. பலமுள்ள தூதன் பூமியில் நின்று, 'இனிகாலம் செல்லாது' என்று சொல்லும் தருணம்தான் அது. நாம் முத்திரைகளை அணுகும்வரை பொறுத்திருங்கள். அது சரி. “அரைமணி நேர அமைதல்.'' அந்த அரை மணி அமைதல் உண்டானபோது என்ன சம்பவித்தது என்பதை கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த ஞாயிறு இரவு அந்த ஏழாம் முத்திரை யைக் குறித்து நான் பேசும்போது அறிந்து கொள்ளலாம். 105அவர் தமக்குச் சொந்தமானவர்களை உரிமையாக்கிக்கொள்ள இப்பொழுது புறப்பட்டு வருகிறார். ஓ, என்னே! அவர்களை உரிமை யாக்கிக்கொள்ள அவர் புறப்பட்டு வருகிறார்! இப்பொழுது, அவர் மீட்கும் இனத்தானின் உத்தியோகத்தை நிறைவேற்றி முடித்துவிட்டார். அவர் இறங்கி வந்தார், மனிதனானார். மரித்தார். அவர் மீட்பின் உத்தி யோகத்தை முடித்துவிட்டாலும், இன்னும் தமக்குச் சேரவேண்டிய வர்களை உரிமையாக்கிக்கொள்ள அழைக்கப்படவில்லை. இப்பொழுது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அவர் காட்சியில் வருகிறார். (என்ன நிகழ்கிறதென்று பாருங்கள்). ஓ... என்னே ! அதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டார். மனிதனுக்குப் பதிலாக மரித்து, அவனை மீட்பதற் கென்று அவனுடைய இனத்தானாக அவர் மனித ரூபம் கொண்டார். மூப்பன் அவரைச் சிங்கமென்று அழைத்தது சரியே. பாருங்கள்? மூப்பன் அவரை ''சிங்கம்'' என்று அழைத்தான். ஏனெனில் அவர் இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவராக பரிந்து பேசும் உத்தியோகத்தைச் செய்துக்கொண்டு வந்தார். ஆனால் இப்பொழுதோ ஒரு சிங்கமாக புறப்பட்டு வருகிறார். அவர் பரிந்து பேசின நாட்கள் முடிவடைந்து விட்டன. 106“அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். நீதி யுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்''. அந்த காலம் முடிவடைந்துவிட்டது. ஓ, சகோத ரனே, அதன் பின்பு என்ன? அதன் பின்பு என்ன? இது ஏழாம் சபையின் காலத்தில் நிகழ்கிறது என்பது நினைவிருக் கட்டும். அப்பொழுது தேவரகசியம் யாவும் வெளிப்படும். ஞாபகங் கொள்ளுங்கள். ஏழாவது சபையின் காலத்தில், தேவனுடைய இரகசி யங்கள் யாவும் திறக்கப்படும்பொழுது அது வருகின்றது. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். இப்பொழுது, அவர் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து, விசுவாசிக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருந்தார். இரண்டாயிரம் வருட காலமாக அவர் ஆட்டுக்குட்டியானவராக அங்கு வீற்றிருந்தார். ஆனால் இப்பொழுது உரிமைப்பத்திரம் கொண்ட புஸ்தகத்தை வாங்கி அவர் முத்திரைகளை உடைத்து அதனுள் காணப்படும் தேவரகசியங்களை வெளிப்படுத்த அவர் நித்தியத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். அது எப்பொழுது? கடைசி காலத்தில். உங்களுக்கு புரிகின்றதா? (சபையார் 'ஆமென்' என்கின் றனர்-ஆசி) சரி. அப்படியானால் தொடர்ந்து கவனிப்போம். இப்பொழுது, அவர் முத்திரைகளை உடைத்து ஏழாம் தூதனுக்கு தேவரகசியங்களை வெளிப்படுத்துவார். ஏழாம் தூதனின் செய்தி ஏழு முத்திரைகளின் கீழ் அடங்கியுள்ள தேவரகசியங்களை வெளிப்படுத்து வதாகும். தேவனுடைய இரகசியங்கள் யாவும் இந்த ஏழு முத்திரைகளுள் அடங்கியுள்ளன. பாருங்கள். அவர் அதைத்தான் இங்கே கூறியிருக்கிறார். எல்லா தேவரகசியங்களும் ஏழு முத்திரைகளின் கீழ் அடங்கியுள்ளன. 107தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தராயிருந்த ஆட்டுக்குட்டி யானவர் புறப்பட்டு வந்து சிங்கமாகிறார். அவர் சிங்கமானபோது, அந்த புஸ்தகத்தை வாங்குகிறார். அது அவரது உரிமை. தேவரகசியம் அடங்கியுள்ள அந்த புஸ்தகத்தை தேவன் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் இப்பொழுதோ ஆட்டுக்குட்டியானவர் வருகிறார். யாராலும் அப்புஸ்தகத்தை தேவனுடைய கரத்திலிருந்து எடுக்க முடியவில்லை. அந்த புஸ்தகம் இன்னும் தேவனுடைய கரத்திலேயே இருக்கின்றது. போப்பாண்டவர், போதகன் மற்ற யாரும் அதை எடுக்கமுடியாமல் போயிற்று. ஏழு முத்திரைகளின் இரகசியம் இன்னமும் வெளிப்படவில்லை. பாருங்கள்? 108ஆனால் மத்தியஸ்தர், பரிந்துபேசும் ஊழியம் முடிந்த பிறகு சிங்கமாகப் புறப்பட்டு வருகிறார். யோவான்... ''அவர் சிங்கம்'' என்று மூப்பன் கூறினான். அவர் புறப்பட்டு வருகிறார். அவரைக் கவனியுங்கள். ஓ. என்னே... பாருங்கள்! அவர் புஸ்தகத்தை எடுத்து தேவ இரகசியங்கள் யாவையும் வெளிப்படுத்த புறப்பட்டு வகிறார். இத்தேவரகசியங்கள் என்னவாயிருக்கும் என்று ஸ்தாபனத்தார் சபையின் காலங்களில் அநுமானித்துக் கொண்டுதான் வந்துள்ளனர். பாருங்கள். அதன்பின், ஏழாம் தூதன். இப்புஸ்தகத்திலுள்ள தேவ இரகசியங்கள் தேவனுடைய வார்த்தையாய் இருக்குமாயின், அந்த வார்த்தை வருவதற்காக, ஏழாம் தூதன் தீர்க்கதரிசியாய் இருக்க வேண்டும். அவைகளைப் போப்பாண்டவர், போதகன்மார் யாருமே அறியமாட்டார். அவர்களிடத்தில் தேவனுடைய வார்த்தை வருவதில்லை. தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே தீர்க்கதரிசியினிடத்தில்தான் வருகின்றது. அவ்விதம்தான் மல்கியா 4-ம் அதிகாரம் வாக்களித்துள் ளது. அந்த தீர்க்கதரிசி வரும்போது இதுவரை ஸ்தாபனங்கள் சரிவர அறிந்துகொள்ளாது குழப்பியிருக்கும் எல்லா தேவரகசியங்களையும் வெளிப்படுத்தி “பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களிடம் திருப்பு வார்.'' அதன் பின்னர் நியாயத்தீர்ப்பு பூமியின் மேல் விழுந்து, அது எரிந்து போகும். பின்பு ஆயிரம் வருஷ அரசாட்சியில் நீதிமான்கள் துன் மார்க்கரின் சாம்பலின் மேல் நடந்து செல்வார்கள். உங்களுக்கு இது புரிகின்றதா? (சபையார், ''ஆமென்'' என்கின்றனர் -ஆசி) சரி. 109ஸ்தாபனங்களின் காலத்தில் அவர்கள் தேவரகசியங்களை ஊகிக்கத் தலைப்பட்டனர். ஆனால் பாருங்கள், அவன் இந்த மனிதனாகத் தான் இருக்க வேண்டும். அந்த ஏழாம் தூதன். வெளிப்படுத்தல் 10:1-4ல்... அந்த ஏழாம் தூதன், தேவன் தனக்குக் கொடுத்த இரகசி யங்களை உடையவனாயிருப்பான். அவன் ஸ்தாபன காலங்களில் விடுபட்டுபோன இரகசியங்கள் யாவையும் முடித்து வைப்பான். நான் ஸ்தாபனங்களிலுள்ள என் சகோதரரைக் குற்றப்படுத்து வதில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஸ்தாபனத்தின் முறை (denominational system) தான் தவறானதாகும். தேவ ரகசியத்தை அறிந்து கொள்ள அவர்கள் முயலவேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு வெளிப்பட முடியாது. தேவ வசனம் அவ்வாறே கூறுகிறது. அவர்கள் அதை ஊகித்து, ஊகித்தது உண்மையென்று விசு வாசித்து, அதன்படி நடந்தனர். ஆனால் இப்பொழுது அவையெல்லாம் தவறென்று அத்தாட்சியுடன் நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆமென். ஓ... என்னே! வேத வாக்கியம் எவ்வளவு உண்மையுள்ளது! 110இப்பொழுது கவனியுங்கள். ஆட்டுக்குட்டியானவர் வந்து தமக்கு உரிமையான ராஜாவின் ஸ்தானத்தை வகித்துக் கொள்கிறார். அப்பொழுது அவருடைய பரிசுத்தவான்கள் அவருக்கு முடிசூட்டி, “அவரை ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா'' என வாழ்த்துவார்கள். பாருங்கள்? 111அவர் முத்திரைகளை உடைத்து, உரிமைப் பத்திரத்தை அவிழ்த்து, அந்தச் செய்தியை ஏழாம் தூதனுக்கு கொடுப்பதைக் குறித்து, நான் இங்கு எங்கேயோ குறித்து வைத்துள்ளேன். அவர் தமக்கு உரியதான ராஜாவின் ஸ்தானத்தை எடுக்க வருகிறார். அவர் அதற்காகத்தான் இப்பொழுது முன்னோக்கி வருகிறார். அவர் “ஏழு கொம்புகளுடன் வருவதை இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, யோவான் இந்த ஆட்டுக்குட்டியைக் கண்டபோது, அவர் அடிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்து காணப்பட்டார். அவர் நித்தியத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். அதோடு அவர் மத்தியஸ்த ஊழியம் நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு நீங்கள் மரியாளுக்கு எவ்வளவு வேண்டு மானாலும் ஜெபத்தை ஏறெடுங்கள்! “வானத்திலாவது, பூமியிலாவது ஒருவனும் அந்த புஸ்தகத்தை வாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது.'' யோவான் அதனால் மிகவும் அழுதான். ஓ, கத்தோலிக்க நண்பனே! உன்னால் அதை அறிந்துகொள்ள முடியவில்லையா? மரித்த ஒருவருக்கு ஜெபத்தை ஏறெடுக்கவேண்டாம். 112ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் மாத்திரமே மத்தியஸ்தர், பாருங்கள்? அவர் மாத்திரம்தான் புறப்பட்டு வருகிறார். அவர் வந்து என்ன இப்பொழுது செய்தார்? அவர் அதுவரை, தம் இரத்தம் ஒவ்வொரு வருக்கும் பாவ நிவர்த்தி செய்யும் வரை, அவர்களுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த புஸ்தகத்தில் என்ன எழுதியுள்ளதென்பதை, இப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் அறிவார். யாருடைய பெயர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பு அப்புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை, அவர் அறிந்துள்ளதால், புஸ்தகத்தில் பெயரெழுதப் பட்டிருக்கும் ஒவ்வொருவரும் மீட்கப்படும்வரை, அவர்களுக்காக அவர் பரிந்து பேசிக் கொண்டிருந்தார், அது முடிவுற்றது. இப்பொழுது அவர் அங்கிருந்து புறப்பட்டு வருகிறார். பாருங்கள்? அவர் இனத்தானின் வேலையைச் செய்து முடித்தார். அவர் எல்லா இனத்தானின் வேலை என்பது என்ன என்று நீங்கள் அறிவீர்களா? இனத்தானின் வேலை மூப்பர் களிடத்தில் சாட்சி பகருவதாகும். போவாஸ் கழற்றின பாதரட்சையை வாங்கிய சம்பவம் நினைவிருக்கிறதா? அதையெல்லாம் அவர் இப்பொழுது செய்து முடித்துவிட்டார். 113அவர் இப்பொழுது தம்முடைய மணவாட்டியை எடுத்துக் கொள்ள வருகிறார். ஆமென். இப்பொழுது அவர் ராஜாவாக வருகிறார். அவர் தமது அரசிக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார். ஆமென் ஆமென். இப்புஸ்தகத்தில் எல்லா இரகசியங்களும் எழுதப்பட்டு ஏழு முத்திரைகளின் கீழ் கூறப்பட்டுள்ளது. ஓ சகோதரனே! ஏழு முத்திரைகள்-அவர் வருகைக்காககாத்துக் கொண்டிருக்கின்றன. கவனியுங்கள். இந்த அடையாளங்களை இப்பொழுது பார்ப்போம். நல்லது ஒன்பது மணியாகின்றது. இன்னமும் மூன்று மணி அல்லது இன்னும் அதிக நேரம் நமக்குண்டு. நாம் பெற்றிருப்பது... சற்று... ஜனங்கள் களைப்படைந்திருப்பதாக சாத்தான் என்னிடம் முறையிட்டுக் கொண்டே யிருக்கிறான். ஒருக்கால் அவர்கள் களைப்படைந்திருக்கலாம். ஆயினும் நாம் தொடர்ந்து கவனிப்போம். 114''ஏழு கொம்புகளும் ஏழு சபைகளாம்.'' பாருங்கள்? அவை ஏழு சபைகளின் காலத்தைக் குறிக்கின்றன. அவை ஆட்டுக்குட்டியானவரின் பாதுகாப்பு. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு சாரார் மூலமாகவே அவர் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டார். பாருங்கள், ஆட்டுக்குட்டியின் மேலுள்ள கொம்பு. “ஏழு கண்களும்” ஏழு சபையின் காலங்களிலிருந்த ஏழு தூதர் களாம். ''ஏழு கண்கள்' காண்கின்ற எழுவர் (seven seers). 115இப்பொழுது சில வேத வாக்கியங்களைக் குறித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? இப்பொழுது நாம் அதற்குத் திருப்புவோம். என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு சமயம் உண்டா ? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் -ஆசி) சரி. அப்படியானால் சகரியாவின் புஸ்தகத்தைப் பார்ப்போம். அதில் சிலவற்றை நாம் வாசிப்போம். இதில் அதிக நேரம் செலவிட நான் விரும்பவில்லை. என்றாலும் அதை நீங்கள் வாசிக்கத் தவறவும் கூடாது. இதைக் காட்டிலும் முக்கியமானது என்னவிருக்கிறது? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்ஆசி) ஆம். அதைக் காட்டிலும்... (சபையிலிருந்து ஒருவர் 'சகோதரர் பிரான்ஹாமே' என்று சொல்லுகிறார்). என்ன? ('அதை நம்மால் அளவிட முடியாது') ஒரு மனிதனுக்கு நித்திய ஜீவனைக் காட்டிலும் முக்கியமானது எதுவுமில்லை. நாம் இப்பொழுது அதைப் பெற்றுக் கொள்ளவேண்டும். நாம் அதைப் பெற்றுக்கொள்ள கவனமாயிருக்க வேண்டும். சரி. சரி, ஐயா, 116இப்பொழுது, நாம் சகரியா 3-ஆம் அதிகாரத்தை வாசிக்கப் போகிறோம். அது சரி என்று நான் நினைக்கின்றேன். இப்பொழுது, சகரியா 3. நான் எழுதி வைத்துள்ள வேத வசனங்களிலிருந்து, அந்த அடையாளங்களைக் காணப் போகிறோம். நான் இன்று பிற்பகல் இதைக் கண்டபோது, நான் அந்த அறை முழுவதும் சத்தமிட்டுக் கொண்டிருந்தேன். ஆகவே, நான் இங்கு அதை சரியாக எழுதி வைத்துள்ளேனா இல்லையா என்பதை நான் அறியாதவனாய் இருக்கிறேன். இங்கு சகரியா 3-ம் அதிகாரம் உள்ளது. இங்கு 89 என்று எழுதியுள்ளேன். அது சகரியா 3:8,9 ஆக இருக்க வேண்டும். சரி. சரி. அது 89 அல்ல என்று நான் அறிவேன். சகரியா 3:8,9. இப்போதும் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக் கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை (Servant) (அது கிறிஸ்து) நான் வரப்பண்ணுவேன். இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த (இங்கு சகோதரன் பிரான்ஹாம் 'வைத்த' என்பதற்கு பதிலாக (have laid) 'வைக்கப்போகின்ற' (I will lay) என்று படிக்கிறார் - தமி ழாக்கியோன்) கல்; இந்த ஒரே கல்லின் (கல்) மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது. (ஆங்கிலத்தில் - ஏழு கண்கள் இருக்கும் என்ற அர்த்தத்தில் உள்ளது. (shall be seven eyes) தமிழாக்கியோன்) இதோ நான் அதின் சித்திர வேலையை நிறைவேற்றி இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப் போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 117இப்பொழுது சகரியா 4:10 வாசிப்போம். கவனியுங்கள். அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ண லாம்? (தேவன் எளிமையில் காணப்படுதல் பாருங்கள்?)........ பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்கு நூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது. “ஏழு கண்கள்.'' கண்கள் பார்வைக்கு அடையாளம். பார்வை தீர்க்கதரிசிகளைக் குறிக்கிறது - ஞானதிருஷ்டிக்காரர் (Seers). இந்த ஆட் டுக் குட்டிக்கு ஏழு கொம்புகள் இருந்தன. ஒவ்வொரு கொம்பின் மேலும் ஒரு கண் இருந்தது - மொத்தம் ”ஏழு கண்கள்.'' அது என்ன? அதுதான் கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும். ஏழு சபையின் காலங்களில் ஏழு தீர்க்கதரிசிகள் புறப்பட்டு சென்றனர் - ஏழு ஞான திருஷ்டிக்காரர், கண்கள். ஆகவே கடைசியாக வருபவனும்கூட ஒரு ஞான திருஷ்டிக் காரனாய் இருக்க வேண்டும். (சகோதரன் பிரான்ஹாம் ஞான திருஷ்டிக் காரன்' என்று சொன்னவுடன், பீடத்தை இரண்டு முறை தட்டினார்ஆசி) சரி. 118கவனியுங்கள். அவர் ஒரு மிருகமல்ல. “அவர் சிங்காசனத்தில் உட்கார்ந்தவரின் வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார்.'' சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தவர் யார்? அவர்தான் தம் வலது கரத்தில் பிடித்துக் கொண்டிருந்த மீட்பின் புஸ்தகத்தின் மூல உரிமையாளர். தேவ தூதனும்கூட அப்புஸ்தகத்தை அவர் கையிலிருந்து எடுக்க முடியவில்லை. இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர் நடந்து சென்று அவருடைய கரத்திலிருந்து அதை எடுத்தார். வ்யூ, அது என்ன? சகோதரனே, வேதத்திலே இதுதான் மிகுந்த பயபக்தியூட்டும் ஒரு செயல். ஆமென். இந்த செயலைத் தேவதூதனோ மற்றும் யாருமோ செய்ய முடியவில்லை, ”ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தில் உட்கார்ந்த வருடைய வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை எடுத்தார்.'' 119அது என்ன? இப்பொழுது அது ஆட்டுக்குட்டியானவருக்குச் சொந்தம். ஆமென். தேவனுடைய பிரமாணங்களுக்கு அவசியமா யிருந்தது. தேவன் அதைத் தமது கரத்தில் வைத்திருந்தார். தேவனுடைய பிரமாணத்தின்படி, ஒரு மீட்கும் இனத்தான் அவசியமாயிருந்தது. ஆட்டுக்குட்டியானவர் அதைப் பிடித்துக் கொண்டு தைரியமாக வந்து, “நான்தான் அவர்கள் இனத்தான். நான்தான் அவர்கள் மீட்பர். நான் இப்பொழுது... நான் அவர்களுக்காகப் பரிந்து பேசினேன். இப்பொழுது அவர்களுக்காக உரிமைகோர வந்தேன்'' என்றார். ஆமென்! ஒரே ஒருவர் தான் உண்டு. 'உரிமையைப் பெற்றுக் கொள்ள வந்தேன். அவர்கள் பாவத்தில் விழுந்தபோது இழந்துபோன உரிமை அனைத்தும் அதில் உள்ளது. நான் கிரயத்தைச் செலுத்தி விட்டேன்.' 120ஓ, சகோதரனே! வ்யூ! இது உனக்குள் பக்தி பரவசத்தைக் கொண்டு வருகின்றதல்லவா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் -ஆசி). “நாம் செய்த நற் கிரியைகளினால்ல, அவருடைய கிருபையினால் மாத்திரமே இரட்சிக்கப்பட்டோம். '' ஓ, ஒரு நிமிடம் பொறுங்கள். மூப்பர்களும் மற்றெல்லாரும் தங்கள் கிரீடங்களைக் கழற்றி விட்டு, அவருக்கு முன்பாக வணக்கமாய் விழுகின்றனர். பாருங்கள்? வேறு எவராலும் செய்யமுடியாது. அவர் நேராக தேவனுடைய வலது கரத்தினிடம் சென்று தேவனு டைய கரத்திலிருந்து புஸ்கத்தை எடுத்து தம்முடைய உரிமைகளைக் கோரினார். 'நான் அவர்களுக்காக மரித்தேன். நான்தான் அவர்களின் மீட்கும் உறவினன். நான்தான். நான்தான் மத்தியஸ்தன், என் இரத்தம்தான் சிந்தப்பட்டது. நான் மனிதனாகி இந்த உலக தோற்றத்துக்கு முன்னர் முன்குறித்த சபையை திருப்ப வெளிப்பட்டேன். நானே அதைத் தீர்மானித்து, அது அங்கே இருக்கும் என்று அதைப் பேசினேன். வேறு எவராலும் அதைச் செய்ய தகுதியாய்க் காணவில்லை. எனவே நானே கீழிறங்கி அதைச் செய்து முடித்தேன். நான்தான் அவர்களின் உற வினன்'. நான் அவர்களின் உறவினன் ஆனேன். ஆகவே, பின்பு அந்த புஸ்தகத்தை எடுத்தார். ஆமென். 121ஓ! இன்றிரவு எனக்காக காத்திருக்கும் அவர் யார்? சபையே, காத்திருக்கும் அவர் யார்? அங்கே உனக்காக காத்துக் கொண்டிருப்பது யாராயிருக்கக் கூடும். அவர் மீட்கும் உறவினன். ஓ! என்ன ஒரு பயபக்திக்குரிய வாக்குமூலம் அல்லது செயல். இப்பொழுது மீட்பிற்கான உரிமைப்பத்திரத்தை அவர் கொண் டிருக்கின்றார். மத்தியஸ்தம் இப்பொழுது முடிவடைகிறது. அதை அவர் தமது கரத்தில் வைத்திருக்கின்றார். நினைவில் கொள்ளுங்கள். காலாகால மாக அது தேவனுடைய கரத்தில் இருந்தது, ஆனால் இப்பொழுது அது ஆட்டுக்குட்டியானவரின் கரத்தில் இருக்கின்றது. இப்பொழுது கவனி யுங்கள். சர்வ சிருஷ்டியின் மீட்பின் உரிமைப்பத்திரம் இப்பொழுது அவர் கையிலிருக்கிறது. மானிட வர்க்கத்திற்கு அதை மறுபடியும் அளிக்க அவர் வந்திருக்கிறார் - தேவதூதர்களுக்கல்ல, அவர்களை மறுபடி யும் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக்க அவர் அதை அளிக்க வந்திருக்கிறார். அவர்கள் இழந்துபோன அனைத்தையும் அவர்கள் மறுபடியும் பெற்று ஏதேன் தோட்டத்தின் நிலைக்குத்திரும்பவேண்டும சர்வ சிருஷ்டியும், மரங்களும், மிருகங்களும், மற்றவை யாவும் அந்நிலைக்கு வரவேண்டும். ஓ! என்னே! 122இது உங்களுக்கு ஓர் நல்ல உணர்வை அளிக்கின்றதல்லவா? வ்யூ! (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் -ஆசி) நான் களைப்படைந் துள்ளதாய் நினைத்தேன். ஆனால் இப்பொழுது இல்லை. பாருங்கள்? சில நேரங்களில் வயது சென்றதால் பிரசங்கிக்க முடிவதில்லை என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் பக்தியூட்டும் இத்தகைய சம்பவங்களைக் காணும்போது, எனக்கு வாலிப உணர்ச்சி ஏற்படுகின்றது. ஆம். ஊம்... ஊம்... ஹும்!... அது நமக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறது. பாருங்கள்? எனக்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று நான் நன்கு அறிவேன். நான் செலுத்த முடியாத கிரயத்தை அவர் செலுத்திவிட்டார். அது உண்மை . சார்லி, எனக்காக அவர் அதைச் செய்தார். உனக்காகவும் அவர் செய்தார். மானிடவர்க்கம் அனைத்திற்காகவும் அவர் கிரயத்தை செலுத்தியிருக்கிறார். இப்பொழுது அவர் தம் மீட்பின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வந்திருக்கிறார். யாருக்காக அவர் அதை பெறுகிறார்? அவருக்காகவல்ல, நமக்காகவே. அவர் நம்மில் ஒருவர். அவர் நமது இனத்தான். ஓ! அவர் என் சகோதரன். அவர் என் ரட்சகர். அவர் என் தேவன். அவர் என் மீட்கும் இனத்தான். அவர் எனக்கு எல்லாமு மாயிருக்கிறார். அவரையன்றி நான் என்னவாயிருந்திருப்பேன்? அல்லது என்னவாயிருக்க முடியும்? ஆகவே, பாருங்கள். அவர் எனக்கு எல்லாமுமாயிருக்கிறார். அவர் நமது மீட்பின் இனத்தானாய் அங்கே நின்று கொண்டிருக்கிறார். இந்நேரம் வரையும் அவர் நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருந்தார். அவர் மீட்பின் புஸ்தகத்தை எடுத்து, நமக்குச் செய்த உரிமைகளைப் பெற்றிட இப்பொழுது முன்னே வருகிறார். 123அவர்கள் மரித்தார்கள்.... ''என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனை கடைசி நாளில் எழுப்புவேன்'' என்று இயேசு சொன்னார். அவன் முதலாம் ஜாமத்தில் நித்திரையடைந்தாலும், அல்லது இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் ஜாமங்களில் நித்திரையடைந்தாலும், அல்லது எங்கே நித்திரையடைந்தாலும் பரவாயில்லை. என்ன நேரிடும்? தேவ எக்காளம் முழங்கும். கடைசி முத்திரை திறக்கப்பட்டு, கடைசி தூதன் செய்தியையளித்துக் கொண்டிருக்கும் அதே தருணத்தில், கடைசி எக்காளம் முழங்கும். அப்பொழுது மீட்பர் தம் இரத்தத்தினால் கழுவப்பட்ட சபையாகிய தம் பொக்கிஷங்களைப் பெற்றுக்கொள்ள புறப்பட்டு வருவார். 124இப்பொழுது ஓ! சர்வ சிருஷ்டியும் இப்பொழுது அவர் கரத்தில் தான் உள்ளன. மீட்பின் திட்டம் முழுவதும் அவர் எடுத்த அப்புஸ்த கத்தில் எழுதப்பட்டு, ஏழு இரகசியமான முத்திரைகளால் முத்தரிக்கப் பட்டுள்ளது. இப்பொழுது கவனியுங்கள்! அவர் மாத்திரமே, அதன் இரகசியங்களை யாருக்கு வெளிபடுத்த சித்தம் கொண்டிருக்கிறாரோ, அவர்களுக்கு அவைகளை வெளிப்படுத்துவார்.'' பாருங்கள், அவர் அதைத் தமது கரத்தில் வைத்துள்ளார். இப்பொழுது அந்த மீட்பின் புஸ்தகம் ஏழு முத்திரைகளான இரகசியங்களால் முத்திரிக்கப் பட்டுள்ளது. அதை அந்த காலத்தில் வெளிப்படுத்துவதாக அவர் வாக்களித்தார். இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது... நண்பர்களே, நான் எட்டரை மணிக்கே முடித்து விடுவதாக உங்களிடம் கூறினேன். ஆனால் நான் இந்த பகுதிக்கு வருவதற்காக மூன்று அல்லது நான்கு பக்கங்களை விட்டு விட்டேன். ஆகவே நான் விரும்புகிறேன்...... நான் ஏற்கனவே ஒன்பது மணியைத் தாண்டி யுள்ளேன். நாளைக்கும் நாம் இங்கு வர வேண்டும். 125ஆனால் இப்பொழுது இந்த ஏழு முத்திரைகளடங்கிய மீட்பின் புஸ்தகத்தை, தமக்காக எடுத்துக்கொள்ள ஆட்டுக்குட்டியானவர் ஒருவரால் மட்டுமே முடியும். அவர் தம்முடைய மீட்கும் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள, சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டார். ஏதேன் தோட்டத்தில் ஆதாம் இழந்த எல்லாவற்றையும் திரும்ப அளிக்கும்படி அவரால் மீட்கப்பட்ட உனக்காகவும், எனக்காகவும் அவர் உரிமை பெற்றிட அவர் வந்தார். பாருங்கள்... அவர் நம்மை அந்த பழைய நிலைமைக்கு மீட்டு விட்டார். 126ஆட்டுக்குட்டியானவர் தம் கரத்தில் புஸ்தகத்தை வைத்துக் கொண்டிருக்கும்போது, ஏழு முத்திரைகளைத் திறந்து, கடந்து போன காலத்தை நமக்குக் காண்பிக்க தேவன் கிருபையும் இரக்கமும் அருள வேண்டுமாய் நாம் அவரிடத்தில் மன்றாடுவோமாக! ஓ... என்னே! அவர் அந்த புஸ்தகத்தை முத்திரிக்கப்பட்டிருந்த உரிமைப் பத்திரத்தை (இப்பொழுது அதை நீங்கள் உங்கள் மனதில் பதித்துக் கொள்ளுங்கள்) உடைத்து அதிலுள்ள ஏழு முத்திரைகளடங்கிய இரகசியங்களை, தம்மால் மீட்கப்பட்ட தம்முடைய பிரஜைகளுக்கு வெளிப்படுத்தும்படியாக அதை எடுத்தார் என்பதைக் கவனியுங்கள். முத்திரைகளைக் குறித்து நாம் சிந்திக்கும்போது, நாம் கடந்த காலத் துக்குச் சென்று, பலிபீடத்தின் கீழேயுள்ள ஆத்துமாக்கள், 'எது வரைக் கும் ஆண்டவரே, எதுவரைக்கும் ஆண்டவரே?' என்று கூக்குரலிடுவதை நாம் காணலாம். அவர் பலிபீடத்தின் மேல் மத்தியஸ்தராக இருந்து, அவர்களைப் போல் உபத்திரவப்பட வேண்டியவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னும் சிறிது காலம் இளைப்பாற வேண்டும்'' என்பார். 127ஆனால் இப்பொழுது இந்த கடைசி முத்திரையிலிருந்து அவர் வருகிறார். அதன் பின்பு அவர் ஒருபோதும் மத்தியஸ்தரல்ல. அவர் ராஜாவாக வருகிறார். அவர் என்ன செய்கிறார்? அவர் அரசனானால் அவருக்குப் பிரஜைகள் இருக்க வேண்டும். அவரால் மீட்கப்பட்டவர்கள் தான் அவர் பிரஜைகள். அவர், தாம் மீட்டுக் கொண்டவர்களின் மேல் உரிமையைப் பெற்றுக்கொள்ளும்வரை, அவர்கள் அவர் முன்னிலையில் வர முடியாது. இப்பொழுதோ அவர் மத்தியஸ்த உத்தியோகத்தை விட்டு உரிமைகளுடன் அவர் வருகிறார். ஆமென். அவர் மத்தியஸ் தராயிருந்தபோது, மரணம் நம்மை கல்லறைக்குள் வைத்தது. ''கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கிறவர்கள் நித்தி யடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. ஏனெனில் கடைசி எக் காளத்தில் தேவ எக்காளம் முழங்கும்.'' கடைசி முத்திரை உடைக்கப் பட்டிருக்கும்பொழுது ஏழாம் தூதன் தன் செய்தியை அளிக்கும்பொழுது, ''கடைசி எக்காளம் முழங்கும். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்தி ருப்பார்கள். உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடுகூட எடுக்கப்பட்டு அவரை ஆகாயத்தில் சந்திப்போம்.'' அவர் உரிமை பெறுகிறார்! அவர் தம் சொத்துக்களைப் பெற்றுக்கொள்ள புறப்பட்டு வருகிறார். கவனியுங்கள்! இதைப் பாருங்கள்! என்னே ! அவர் ஏழு முத்திரை களை உடைத்து, (எங்கே?) கடைசி சபைக்கு இரகசியங்களை வெளிப் படுத்துகிறார். இந்த சபை மாத்திரமே இப்பொழுது உயிரோடுள்ளது. மற்ற சபையினர் யாவரும் நித்திரையடைந்துள்ளனர். 128“நான் முதலாம் ஜாமத்திலோ, இரண்டாம் ஜாமத்திலோ, மூன்றாம் ஜாமத்திலோ, ஏழாம் ஜாமம் வரையிலோ...'', என்று அவர் சொன்னார். ஏழாம் ஜாமத்தில், 'இதோ மணவாளன் வருகிறார்' என்ற சத்தம் அல்லது அழைப்பு உண்டாயிற்று. உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகள், அதாவது பெயர் கிறிஸ்தவ சபைகளின் (Nominal Churches) அங்கத்தினர்கள், அப்பொழுது, “ஓ, நீங்கள் அறிவீர்களா! 'நான் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறேன்'' என்பார்கள். நீங்கள் பிரஸ்பிடேரியன் மார்களையும், எபிஸ் கோபல் ஸ்தாபனத்தாரையும் கவனித்திருக் கிறீர்களா? அன்று பீனிக்ஸ் பட்டிணத்தில் நடந்த கூட்டத்தில், அங்கு நின்று கொண்டிருந்த மனிதர், சத்தம் என்ற இதழில் கூறப்பட்ட... ''பரிசுத்த பிதா இன்னார் - இன்னார்'', நல்லது அந்த பத்திரிக்கை ஆசிரி யருக்கு என்ன ஆயிற்று? எந்த மனிதனையும் பிதா என்று அழைக்கா திருங்கள் என்று வேதம் கூறுகின்றதே?'' அவர்களெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? ஆனால், இப்பொழுதோ அவர்கள் 'நாங்கள் விசுவாசிக்கிறோம்...' என்று கூறுகின்றனர். 129ஒரு ஸ்திரீ வேறொரு ஸ்திரீயை சந்தித்து, “நான் எபிஸ்கோபல் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவள் என்பதை நீ அறிவாய். அன்றொரு நாள் நான் அன்னிய பாஷையில் பேசினேன். நான் பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் யாரிடமும் இதைக் கூற வேண்டாம்' என்றாள். அவள் பரிசுத்த ஆவியைப் பெற்றாள் என்பதை நான் வெகுவாய் சந்தேகிக்கிறேன். நீ ஒருக்கால் அன்னிய பாஷையில் பேசியிருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் அனல் மூட்டப்படும்போது அவன் எங்ஙனம் சும்மாயிருக்க முடியும்? அது சரியானதாகும். பாருங்கள்? பாருங்கள்? அப்படி செய்ய முடியாது. மேலறையில் குழுமியிருந்த பேதுரு, யாக்கோபு, யோவான், “ஓ, நாம் இப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டோம். ஆனால் நாம் அமைதியாயிருப்பது நல்லது' என்று கூறியிருக்க முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள். சகோதரனே, அவர்கள் ஆர்வம் கொண்டு, கதவுகளிலும், ஜன்னல்களிலும் நுழைந்து, வீதிகளில் சென்று, குடிகார ரைப் போல் மற்றவர்களுக்குக் காணப்பட்டனர். அதுதான் உண்மை யான பரிசுத்த ஆவியைப் பெறுதலின் அடையாளம். 130ஆனால் தூங்கிக் கொண்டிருந்த கன்னிகை (அதாவது புத்தியில் லாத கன்னிகை) எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைப் பாருங்கள். ஊ, ஊம். அது சரி. ஆம், அவர்கள் எண்ணெய் வாங்க முயற்சிக்கச் சென்றபோது அவர்கள் எண்ணெயை வாங்கி விட்டதாக வேதம் கூறவில்லை என்பது நினைவிருக்கட்டும். அவர்கள் எண்ணெய் வாங்க முயன்றுக் கொண்டிருந்தபோது, ஒரு சத்தம் உண்டானது. என்ன நேர்ந்தது? அந்த சத்தத்தைக் கேட்ட வுடன், தூங்கிக் கொண்டிருந்த கன்னிகைகள் அனைவரும் எழுந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினர். எண்ணெய் வைத்திருந்த புத்தியுள்ள கன்னிகைகள் கலியாண விருந்துக்குச் சென்றனர். நான் கூறுவது சரியா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) 131மற்றவர்கள் உபத்திரவ காலத்திற்கென்று விடப்பட்டனர். “அங்கு அழுகையும் ஓலமும் பற்கடிப்பும் உண்டாகும்.'' அவர்கள்தான் சபை (church). மணவாட்டியல்ல; சபை. மணவாட்டி உள்ளே சென்றாள். மணவாட்டிக்கும் சபைக்கும் முழு வித்தியாசமுண்டு. ஆம், ஐயா. ஊம்... ''அவர்கள் கலியாண விருந்துக்குச் சென்றனர்“ ஓ... கவனி... மகனே (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை ஒரு முறை கொட்டுகிறார் -ஆசி). ஏழு முத்திரைகள் இந்த கடைசி சபையின் காலத்தில் உடைக்கப் படுகின்றன. ஏன்? இந்த சத்தியங்கள் வெளிப்படுவதற்காக. ஆட்டுக் குட்டியானவர் தம் பிரஜைகளை அவர் இராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்ளக் கருதி, முத்திரைகளை உடைத்து மணவாட்டிக்கு வெளிப் படுத்துகிறார். அவருடைய மணவாட்டிக்கு. பாருங்கள்! ஓ! என்னே! அவர் தமது பிரஜைகளை இப்பொழுது தம்மிடம் சேர்த்துக் கொள்கின்றார். அது என்ன? பூமியின் புழுதியினின்றும், சமுத்திரத்தின் ஆழத் தினின்றும் எல்லா குழிகளிலிருந்தும், எல்லாவிடங்களிலிருந்தும், அந்த காரத்தினின்றும், பரதீசியிலிருந்தும்... அவர்கள் எங்கிருந்தாலும், அவர் கூப்பிடுகையில் அவர்கள் மறு உத்தரவு அருளுவார்கள். ஆமென்! ஆமென்! (சபையார் 'ஆமென்' என்கின்றனர், அவர் அவர்களைக் கூப்பிடுவார். அவர்கள் மறு உத்தரவு அருளுவார்கள். 132அவர் தமது பிரஜைகளைச் சேர்த்துக் கொள்ள வருகிறார். அவர் தமது இரகசியங்களை வெளிப்படுத்தினார். அவர்கள் புரிந்து கொண்டனர். அப்பொழுது, “இனி காலம் செல்லாது, காலம் கடந்து விட்டது. அது முடிந்து விட்டது.'' சரி. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக மத்தியஸ்த ஊழியத்தைச் செய்வதை அவர் விட்டுவிட்டு, சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு, அவர் தமது செய்தியைப் புறக்கணித்தவரை, உலகத்தை நியாயத்தில் நிறுத்த சிங்கமாக, ராஜாவாக வருகிறார். அப்பொழுது அவர் மத்தியஸ் தரல்ல . பழைய ஏற்பாட்டின் போதகத்தை நினைவுபடுத்திக் கொள் ளுங்கள். நாம் துரிதமாக முடித்துவிடுவோம். கிருபாசனத்தை விட்டு இரத்தம் எடுக்கப்பட்டவுடன், அது நியாயாசனமானது. 271. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர், தம் பிதாவின் சிங்காச னத்தை விட்டுப் புறப்பட்டு அவர் உரிமையைப் பெற்றுக் கொள்ளும் போது, அது நியாசனமாக மாறுகிறது. அவர் அப்பொழுது ஆட்டுக்குட்டி யல்ல; அவர் சிங்கம். ராஜா. அவர் தமது ராணியை அழைத்து தம் பக்கத்தில் நிறுத்திக் கொள்கிறார். 133''பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?'' ''சிங்காசனங்கள் வைக்கப்பட்டதையும், புஸ்தகங்கள் திறக்கப்பட்டதையும், ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்ததையும்'' தானியேல் கண்டான் - ராஜாவும் ராணியும். அதன்பின் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அதுதான் ஜீவபுஸ்தகம்.'' அது சபைக்காக திறக்கப்படுகின்றது. அப்பொழுது ராஜாவும், ராணியும் அங்கு நிற்கின்றனர். 134(சகோ.பிரான்ஹாம் மாடு மேய்ப்பவனின் (Cow boy) பாட்டொன் றைக் கூறுகிறார். அதன் சாராம்சம் பின்வருமாறு - தமிழாக்கியோன்) “கடந்த இரவு நான் புல்வெளியில் கிடந்தவண்ணம் வானத்தை அண்ணாந்து பார்த்து நட்சத்திரங்களை நோக்கியவாறே, மாடு மேய்க்கும் ஒருவனாவது அந்த இனிமையான ஸ்தலத்திற்குச் செல்ல முடியுமா என்று வியந்தேன்.“ “சந்தோஷம் மிகுந்த அந்த ஸ்தலத்தை அடைவதற்கு ஒரு பாதையுண்டு. ஆனால் அது மங்கின வெளிச்சம் கொண்டதாயுள்ளது என்று அவர்கள் சொல்லுகின்றனர். ஆனால் கேட்டுக்குப் போகும் பாதை விசாலமானதாயும் பிரகாசமுள்ளதாயும் இருக்கிறது.'' “வேறொரு பெரிய முதலாளியைக் குறித்து அவர்கள் பேசிக் கொள்கின்றனர்.“ 135அவன் மாடு மேய்ப்பவனின் வாழ்க்கையைப் பற்றியதைப் பேசு கிறான். மாடு அணைத்துக் கொள்ளுதலை நீங்கள் கண்டிருந்தால் இது உங்களுக்கு தெளிவாகப் புலனாகும். வேறொரு பெரிய முதலாளியைக் குறித்து பேசிக் கொள்கின்றனர். அவருக்கு எப்பொழுதும் கிடங்கின் அளவுக்கு மிஞ்சி மாடுகள் இருப்பதில்லை. அவர் எப்பொழுதும் குறுகலான நேரடி வழியில் வந்த ஒரு பாவிக்குத் தம் கிடங்கில் இடமளிப்பார்.“ “அவர் உன்னை ஒருபோதும் கைவிடுவதில்லை என்று அவர்கள் சொல்கின்றனர். நம் ஒவ்வொரு செய்கையையும் பார்வையையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகையால் பாதுகாப்புக்கென அவருடைய குறிகள் (branded) | தரிக்கப்பட்டு அவர் மாட்டுப் பட்டியலின் புத்தகத்தில் நாம் பெயரெழுதப்படுவோமாக.“ “ஒரு நாளில் ஒரு பெரிய வளைத்துக் கொள்ளுதல் (Round up) உண்டாகும் என்று சொல்கின்றனர். அப்பொழுது மாடு மேய்ப்பவர்கள் (அதாவது தீர்க்கதரிசிகளும் ஞானதிருஷ்டிக்காரரும்) வேட்டை நாய்களைப் போல் அங்கு முதலாளியால் நிறுத்தப்பட்டு, தங்கள் குறியிட்ட மாடுகளை அறிந்து, அவர்களை ஒன்றாக வளைத்துக் கொள்வார்கள். 136மாடு வளைத்துக் கொள்ளுதலை நீங்கள் கண்டதுண்டா ? முதலாளி அங்கு நின்றிருப்பார். அப்பொழுது மாடு மேய்ப்பவர்கள் சிறிய குதிரை (Pony) யின் மேலேறி மாடுகளுக்கிடையே சவாரி செய்வர். தங்கள் குறியிட்ட மாடுகள் செல்வதை அவர்கள் கண்டவுடன் முதலாளிக்குச் சைகை செய்வார்கள். முதலாளியும் சரியென்று தலையசைப்பார். அப் பொழுது அந்த சிறிய குதிரை அவைகளுக்கிடையே சென்று முதலாளிக் குச் சொந்தமானவைகளை வேறு பிரித்து அப்படியே வளைத்துக் கொள் ளும். பாருங்கள்? ''ஒரு நாளில் ஒரு பெரிய வளைத்துக் கொள்ளுதல் (Round up) உண்டாகும் என்று சொல்கின்றனர். அப்பொழுது மாடு மேய்ப்வர்கள் (அதாவது தீர்க்கதரிசிகளும் ஞானதிருஷ்டிக்காரரும்) வேட்டை நாய்களைப் போல் அங்கு முதலாளியால் நிறுத்தப்பட்டு, தங்கள் குறியிட்ட மாடுகளை அறிந்து, அவர்களை ஒன்றாக வளைத்துக் கொள்வார்கள். 137அந்த பாட்டையெழுதினவன் சொல்லுகிறான். “நான் வழி தவறின கன்றுக் குட்டியைப் போலிருக்கிறேன். மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதனைப் போல் இருக்கிறேன். சவாரி செய்யும் மாடு மேய்ப்பவர்களின் முதலாளி வரும்போது நானும் மற்ற மாடுகளுடன் கொல்லப்படுவேன்“ குறியிடப்படாத மாடுகளெல்லாம் கொல்லப்பட்டு, சூப் தயார் செய்யப்படுவது வழக்கம். சவாரி செய்யும் மாடு மேய்ப்பவரின் முதலாளி யார்? அவர் தான் ஆட்டுக்குட்டியானவர். குறியிடப்பட்ட மாடுகளை நன்கறிந்த ஏழு செய்தியாளர்களை (Messengers) (மாடு மேய்ப்பவர்களை) அவர் நிறுத்தி யிருக்கிறார். பாருங்கள். ஹும்! 138அவர் வருவதை இங்கு கவனியுங்கள். அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியாய் மத்தியஸ்த ஊழியம் செய்த அவர், தம்மைப் புறக்கணித்த முழு உலகத்தையும் நியாயத்தீர்ப்பில் கொண்டுவர, சிங்காசனத்தை விட்டு சிங்கமாக, இராஜாவாக புறப்படுகிறார். நமது இனத்தான் மீட்பர். அப்பொழுது எல்லாவற்றிற்கும் இராஜாவாக இருப்பார். ஏன்? அவர் மீட்பின் உரிமைப் பத்திரத்தைப் பெற்று, அதை தம் கரத்தில் வைத் துள்ளார். அவரை நான் அறிந்திருப்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். பாருங்கள்? அப்பொழுது அவர் தம் உரிமைகளை - அதாவது சபையை, மண வாட்டியை பெற்றுக்கொள்கிறார். அதன்பின்பு அவர் என்ன செய்கிறார்? அவருடன் போட்டியிட்ட சாத்தானை அக்கினிக் கடலில் தள்ளுகிறார். அவனால் ஊக்குவிக்கப்பட்ட எல்லாரையும் அவருடைய மீட்பின் வார்த்தையைப் புறக்கணித்த ஏனையோரும் அவனுடன் அக்கினிக் கடலில் தள்ளப்படுகின்றனர். 139அவர் இப்பொழுது ராஜாவாக இருக்கிறார். இன்னும் சிங்காசனத் தின் மேல் கிருபை வீற்றிருக்கிறது என்பதை மறந்து போக வேண்டாம். அதை நீங்கள் நிராகரிக்காதீர்கள். பாருங்கள்? நீங்கள் யாரென்பதை சவாரி செய்யும் மாடு மேய்ப்போர் (செய்தியாளர்கள்-தமிழாக்கியோன்) அறிவார்கள். இரண்டாயிரம் வருட காலமாக சாத்தான் அவருக்குத் தொந்தரவு கொடுத்து, 'என் விருப்பப்படி ஜனங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் இன்னமும் என் ஆதிக்கத்தில் இருக்கின்றனர். அவர்கள் என்னுடையவர்கள், அவர்கள் உரிமையை பறிகொடுத்து விட்டனர்' என்றெல்லாம் கூறி வந்தான். ஆனால் அவரோ மீட்கும் இனத்தானாக நம்மை மீட்டுக் கொண் டார். அவர் இப்பொழுது பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். சாத்தான் 'அவர்களைக் கல்லறையில் வைப்பேன்' என்கிறான். 140ஆனால், அவர் சபையை நோக்கி, 'உங்களை கல்லறையிலிருந்து நான் “வெளியே கொண்டு வருவேன். பாருங்கள்?'' ஆனால் முதலில் நான் பரிந்து பேசும் ஊழியத்தை ஏற்கவேண்டும்' என்கிறார். அவர், அங்கே நித்தியத்தில் மத்தியஸ்த ஊழியம் செய்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அவர் பிதாவின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். இப்பொழுது, அவர் ராஜாவாக வந்து எல்லா ஜாதிகளையும் இருப்புக் கோலால் அரசாளுவார். அப்பொழுது நியாயத் தீர்ப்பு உண்டாகும். ஓ சகோதரனே! நமது மீட்கும் இனத்தான் எல்லா வற்றையும் தம் கரத்தில் வைத்திருக்கிறார். அது சரி. ஆம், ஐயா. 141அவர் என்ன செய்கிறார்? அவர் சாத்தானை நோக்கி, 'அவர்கள் இப்பொழுது என்னுடையவர்கள், அவர்களை நான் கல்லறையிலிருந்து உயிர்ப்பித்தேன்' என்கிறார். அவர் பொய்யரையும், வார்த்தையைப் புரட்டினவர்களையும் சாத்தானுடன் அக்கினிக்கடலில் தள்ளி நிர்மூல மாக்குவார். அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். அவர்களை அவர் அக் கினிக் கடலில் தள்ளுகிறார். ஓ.. என்னே ! 142உங்களுக்குத் தெரியுமா? நான் செய்தியை முடிக்கும் முன்னர் ஒரு விஷயத்தைக்கூற விரும்புகிறேன். அதன் பின்னர் நாம் துரிதப்படுவோம். நாம் 7-ம் வசனம்வரை விவரித்து விட்டோம். இப்பொழுது 8-ம் வசனம் முதல் 14-ம் வசனம் முடிய என்ன நிகழ்கின்றது என்பதைப் பார்க்கலாம். பரலோகத்திலும் பூலோகத்திலுள்ள யாவும்....... நீங்கள் இதைச் சற்று கவனியுங்கள். இப்பொழுது நான் அதை வாசிக்கட்டும். நான் புஸ்தகத்திலிருந்து 7-வது வசனத்தை வாசித்தால் நலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். 6-வது வசனத்தைக் கவனியுங்கள். அப்பொழுது இதோ அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன். (ஆங்கிலத்தில் இந்த வசனம் நான் கண்டேன் (I beheld) என்று ஆரம்பிக்கின்றது. ஆனால் சகோதரன் பிரான்ஹாம் நான் காண்கிறேன் (I behold) என்று கூறி அதன்பின் 'நான் கண்டேன்' (I Beheld) என்று வாசிக்கிறார் - தமிழாக்கியோன்.) அது ஏழு தலைகள்... அல்லது ஏழு கொம்புகளையும் (நான் அதைத்தான் கருதுகிறேன்.) ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; (நாம் அதைச் சற்றுமுன் விவரித்தோம். அந்தக் கண்கள் பூமி யெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். 143பாருங்கள். ஏழு சபை காலங்களின் ஏழு செய்தியாளர்கள் அக்கினி எரிந்து கொண்டிருக்கும்படிச் செய்தனர். பாருங்கள்? சரி. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். (ஆங்கிலத்தில் எடுத்தார் (took) என்றிருக்கிறது - தமிழாக்கியோன்) 144இப்பொழுது கவனியுங்கள். அவர் அதைச் செய்தபொழுது, என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். யூபிலியைக் குறித்து நாம் பேசுகிறோம்! இங்கேதான் சரியாக முத்திரைகளை உடைக்கும் சம்பவம் நேரிடுகின்றது. இதன்பின்பு நாம் 'அரை மணி நேர அமைதி யைக் குறித்துப் பார்ப்போம். இதைக் கவனியுங்கள். நாம் இப்பொழுது இதைத் துவங்கி, அடுத்த ஞாயிறு இரவன்று இங்கே முடிப்போம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் ஆயத்தமா? அப்படி யென்றால் 'ஆமென்' என்று சொல்லுங்கள். (சபையார் “ஆமென்” என்கின்றனர்- ஆசி) அவர் அதைச் செய்தபோது என்ன சம்பவித்தது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். முழு சிருஷ்டியுமே தவித்துக்கொண்டிருந்தது; என்ன செய்ய வேண்டுமென ஒருவரும் அறியாததால் யோவான் அழுதான். “இதோ ஆட்டுக்குட்டியானவர் வருகிறார், அவர் வந்துவிட்டார்!'' மனிதன் விழுந்ததால் அந்த புஸ்தகத்தை இழந்துவிட்டான். அது அதன் மூலச் சொந்தக்காரரின் கரங்களில் இருந்தது. இனிமேல் எந்த ஒரு மனிதனும் அதை எடுத்து, பூமியை மீட்க முடியாது. நான் கூறினபடி, மத குருவோ, போப்பாண்டவரோ, வேறுயாரும் அதைச் செய்யமுடியாது. மரியாளோ, இந்த பரிசுத்தவானோ அல்லது அந்த பரிசுத்தவானோ அல்ல, ”ஆட்டுக் குட்டியானவர் முன் வந்தார்'' ''அடிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர் முன்வந்து, சிங்காசனத்தில் வீற்றிருந்தவரின் வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை எடுத்துக் கொண்டார். (Took the Book)“ இனத்தான் மீட்பர் புஸ்தகம் எடுத்ததை பலிபீடத்திலுள்ள ஆத்து மாக்களும், தூதர்களும், மூப்பரும், அனைத்தும் கண்டனர். இருந்த போதிலும் அது எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியாகும். இன்று அவர் மத்தியஸ்தராய் இருக்கின்றார். ஆனால் அவர் இதைச் செய்ய வருகிறார். கவனியுங்கள். “அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுர மண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங் களாகிய தூப் வர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக் கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து'' 145அந்த பரிசுத்தவான்கள் பலிபீடத்தின் கீழுள்ளவர்கள். அவர்கள் மீட்புக்காகவும், உயிர்த்தெழுதலுக்காகவும் ஜெபித்தனர். பாருங்கள் இப்பொழுது மூப்பர்கள், 'எங்களுக்கு ஒரு பிரதிநிதி இப்பொழுது இருக்கிறார். நமக்கு பரலோகத்தில் ஒரு இனத்தான் உண்டு. அவர் தம்முடைய உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வந்து விட்டார்' என்று சொல்லி அந்த பரிசுத்தவான்களின் ஜெபங்களை ஆட்டுக்குட்டி யானவருக்கு முன்பாக ஊற்றுகின்றனர். தேவரீர் புஸ்தகத்தை எடுக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக் கென்று (கவனியுங்கள்) உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். 146அவர்கள் அங்கேயே இருக்க விரும்பினர். ஆனால் இங்கே அவர் கள் மறுபடியும் பூமிக்குச் சென்று ராஜாக்களும் ஆசாரியர்களுமா கின்றனர். தேவனுக்கு மகிமை! எனக்கு அன்னிய பாஷை பேச வேண்டு மென்கிற உணர்வு உண்டாகின்றது. பாருங்கள். கவனியுங்கள், ஆம் அவரைத் துதிப்பதற்கு என்னிடம் போதிய பாஷை இல்லையென்று எனக்குத் தோன்றுகிறது. நான் அறியாத பாஷை அதற்கு அவசியம். கவனியுங்கள், ''நான் பார்த்தபோது...'' இதைக் கவனியுங்கள். “பின்னும் நான் பார்த்தபோது... அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்” அங்கு எப்படிப்பட்ட யூபிலி உண்டாயிருக்கிறது என்பதைக் கவனிக்கவும். ஆட்டுக்குட்டியானவர் வந்து அந்த மீட்பின் புஸ்தகத்தை எடுத்தவுடன், பலிபீடத்தின் கீழேயுள்ள ஆத்துமாக்கள் நாம் அதைப் பெற்றுக் கொள்வோம் என்று மகா சத்தமிட்டனர். மூப்பர்கள் தாழ விழுந்து வணங்கினர். அவர்கள் பரிசுத்தவான்களின் ஜெபங்களை அவருக்கு முன் ஊற்றினர். என்ன? நம் இனத்தான் ஒருவர் நம் பிரதிநிதியாக இருக்கிறார். அவர்கள் முகங்குப்புற விழுந்து, ''நீர் அடிக்கப்பட்டதனால் பாத்திரவானாயிருக்கிறீர்“ என்று சொல்லி ஒரு பாட்டைப் பாடுகின்றனர். தூதர்கள் என்ன செய்கின்றனர் என்பதனை இப்பொழுது கவனியுங்கள். “பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன் களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர் களுடைய சத்தத்தைக் கேட்டேன். அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவு மிருந்தது” (வ்யூ! மேலும் கவனியுங்கள்). ''அவர்களும் மகா சத்தமிட்டு : அடிக்கப்பட்ட ஆட் டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமை யையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கெள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்“ 147ஆட்டுக்குட்டியானவர் மத்தியஸ்த ஸ்தலத்தை விட்டு தமக்குச் சொந்தமானவர்களைப் பெற்றுக்கொள்ள முன் நடக்கும்போது, பரலோகத்தில் என்ன குதூகலம் பாருங்கள்! அடுத்ததாக. அந்த குதூகாலம் யோவானையும் பற்றிக்கொண்டது என்பதை அறிவீர்களா? முத்திரைகள் உடைக்கப்பட்டபோது, அவன் பெயர் அப்புஸ்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை அவன் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பான். அவன் என்ன சொல்லுகிறான் என்பதைக் கவனியுங்கள். “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழு மிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ள வைகளும் அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்கா சனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டி யானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்ல மையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன்” (ஆங்கிலத்தில், “சொல்ல நான் கேட்டேன் (heard I saying)'' என்றுள்ளது. இங்கு சகோ. பிரான்ஹாம், சொல்ல நானே, நான் கேட்டேன் (heard me,I saying) என்றுவாசிக்கிறார்தமிழாக்கியோன்). ஆமென்! ஆமென்! ஆமென்! ஓ! “அதற்கு நான்கு ஜீவன்களும் : ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண் டார்கள்” 148ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வரும்போது பரலோகத்தில் என்ன குதூகலமான சமயம்! பாருங்கள். அந்த புஸ்தகத்திலுள்ள இரகசியம் என்னவென்பது பரலோகத்திலும் முத்தரிக்கப்பட்டுள்ளது. 'என் பெயர் அந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதா?' எனக்குத் தெரியாது; என் பெயர் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவ்விதம் இருந்தால், அது உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே அதில் எழுதப் பட்டிருக்க வேண்டும். ஆனால் முதல் காரியம் என்னவெனில் உலகத்தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரே அந்த மீட்பிற்கு பிரதிநிதித்துவம் என்பதாகும். அவர் புஸ்தகத்தை எடுத்து (மகிமை!), முத்தி ரைகளை உடைத்து, புஸ்தகத்தைத் திறந்து, அதில் அடங்கியுள்ள இரகசியங்களை தமது ஜனங்களுக்கு வெளிப்படுத்த எண்ணி, அவருடைய ஏழாம் தூதனிடம் பூமிக்கு அதை அனுப்புகிறார். (சபையார் மிகவுமாய் களிகூர்கின்றனர்-ஆசி) அதுவேதான். ஓ. என்னே! அப்பொழுது என்ன சம்பவித்தது? பரலோகத்தில் மிகுந்த சத்தமும், ஆரவாரமும், அல்லேலூ யாவென்ற கரகோஷமும், அபிஷேகம், வல்லமை, மகிமை யாவும் உம்முடையதே என்னும் சத்தமும் எழும்புகின்றது. (சபையார் தொடர்ந்து மிகவும் களிகூர்கின்றனர்) நமது சகோதரனும், வயோதிபனான யோவானும் அங்கு நின்று கொண்டு சத்தமிட்டான். அவன் “வானத்திலுள்ள சிருஷ்டிகள் யாவும், பூமியிலுள்ள அனைத்தும் சமுத்திரத்திலுள்ள யாவும் 'ஆமென் ஆமென். சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு ஸ்தோத்திரமும், மகிமையும், மகத்துவமும், வல்லமையும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக' என்று மகா சத்தமிட்டதைக் கேட்டான். முத்திரைகள் உடைக்கப்படும்போது பரலோகத்தில் என்ன சந்தோஷம்! யோவான் காலமாகிய திரைக்குப் பின்னால் இருப்பவைகளைக் கண்டு, 'அதோ யோவான் இருக்கிறான்' என்று சொல்லி தன்னையே அங்கு கண்டிருப்பான். ஓ, ஓ! “பரலோகத்திலுள்ள ஒவ்வொன்றும்'' என்று கூறின அவன் மகிழ்ச்சி மிகுதியினால் மிகுந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்திருப்பான் அல்லவா? ''பரலோகத்திலுள்ளவைகள் யாவும், பூமியின் கீழுள்ள யாவும், பூமியிலுள்ளவைகள் யாவும், பூமியின் கீழுள்ள யாவும், சர்வ சிருஷ்டியும், ஆமென், ஸ்தோத்திரமும், மகிமையும், ஞானமும், வல்ல மையும், மகத்துவமும், ஐசுவரியமும் அவருக்கே உரியது' என்று நான் கூறுவதைக் கேட்டன (heard me saying) என்று யோவான் கூறுகிறான். ஆமென். 149ஏன்? ஆட்டுக்குட்டியானவரும் நமது இனத்தான் மீட்பருமானவர் தாம் மத்தியஸ்த ஊழியம் செய்துக் கொண்டிருந்த சிங்காசனத்தை விட்டு தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முன்னே வந்தார் என்ற வெளிப் பாட்டை யோவான் பெற்றுக்கொண்டதால் அவ்விதம் சத்தமிட்டு ஆர்ப்பரித்தான். ஓ! “விரைவில் ஆட்டுக்குட்டியானவர் மணவாட்டியைக் கொண்டு செல்வார் அவள் எப்பொழுதும் தமது பக்கத்தில் இருக்க வானத்தின் சேனைகள் அனைத்தும் அங்கு கூடியிருப்பர் ஓ, அது மகத்தான காட்சியாயிருக்கும். எல்லா பரிசுத்தவான்களும் கரையற்ற வெண்மையுடன் இருப்பர் நாம் இயேசுவுடன் நித்தியமாக அரசாளுவோம். ஓ, 'வந்து புசியுங்கள்' (வார்த்தையை) என்று எஜமானன் அழைக்கிறார். 150ஓ, இதை விவரிக்க எனக்கு வார்த்தைகள் போதா. “வந்து புசியுங்கள், வந்து புசியுங்கள். நீங்கள் இயேசுவின் மேசையில் எந்நேரமும் வந்து விருந்துண்ணலாம். (இப்பொழுது! அந்த மேசையை விட்டுச் சென்றால் உங்களுக்கு ஆகாரம் கிடைக்காது) திரளான ஜனங்களை போஷித்தவர் தண்ணீ ரை திராட்சரசமாக மாற்றினவர்...'' “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' என்று அவர் வாக்களித்துள்ளார். ஓ, என்னே! இந்த கடைசி நாட்களில் இவைகளை அளிப்பதாக அவர் வாக்கு கொடுத்திருக் கிறார். இந்த இரகசியங்கள் வெளிப்படும் தருவாயில் இருக்கும் உங் களை, 'வந்து புசியுங்கள்' என்று அவர் அழைக்கிறார். ஓ, என் சகோதரனே, அதை இழந்து போகவேண்டாம். இப்பொழுது சற்று நேரம் நாம் தலை வணங்கி ஜெபிப்போம். 151நாளை இரவு, தேவனுடைய கிருபையால், முதலாம் முத்திரையின் கீழுள்ள இரகசியங்களைப் பார்ப்போம். தேவன் அந்த முத்திரையை உடைத்து, உலகத் தோற்றத்துக்கு முன்னால் அதில் மறைந்திருக்கும் இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துவார். அதற்கு முன்பு, பாவியாகிய நண்பனே, வெதுவெதுப்பான சபை யின் அங்கத்தினனே, நீ ஒரு சபையின் அங்கத்தினனாக மாத்திரம் இருக்கிறாயா அல்லது இல்லையா? நீ சபையின் அங்கத்தினனாய் மாத்திரம் இருந்தால், அது இருந்தும் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான். உனக்கு மறுபிறப்பு அவசியம். நீ இயேசுவின் இரத்தத்தினிடம் வரவேண்டும். உன் பாவங்களைக் கழுவி, அதை நினையாமற் போகச் செய்யும் ஒருவ ரிடம் நீ வரவேண்டும். ஆட்டுக்குட்டியானவரை ஆகாயத்தில் சந்திக்க நீ இன்னமும் ஆயத்தமாகவில்லையென்றால், சர்வ வல்லமையுள்ள தேவனால் அக்கினி ஸ்தம்பமாகிய ஒரு தூதனைக்கொண்டு எனக்களிக்கப்பட்ட வல்லமை யின் ஊழியத்தின்படி, ஒரு தூதன், அக்கினி ஸ்தம்பம் இவர்கள் பங்கெடுக்கும் இந்த ஊழியத்தில், இயேசுவின் நாமத்தினால் உனக்கு நான் கட்டளையிடுகிறதாவது ஒரு விடுதியின் அங்கத்தினனாக, இந்த பூமியில் காணப்படும் ஸ்தாபனங்களின் அங்கத்தினனாக மாத்திரம் இருந்துகொண்டு, அவரைச் சந்திக்க முயல வேண்டாம். 152எனக்குத் தெரிந்தவரை அவர் இப்பொழுதும் சிங்காசனத்தில் வீற் றிருந்து பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார், இத்தருணத்தை நழுவ விடாமல் இப்பொழுதே அவரண்டை வா. நீ அவரிடத்தில் வரவேண்டு மென்று விரும்பினாலும் உன்னால் வரமுடியாமல் போகும் நாள் ஒன்று வரும். அப்பொழுது பரிந்து பேசுகிறவர் உனக்கு இருக்கமாட்டார். தேவனுடைய இரகசியங்கள் வெளிப்பட்டு தேவ ஆவியினால் ஊர்ஜிதப் படும் இக்காலமாகிய ஏழாம் சபையின் காலத்தை நாம் அறிந்து கொள்வோமானால், இன்னும் அதிக சமயமில்லை என்பதை நாமறியலாம். ஆகையால் பாவியாகிய நண்பனே, இப்பொழுதே அவரண்டைவா. கர்த்தராகிய இயேசுவே, காலம் கடந்துகொண்டே போகின்றது. நாங்கள் நினைப்பதைக் காட்டிலும் இப்பொழுது காலதாமதமாயிருக்க லாம். இந்த சமயம் சமீபித்து வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடை கிறோம். விசுவாசிக்கு இது, இந்த உலகம் இதுவரை காணாத மகத்தான சமயமாயிருக்கும். ஆனால் உம்மைப் புறக்கணித்தவனுக்கு இது மிகவும் விசனமான ஒரு சமயம். வரப்போகும் உபத்திரவங்களையும், வியாகுலங் களையும் விவரிப்பதற்கு வார்த்தைகள் போதா. அவ்வாறே விசுவாசிக்கு அளிக்கப்படவிருக்கும் ஆசீர்வாதங்களை விவரிப்பதற்கும் வார்த்தைகள் போதா. பிதாவே, இங்குள்ளவர்களில் சிலர் நம்பிக்கையற்றவர்களாய் இருக்கக்கூடும். அவர்கள் புத்திக்கூர்மையுள்ள மானிடர். இரத்தம் இப் பொழுதும் கிருபாசனத்தின் மேல் இருக்குமாயின், ஆட்டுக்குட்டியான வர் இன்றிரவு சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு அவர்கள் இருதயங் களுக்குள் வந்து, அவர்கள் இழந்துபோனவர்கள் என்பதை வெளிப் படுத்தி, தம் இரத்தம் தோய்ந்த கரங்களை நீட்டி, 'சமயமுள்ளபொழுதே வா' என்று அவர்களை வரவேற்கட்டும். 153இன்றைய செய்தியை ஜெபத்துடன் உம் கரத்தில் சமர்ப்பிக் கிறேன். பிதாவே, நீர் என்ன வேண்டுமானாலும் செய்யும். இசுேவின் நாமத்தில் ஆமென். நாம் தலைகுனிந்தவாறே. இந்த தேவையை நீங்கள் பூர்த்தி செய்யாமலிருந்தால், உங்கள் ஸ்தாபனத்தை மாத்திரம் நீங்கள் நம்பியிருந்தால், அவைகள் உங்களை மீட்க முடியாது. மரித்துப் போன பரிசுத்தவான்கள் பரிந்து பேசுதலில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பீர்களானால், நீங்கள் இன்னமும் இழக்கப்பட்டவர்கள். உங்கள் நற்கிரியைகளின்பேரில் சார்ந்திருந்தால், நீங்கள் இன்னமும் இழக்கப்பட்டவர்களே. நீங்கள் உங்கள் தாயாரின் ஜெபத்தின் பேரிலும் அல்லது உங்கள் தாய் தந்தையரின் நீதியின் பேரிலும் நம்பிக்கைக் கொண்டிருந்தால், நீங்கள் இன்னமும் இழக்கப் பட்டவர்கள். அன்னிய பாஷை பேசுதல், குதித்து நடனமாடுதல் போன்ற உணர்ச்சிகளில் மாத்திரம் நம்பிக்கைக் கொண்டு, தனிப்பட்ட விதத்தில் ஆட்டுக்குட்டியானவரை நீங்கள் அறியாமலிருந்தால், இன்றிரவே தேவனிடத்தில் அந்தக் காரியத்தைச் சரிபடுத்திக்கொள்ள தேவனுடைய முன்னிலையில் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். 154இருதயத்தின் ஆழத்திலிருந்து நீங்கள் ஜெபம் செய்து, எளிமை யுள்ளவர்களாயிருங்கள்; ஏனெனில் தேவன் எளிமையில் மறைந்திருக் கிறார். “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினம் சபையில் சேர்த் துக் கொண்டு வந்தார்'' என்ற வேதவாக்கியம் நினைவிருக்கிறதா? நாங்கள் இப்பொழுது உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். அப்பொழுது நீங்கள் கர்த்தாவே நான் ஆம் என்று கூறுகின்ற நித்தியத்திற்கேற்ற தீர்மானம் செய்வீர்கள் என்று நம்புகிறேன். தீர்மானம் என்பது ஒரு கல்லைப் போன்றது. ஒரு கொத்தன் அந்தக் கல்லை வடிவு படுத்தி கட்டிடத்தில் பொருத்தாவிட்டால், அதனால் என்ன பயன்? ஆகையால் பரிசுத்த ஆவியானவர் தாமே, அவ்வாறே நீங்கள் இருக்க வேண்டிய நிலையையடையும்வரை உங்களை வடிவுபடுத்தி சீர்படுத்து வாராக! நீங்கள் அனலற்ற ஸ்தாபனத்தின் அங்கத்தினராகவோ, அல்லது பாவியாகவோ, கிறிஸ்துவையற்றவர்களாய், பரிசுத்த ஆவி இல்லாதவர்களாய் இருப்பீர்களானால், தேவன் தாமே இன்றிரவு உங்களுக்கு சமாதானத்தை அருளட்டும். இப்பொழுதும் கர்த்தாவே, உம் சமூகத்தில் எங்ஙனம் வரவேண்டு மென்று வார்த்தையின் மூலம் நான் அறிந்த அளவுக்கு, உம்முடைய சமூகத்தில், உம்மிடத்தில் இவர்களை சமர்ப்பித்து நான் வார்த்தையுடன் இவர்களுடன் கூட வருகிறேன். வார்த்தையானது இன்றிரவு அவர்களுடைய இருதயங்களில் குடிகொண்டிருக்கிறது என்று நான் நம்பு கிறேன். 155பரிசுத்த ஆவியானவரின் இனிமையான பிரசன்னம் தங்கள் இருதயங்களில் உண்டு என்னும் நிச்சயமில்லாதவர்கள் யாராவது இங்கே இருப்பார்களானால் - அவர்களது மூர்க்க சுபாவம், அலட்சியம், தன்னயம் போன்றவை, பரிசுத்த ஆவி பெறாமல் அவர்களைத் தடுத்து நிறுத்தி யிருக்குமானால் - ஸ்தாபனத்தின் கொள்கைகள் அல்லது உணர்ச்சிகள் தேவனுடைய இனிமையான ஐக்கியத்தினின்று அவர்களைப் பிரித்திருக்குமானால், அவையெல்லாம் இப்பொழுது அகற்றப்பட வேண்டுமாய் கெஞ்சுகிறேன். ஆட்டுக்குட்டியான இரத்தம் தோய்ந்த அந்த இனத்தான், சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு அவருடையவர்களைப் பெற்றுக்கொள்ள தேவனுடைய சிங்காசனத்தின் தெய்வத் திறனுடைய வெளிச்சத்தினூடாக நடைபாதையில் நடந்து வருகிறார். அத்தகைய ஆட்டுக்குட்டியானவரை அவர்கள் இன்றிரவு ஏற்றுக்கொள்ள உதவி புரியும். ஒவ்வொரு தீர்மானமும் பயபக்தியாக செய்யப்படட்டும். அவர்கள் தங்களை உமக்கு மாத்திரம் சமர்ப்பிக்கட்டும். நீர் மாத்திரமே அவர்களை வடிவுபடுத்தி தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக மாற்ற முடியும். 156நான் ஏவப்பட்டவிதமாய் இந்த பயபக்தியான ஜெபத்தை ஏறெடுக்கிறேன். அவர் தம்மைத்தாமே உங்களுக்கு நீரூபித்தார் என்று, பயபக்தியுடன் நான் தேவனுக்கு முன் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். நீங்கள் மறுபடியும் பிறந்தாலொழிய கிறிஸ்தவர்களாக முடியாது. ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள்ளுவதல்ல... செய்தி உண்மையென்று நீங்கள் பரிபூரணமாக விசுவாசித்து, தேவனுடைய கிருபை மாத்திரமே உங்களை இரட்சிக்க முடியுமென்று மனப்பூர்வமாக விசுவாசித்து, அவர் உங்கள் இருதயங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை நம்பி, உங்க ளுடைய இப்பொழுதுள்ள நிலையிலிருந்து நீங்கள் எவ்விதம் இருக்க வேண்டுமென்பதற்கு வார்த்தை உங்களை செதுக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருந்தால், அதற்கு சாட்சியாக தயவுசெய்து எழுந்து நில்லுங்கள். அவை எல்லாவற்றையும் பூர்த்தி செய்ய விரும்பும் அந்த நபர் இங்கிருப்பாரானால் அவர் எழுந்து நிற்கட்டும். பரம பிதாவே, உம்முடைய வார்த்தையை வேதத்தினின்று எடுத் துரைப்பதைத்தவிர வேறொன்றையும் செய்ய நானறியேன். இருக்க வேண்டிய நிலையில் இல்லையென்று உணர்ந்தவர்கள் இப்பொழுது நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் எடுக்கப்படுதலுக்கென்று ஆயத்தமாக இல்லை. முதலாம் முத்திரை எங்களுக்கு திறக்கப்படும் முன்புகூட அது நிகழலாம். பிதாவே, அவர்களுக்காக நான் ஜெபத்தை ஏறெடுக்கிறேன் உமது தாசனாகிய நான் இந்த ஜெபத்தை, அவர்கள் ஜெபிக்கும்போதே, பெரிய மத்தியஸ்தராகிய கிறிஸ்துவிடம் ஏறெடுக்கிறேன். அவர்களுடன் என்னுடைய ஜெபத்தையும், இரத்தம் தோய்ந்த பலியாகிய இயேசுகிறிஸ்து வீற்றிருக்கும் தந்தம் நிறம் கொண்ட தேவனுடைய சிங்காசனத்திற்கு ஏறெடுக்கிறேன். அவர் எந்த சமயத்திலும் சிங்காசனத்தை விட்டு தம்முடைய உரிமை இப்பொழுது எழுந்து நிற்கும் ஜனங்கள், தங்கள் இருதயங்களில் பாவ அறிக்கை செய்துக் கொண்டு, பரிசுத்த ஆவியானவர் அவர்களை உருவாக்கி, வடிவுபடுத்தி, தேவனுடைய வீட்டில் ஜீவனுள்ளகற்களாக அவர்களைப் பொருத்த விருப்பங்கொள்கின்றனர். ஆண்டவரே, அவர் களுக்கு அதை அருள் புரியும். பிதாவே, அவர்களை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். 157“மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன்” என்று நீர் உரைத்திருக்கிறீர். நீர் எல்லார் முன்னிலையிலும் இன்றிரவு சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது இவர்கள் எழுந்து நின்று உம்மை அறிக்கையிட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங் கள் இருதயங்களின் ஆழத்திலிருந்து அறிக்கை செய்வார்களானால், தேவனுடைய வார்த்தை சரியாய் இருப்பதைப்போல், நிச்சயமாக நீர் அவர்களுக்காகப் பரிந்து பேசி, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் உண்டாயிருக்கும் கிருபையினாலும் இரக்கத்தினாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்வீர். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத் தில் உம்முடையவர்களாவார்கள். ஆமென். நின்று கொண்டிருப்பவர்களில் யாருக்காகவது பாவமும், குற்றமும் அகன்று போயின என்னும் உணர்வு உண்டாயிருந்தால், உங்கள் கைகளை உயர்த்துங்கள். அவர்கள் அருகில் உள்ளவர்கள் எழுந்து, ஒருவரோடு ஒருவர் கை குலுக்கி, 'சகோதரனே, உனக்காக ஜெபிக்கிறேன்' என்றும் 'சகோதரியே, உனக்காக நான் ஜெபிக்கிறேன்; கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக' என்றும் சொல்லுங்கள். மற்றவையெல்லாம் சர்வ வல்லமையுள்ளவரின் கரங்களில் உள்ளன. “நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். நீங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்குள் வருவதற்காக, என்னால் முடிந்த சகல உதவிகளையும் நான் உமக்குச் செய்வேன்'' என்று சொல்லுங்கள். 'ஓ, இன்றே அழைக்கிறார் ஓ, இயேசு அழைக்கிறார் உன்னை தயவாய் இன்று அழைக்கிறார்'யானவர்களைப் பெற்றுக்கொள்ள புறப்படக் கூடும். அதன் பிறகு கிருபை இராது. அப்பொழுது அது நியாயாசனமாகும். 158அவரில் நீங்கள் அன்பு கூருகின்றீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்- ஆசி) அவர் அதிசயமானவரல்லவா? (ஆமென்) ஓ, இது இல்லாமல் நான் என்ன செய்யமுடியும்? 'மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'. ஓ, ஆண்டவரே, உம் வார்த்தையினால் என்னைப் போஷித்தருளும். ''சபை கூடிவருதலை அவிசுவாசிகள் விட்டு விடுகிறதுபோல நாமும் விட்டு விடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய் பார்க்கிறீர்களோ அவ்வளவாய் புத்தி சொல்லவேண்டும்“ கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு முத்திரைகள் உடைக் கப்படும்போது, தேவனுடைய வார்த்தை ஜனங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டுமென்று, தேவ கிருபையை முன்னிட்டு முழு முயற்சியுடன் நான் அவரிடம் மன்றாடுவேன். நான் உங்களை மறுபடியும் சந்திக்கும்வரை தேவன் உங்களோடு கூட இருப்பாராக! 159இப்பொழுது ஆராதனையை நம் அருமை சகோதரரும், போதகருமான சகோ. நெவிலிடம் சமர்ப்பிக்கிறேன். எத்தனை பேர் சகோ. நெவிலை நேசிக்கிறீர்கள்? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்- ஆசி) நாமெல் லாரும் அவரை நேசிக்கிறோம். சகோ. நெவில், முன்னால் வாரும். சகோதரன். நெவில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!